Tuesday, March 19, 2024

நுரையீரலின் நண்பன் நொச்சி இலை

ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் ஆவிப்பிடிப்பது சிறந்த மருத்துவமாக பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் வீட்டு மருத்துவத்தில் ஆவி பிடித்தல் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இந்த ஆவி பிடித்தலில் பயன்படுத்தப்படும் மூலிகையில் முதன்மையானது நொச்சி இலை.

இந்த நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. ஏனெனில் அதன் பயன்பாடு கிராமங்களைத் தாண்டி இன்னும் அதிகரிக்கவில்லை. இதனால் சென்னையில் சில இடங்களில் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

உங்கள் வீட்டிலும் நொச்சி வளர்க்க நினைத்தால் ஒரு கிளையை வெட்டி வைத்தால் கூட நன்றாக வளரும். இதனை வீட்டில் வளர்ப்பதால் பல்வேறு சிகிச்சைகளை செய்வதற்கு உதவியாக இருக்கும். நொச்சியினை நாம் வளர்க்க வேண்டியது அவசியம். இவை மிக எளிதாக வளரக்கூடியது. நுரையீரலின் நண்பன் என்று சொல்லக்கூடியதுதான் நொச்சி இலைகள்..

கொதிக்கும் நீரில், நொச்சி இலையுடன் கற்பூரவல்லி இலையையும் சேர்த்து, ஆவி பிடித்தாலே, இறுகி கிடக்கும் நெஞ்சு சளி கரைய ஆரம்பிக்கும். வேப்பிலையை போலவே, இந்த இலையையும் நீரில் சேர்த்து குளித்து வந்தால், உடல் வலி தீர்ந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.


நொச்சி இலையும் தீரும் நோய்களும், முன்னோர் கண்ட வைத்தியம்!

மலைப்பகுதியில் வளரும் மூலிகை இலைகளில் மிகச்சிறந்த மூலிகை நொச்சி என்று சொல்லலாம். இவை தோட்டப்பகுதியிலும் வயல்வெளிகளிலும் இயல்பாக இருக்க கூடும். களைச்செடிகளில் இவையும் ஒன்று என்று நொச்சியை கூறுகிறார்கள்.

நொச்சி புதர்ச்செடியாகவும், மரமாகும் வளரக்கூடியது. நொச்சியில் குறிப்பிடத்தக்கது வெண் நொச்சி, கரு நொச்சி, நீர் நொச்சி ஆகும். கருநொச்சி சித்தமருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த செடியின் வேர், பட்டை, விதை, பூக்கள் என முழுத்தாவரமுமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. நொச்சியின் வேர்ப்பகுதிக்கு பாம்பு விஷத்தை முறிக்கும் தன்மை உள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது. நொச்சி தரும் பயன்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

​உடல் வலியை போக்கும் - நொச்சி இலை மருத்துவ குணங்கள்


கடுமையான உடல் உழைப்புக்கு பிறகு உடலில் உண்டாகும் வலியை குறைக்க நொச்சி இலை உதவுகிறது. அதே போன்று தசை பிடிப்பு, தசை வலி, உடல் சோர்வு இருக்கும் போதும் நொச்ச்சி இலை உதவும். எப்படி என்கிறீர்களா? நீரில் இரண்டு கைப்பிடி நொச்சி இலைகளை சேர்த்து இலேசாக கொதிக்கவிட்டு வெதுவெதுப்பானதும் அந்த நீரில் குளித்துவர உடல் வலி சிட்டாய் பறந்துபோகும்.

மேலும் உடலுக்கு புத்துணர்ச்சி தேவையாக இருந்தால் நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அதில் பனைவெல்லம் கலந்து குடித்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

​சைனஸ் பிரச்சனைக்கு தீர்வு - நொச்சி இலை மருத்துவ குணங்கள்


உடலில் இருக்கும் கப நோய்களை விரட்டி அடிக்க நொச்சி இலை பயன்படுத்தப்படுகிறது. ஜலதோஷம், மூக்கடைப்பு முக்கியமாக சைனஸ் தலைவலிக்கு விரைவாக தீர்வளிக்கிறது நொச்சி இலை.

சைனஸ் தலைவலி இருப்பவர்க்கள் நொச்சி இலையுடன் சிறிது அளவு சுக்கு சேர்த்து அரைத்து தலையில் பற்று போட்டால் தலைவலிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். எதுவுமே இல்லையென்றாலும் நொச்சி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி நல்ல சூடு பதம் இருக்கும் போதே துணியில் முடிந்து அதைக் கொண்டு ஒத்தடம் கொடுத்தாலும் வலி உபாதை கப நோயான இரைப்பு நோ இருப்பவர்கள் நொச்சி இலையுடன் மிளகு பூண்டு, இலவங்கம் சேர்த்து அப்படியே சாப்பிட்டாலோ அல்லது கஷாயமாக்கி குடித்தாலே இரைப்பு நோய் தீவிரமாகாமல் குறையும். நொச்சி இலையில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்துவந்தால் பீனிச நோய்கள், ஒற்றைத்தலைவலி சேர்ந்து குறையும்.
மூக்கடைப்பு பிரச்சனைக்கு தீர்வு - நொச்சி இலை மருத்துவ குணங்கள்


தலைவலி மற்றும் சளியால் வரும் மூக்கடைப்புக்கு தீர்வாக நொச்சி இலை பயன்படுகிறது. எல்லோருக்குமானது நொச்சி இலையை காயவைத்து பொடித்து வைக்கவும். சற்று அகலம் குறைந்த மண் சட்டியில் நெருப்பை மூட்டி தணலாக்கி அதில் நொச்சி பொடிகளை சேர்த்து அதிலிருந்து வரும் புகையை சுவாசிக்க நல்ல பலன் கிடைக்கும்.

நொச்சி இலையை கசக்கி அதன் சாறை சுத்தமான வெள்ளைதுணியில் போட்டு அதை மூக்கில் முகர்ந்துவந்தாலும் மூக்கடைப்பு நீங்கும். சிறு பிள்ளைகளுக்கும் இந்த முறையை பின்பற்றலாம். நொச்சி இலை சாறை மூக்கின் மேல் தடவி பற்று போன்றும் போடலாம்.

​வேதுபிடிக்க சிறந்தது நொச்சி இலை - நொச்சி இலை மருத்துவ குணங்கள்


தலையில் நீர் கோர்வை, மண்டையில் நீர் கோர்வை, தலைபாரம் பிரச்சனை இருப்பவர்கள் வேதுபிடித்தால் நல்லபலன் கிடைக்கும் என்றார்கள். நொச்சி இலை கொண்டு ஆவி பிடிப்பதன் மூலம் மண்டையோட்டில் இருக்கும் நீர் முழுக்க வியர்வையாகி வெளிப்படும். சுவாச பாதையையும் சுத்தம் செய்யப்படும்.

உடலில் இருக்க்கும் நச்சை வியர்வையாய் வெளியேற்ற உதவுகிறது. மூக்கடைப்பு இருந்தாலும் அவை சீராகும். அதிகளவு குளிர்காய்ச்சலால் அவதிப்பட்டாலும் நொச்சி இலை கொண்டு வேது பிடிப்பதன் மூலம் காய்ச்சலின் தீவிரம் மெல்ல மெல்ல தணியும்.

​தலையணையில் நொச்சி - நொச்சி இலை மருத்துவ குணங்கள்


நொச்சி இலையை துணியில் அடைத்து அதை தலையணையாக பயன்படுத்தினால் தூக்கம் நன்றாக வரும். சைனஸ் இருப்பவர்கள் தினசரி இந்த தலையணை பயன்படுத்தினாலே பலன் கிடைக்கும். கழுத்துவலி, கழுட்தில் நெறிகட்டுதல், நரம்பு கோளாறுகளால் கழுத்துவலி என அவதிப்படுபவர்களுக்கு இந்த தலையணை மருத்துவம் கைகொடுக்கும்.

மூட்டுவலி இருப்பவர்கள் நொச்சி இலைச்சாறை மூட்டுகளின் மீது தடவி வந்தாலும் வலி குறையும். புண்களின் மீது இதன் சாறை தடவி வந்தால் சீழ் வரும் நிலையில் இருக்கும் புண்களை கூட ஆற்றும். இதன் இலைச்சாறை கொண்டு தயாரிக்கப்படும் தைலத்தை காய்ச்சி வைத்துகொண்டால் வலி வரும் போதெல்லாம் வலி நிவாரணியாக பயன்படுத்தலாம்.

அதுமட்டும் அல்லாமல் நொச்சி இலையோடு வேப்பிலை கலந்து எரித்து புகையை விட்டால் வீட்டில் கொசுக்களை விரட்டி அடிக்கலாம்.

No comments:

Post a Comment