Tuesday, March 26, 2024

செய்தித்துளிகள் - 26/03/2024 (செவ்வாய்க்கிழமை)

 


🌅🌅இன்று முதல் 10ம் வகுப்பு அரசு பொது தேர்வு தொடங்குகிறது.

👉தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்களும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பாக நெஞ்சார்ந்த  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

🌅🌅10-ம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதவுள்ள எனதருமை மாணவச் செல்வங்களே... All the best.: முதல்வர் ஸ்டாலின்

நீங்கள் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொள்ளத்தான் வினாத்தாளைப் படித்துப் பார்க்க முதலில் 10 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.

அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனை மற்றுமொரு தேர்வாகக் கருதி நம்பிக்கையோடு எழுதி வெற்றி பெறுங்கள்.

பெற்றோர்களும் உங்கள் பிள்ளைகள் உரிய நேரத்தில் தேர்வு மையத்துக்குச் சென்றிடுவதை உறுதிசெய்யுங்கள்.

இன்று10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

🌅🌅டெல்லி நேரு பல்கலைக்கழக தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.

🌅🌅அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு.

🌅🌅அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் நீட் தேர்வு பயிற்சி தொடக்கம்.

🌅🌅பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணிதம், வணிகவியல் தேர்வுகள் எளிது : ‘சென்டம்’ அதிகரிக்க வாய்ப்பு

🌅🌅விபத்து உள்ளிட்ட காரணங்களால் தேர்வு நேரத்தில் சலுகை கோரும் மாணவர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்களே அனுமதி வழங்கலாம் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.

🌅🌅ஜனவரி பருவ மாணவர் சேர்க்கை 31 வரை நீட்டிப்பு : இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு.

🌅🌅மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பள்ளிகள் மட்டுமின்றி கல்லூரிகளுக்கும் உத்தரப்பிரதேசத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

🌅🌅Lok Shaba Election 2024 - Remuneration - மக்களவைத் தேர்தல் 2024 - வாக்குப்பதிவில் ஈடுபடும் அலுவலர்களுக்கான உழைப்பூதிய விவரம் வெளியீடு.

🌅🌅ஆசிரியர் பயிற்சிக்கான தொடக்க கல்வி பட்டயத் தேர்வு: தனித்தேர்வர்கள் ஏப்ரல் 1 முதல் விண்ணப்பிக்கலாம்

🌅🌅ஆசிரியையிடம் இணைய வழியில் ரூ.3.55 கோடி மோசடி: 6 குற்றவாளிகளை கைது செய்த ஐபிஎஸ் தமிழருக்கு பாராட்டு.

🌅🌅இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு 24 லட்சம் பேர் விண்ணப்பம்: நாடு முழுவதும் மே 5-ம் தேதி தேர்வு                                     🌅🌅திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல்: கவனமாக செயல்பட யுஜிசி எச்சரிக்கை

🌅🌅உதவிப் பேராசிரியர் பணிக்கான ‘செட்' தேர்வு கட்டணத்தை குறைக்க பட்டதாரிகள் வலியுறுத்தல்

🌅🌅ஜூனியர் உயர்நிலைப் பள்ளி உதவி ஆசிரியர்களுக்கு TET கட்டாயமில்லை – உயர்நீதிமன்றம் அதிரடி

🌅🌅புதிய பென்சன் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு

(1 முதல் அமலாகும் புதிய விதி)

🌅🌅பாஜக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் வரை எங்களுக்கு தூக்கம் கிடையாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்

🌅🌅தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக இடையேதான் போட்டி என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

🌅🌅கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என I.N.D.I.A கூட்டணி அறிவித்துள்ளது.

🌅🌅பதவி விலகக் கோரும் பாஜகவுக்கு பதிலடி; அமலாக்கத்துறை விசாரணைக்கு நடுவே முதல் உத்தரவு பிறப்பித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.

🌅🌅இந்திய விமானப்படை முன்னாள் தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா பாஜகவில் இணைந்தார். 

🌅🌅பெங்களூருவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு வரும் நிலையில் காவிரி நீரை அவசியமற்ற நோக்கங்களுக்கு பயன்படுத்தியதற்காக 22 குடும்பங்களுக்கு தலா ரூ.5000 அபராதம்

🌅🌅ஐபிஎல் போட்டிகளுக்கான 2ஆம் கட்ட அட்டவணை வெளியீடு.

இறுதிப் போட்டி சென்னையில் மே 26ஆம் தேதி நடைபெறுகிறது.

🌅🌅வாக்காளர் சீட்டிற்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு - Press News

🌅🌅Election 2024 - வாக்குச்சாவடி அலுவலர்கள் கவனத்திற்கு ... இம்முறை QR Special Pink Seal அறிமுகம்.!                                                        🌅🌅வரும் மக்களவைத் தேர்தலில் காகித பயன்பாட்டை குறைக்குமாறு கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

முடிந்த அளவு டிஜிட்டல் பயன்பாட்டை பயன்படுத்தி காகிதப் பயன்பாட்டை குறைக்கவும் வேண்டும் 

ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பாலித்தீன் பைகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்

என அறிவுறுத்தியுள்ளது.

🌅🌅தமிழ்நாட்டில் 40 தொகுதியிலும் INDIA கூட்டணி தான் வெற்றி பெரும்

விஜய் வசந்த் காங் எம்.பி

🌅🌅தமிழ்நாடில் மேலும் 20 சுங்கச்சாவடிகளைத் திறக்க மத்திய அரசு திட்டம்

👉தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்

👉பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையில் 6,

👉விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3,

👉விக்கிரவாண்டி - நாகை நெடுஞ்சாலையில் 3,

👉ஓசூர்-தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3,

👉சித்தூர்-தச்சூர் விரைவுச் சாலையில் 3,

👉மகாபலிபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 என

மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌅🌅சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,205க்கும், ஒரு சவரன் ரூ.49,640க்கும் விற்பனை

🌅🌅மதிமுக, விசிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை 

தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்.

🌅🌅இரட்டை இலை சின்னம் தொடர்பாக  ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை இறுதி விசாரணைக்காக வரும் ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

🌅🌅100% வாக்குப்பதிவை வலியுறுத்தி புதிய தலைமுறை தொலைக்காட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திவருவது பாராட்டுக்குரியது.

புதிய தலைமுறைக்கு சத்யபிரதா சாஹு பாராட்டு

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

🌹🌹ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் நீட்தேர்வு விண்ணப்பம் தமிழகமும் முன்னேற்றம்

👉இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு மொத்தம் 23,81,833 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்

👉அதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள்,

👉13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 24 மாணவர்கள் ‘மூன்றாம் பாலினம்’ பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளனர். 

👉பதிவுசெய்யப்பட்ட 23 லட்சம் மாணவர்களில், 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் OBC NCL பிரிவைச் சேர்ந்தவர்கள், 

👉6 லட்சம் பொதுப் பிரிவு மாணவர்கள்,

👉3.5 லட்சம் பேர் பட்டியல் சாதி (SC) மாணவர்கள், 

👉1.8 லட்சம் மாணவர்கள் Gen-EWS பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும்

👉1.5 லட்சம் மாணவர்கள் பழங்குடியினர் (ST) பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

👉உத்தரபிரதேசம் 3,39,125 பதிவுகளுடன் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்களை பதிவு செய்துள்ளது, அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா 279904. ராஜஸ்தான் 1,96,139 ஆகியவை உள்ளன.

 👉தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் 155216 விண்ணப்பங்களும், கர்நாடகாவில் 154210 விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.


தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையில் கூட, கடந்த ஆண்டு, உத்தரப் பிரதேசத்தில் 1.4 லட்சம் விண்ணப்பதாரர்களுடன் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் இருந்தனர், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (1.3 லட்சம்) மற்றும் ராஜஸ்தான் (1 லட்சம்) ஆகியவை இருந்தன.


🌹👉முந்தைய ஆண்டுகளின் ஒப்பீடு


👉கடந்த ஆண்டு, மொத்தம் 20,87,449 விண்ணப்பதாரர்கள் நீட் (NEET UG 2023) தேர்வுக்கு பதிவு செய்தனர் மற்றும் தேர்வு மே 7 அன்று நடைபெற்றது, அவர்களில் 97.7 சதவீதம் பேர் தேர்வு எழுதினர் மற்றும் மறுதேர்வு கிட்டத்தட்ட 8,700 விண்ணப்பதாரர்களுக்கு நடத்தப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 499 நகரங்களில் 4097 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது.                                                                     👉கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவுகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. 2022ல் 18 லட்சமாக பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2023ல் 20.87 லட்சமாக உயர்ந்து, இந்த ஆண்டு கிட்டத்தட்ட மூன்று லட்சம் அதிகரித்துள்ளது.

👉தேர்வு எழுதும் மற்றும் தகுதிபெறும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் இதேபோன்ற போக்கு காணப்பட்டுள்ளது, 2022 இல் 17 லட்சமாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 2023 இல் 20.36 லட்சமாக அதிகரித்துள்ளது மற்றும் இந்த ஆண்டு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 2022ல் 9.93 லட்சத்தில் இருந்து 2023ல் 11.45 லட்சமாக அதிகரித்துள்ளது.

🙏🙏🙏

No comments:

Post a Comment