ஒரு ஏழை பணக்காரன் ஆகி விட்டால் தன் உறவுகளை மறந்து விடுகிறான்...
ஒரு பணக்காரன் ஏழை ஆகிவிட்டால் உறவுகள் அவனை மறந்து விடுகின்றனர்...
இது தான் வாழ்க்கை.!
வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொள்ள எங்கும் தேடிச் செல்ல வேண்டாம்...
நம் அருகாமையில் இருப்பவர்களே நமக்கான வாழ்க்கைப் பாடத்தை
கற்றுக்கொடுப்பார்கள்...
ஆனால்,வலி தான் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.!!
நம்மால் பயன் கிடைக்கும் வரை நாம் நல்லவன்.
நம்மால் எந்த வித பயனும் இல்லை என்றால் நாம் கெட்டவன்.
இது தான் மனித குணமாகும்.!!!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*செய்தி துளிகள்*
🍒🍒பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்ரல் 13-ல் துவக்கி, 22ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
👉எட்டு நாட்களுக்குள் விடைத்தாள்களை திருத்தி முடிக்க தேர்வு துறை உத்தரவு
👉10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் 26ம் தேதி முதல் தொடங்குகிறது.
🍒🍒ஆசிரியை உமா மகேஸ்வரி சஸ்பெண்ட் - அரசுக்கு எதிராக 34 கருத்துக்கள் தெரிவித்ததாக, அரசு செயலருக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்
🍒🍒CTET 2024 தேர்வு அறிவிப்பு வெளியீடு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 2
🍒🍒8 நாட்களில் அரசுப் பள்ளிகளில் 80,076 பேர் சேர்ப்பு. மார்ச் 1ம் தேதி முதல் தற்போது வரை அரசுப் பள்ளிகளில் 80,076 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411 மாணவ, மாணவிகள், அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
🍒🍒அரசு உதவி பெறும் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி உணவு வழங்குவதற்கான இத்திட்டம் விரிவு படுத்துதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு
🍒🍒புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திற்கு இன்று மார்ச் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
🍒🍒பள்ளிக்கல்வித்துறையின் உதவி இயக்குநர் அவர்கள் அலைபேசி வழியாகத் தொடர்பு கொண்டு மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் உரையாடல்
🍒🍒கோடை காலத்தை ஒட்டி, தெலங்கானாவில் வரும் மார்ச் 15 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை பள்ளிகள் அரைநாள் மட்டுமே செயல்படும் என அம்மாநில பள்ளி கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
🍒🍒மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக் கோரிய வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
🍒🍒 01.01.2024 நிலவரப்படி தகுதியுள்ள ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு 20% இட ஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் கலையாசிரியராகப் பணிநியமனம் வழங்குதல் - ஒதுக்கீட்டு ஆணை வழங்குதல் சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் வெளியீடு.
🍒🍒அரசு பணி, பதவி உயர்வில் திறந்தநிலை பல்கலை. பட்டங்கள் செல்லாது தேசிய அளவில் உருவெடுத்துள்ள பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: பல்கலைக்கழக மானிய குழுவுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்
🍒🍒அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் - பள்ளிகளில் அனைத்து வசதிகளும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
🍒🍒அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஊதிய கொடுப்பாணை வெளியீடு.
🍒🍒6-9ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மாதத்திற்கான மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்துதல் - SPD & DSE இணைச் செயல்முறைகள் வெளியீடு.
🍒🍒மாணவர் சேர்க்கைக்கு வழங்கப்பட்டுள்ள ரூ.2000ஐ பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.
🍒🍒தமிழ்நாட்டில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
🍒🍒பிரதமர் வீடு திட்டத்தில் இல்லம் கிடைக்கப்பெறாத மதுரை சின்னப்பிள்ளைக்கு உடனடியாக வீடு வழங்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
🍒🍒சந்திரயான் 4 திட்டம்; ஒரே நேரத்தில் 2 செயற்கைக்கோள்களை ஏவ இஸ்ரோ திட்டம்
🍒🍒பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு - உணவுப்பொருட்கள் விலையை ஏற்ற ஹோட்டல் நிறுவனங்கள் முடிவு
🍒🍒மைசூரு - சென்னை இடையே மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை - இந்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
🍒🍒உணவுப் பொருட்களின் விலை உயராமல் இருக்க உரிய நடவடிக்கை - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு
🍒🍒நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி - பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தகவல்
🍒🍒பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆசிப் அலி சர்தாரி தேர்வு - 2வது முறையாக பதவியேற்கிறார்
🍒🍒இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி - இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது
🍒🍒பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் குஜராத் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
🍒🍒ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி
🍒🍒இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் வெற்றி - தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு
🍒🍒மக்களவைத் தேர்தலில் விருப்ப மனு அளித்தோருக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதல் நேர்காணல் நடைபெற்று வருகிறது.
விருப்ப மனு அளித்தவர்கள் தங்களின் ஆதரவாளர்கள், பரிந்துரையாளர்களை அழைத்து வரக்கூடாது
-திமுக
🍒🍒இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இந்திய ஒற்றுமை நீதி பயண நிறைவு விழாவில் பங்கேற்கிறார் விசிக தலைவர் திருமாவளவன்
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி பயணம் மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் வரும் 17ம் தேதி நிறைவு பெறுகிறது.
🍒🍒மக்களவை தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட இருந்த நிலையில், திடீரென ராஜினாமா செய்தது குறித்து தேர்தல் ஆணையர் அருண் கோயல் மற்றும் ஒன்றிய அரசு நாட்டு மக்களுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை
🍒🍒மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி:
மஹுவா மொய்த்ரா, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் ஆகியோருக்கு வாய்ப்பு
🍒🍒விஜய்-ன் தமிழக வெற்றி கழகத்தில் தற்போது வரை 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு
த.வெ.க புதிய உறுப்பினர் சேர்க்கை கடந்த 8ம் தேதி செயலி மூலம் தொடங்கியது
3 நாட்களில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்தனர்
🍒🍒இந்தியாவில் நடைபெற்ற 71 வது உலக அழகி போட்டியில் மகுடம் சூடினார் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா (25).
🍒🍒40 தொகுதிகளிலும் ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என உணர்ந்து பணியாற்றுங்கள்:
- திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
40 தொகுதிகளிலும் ‘வேட்பாளர் மு.க.ஸ்டாலின்' என்பதை மனதில் வைத்து அனைவரும் பணியாற்ற வேண்டும். அனைத்துத் தொகுதியிலும் நானே போட்டியிடுகிறேன் என்பதை உள்ளத்தில் தாங்கி திமுக தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்.
🍒🍒நடப்பாண்டில் 3,000 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் வெளியீடு
3,000 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் வெளியீடு!"
2024-25 பட்ஜெட்டில் அறிவித்தபடி, 3,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் வெளியீடு. புதிதாக வாங்கப்படும் பேருந்துகள் அடுத்த நிதியாண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
1,190 மாநகரப் பேருந்துகள், 672 மாநகர தாழ்தள பேருந்துகள், 1,138 புறநகர் பேருந்துகள் என்று மொத்தம் 3000 பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.
🍒🍒தேமுதிகவில் ஐ.டி. விங் உருவாக்கம் - நிர்வாகிகளை நியமித்து பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு.
🍒🍒ஹரியானாவை சேர்ந்த பாஜக எம்.பி. பிரிஜேந்திர சிங் பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்.கட்சியில் இணைந்தார்.
🍒🍒பழங்களின் மருத்துவ பயன்கள்
சப்போட்டா
தினம் 2 சப்போட்டா சாப்பிட்டால், குடல் புற்றுநோய் ஏற்படாது.
இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்தும்.
சப்போட்டா ஜூஸ்ஸில், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி பிரச்சினை குணமாகும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது.
No comments:
Post a Comment