Saturday, March 23, 2024

அழிஞ்சில். - தினம் ஒரு மூலிகை

 

*அழிஞ்சில்.*.   எல்லாவித தோல் நோய்களையும் அழிக்கும் சக்தி அழிஞ்சிலுக்கு உண்டு அறவே அழித்திடும் அழிஞ்சில் நீண்ட இலைகளை உடைய முள்ளுள்ள மரம் செம்மஞ்சள் நிறம் உள்ள பழங்களை உடையது இதில் கருப்பு வெள்ளை சிவப்பு இனம் உண்டு சிவப்பு பூவுடைய மரம் மருத்துவ பயன் உடையது இலை விதை வேர்ப்பட்டை மருத்துவ குணம் உடையது நோய் நீக்கி உடல் தேற்றுதல் வாந்தி உண்டு பண்ணுதல் பித்த நீர் சுரப்பை மிகுத்தல் மலமிளக்குதல் வயிற்றுப்பூச்சி கொல்லுதல் போன்ற மருத்துவ குணம் உடையது வேர் பட்டையை உலர்த்தி பொடித்து 100 மில்லி கிராம் வீதம் காலை மாலை ஒரு வாரம் கொடுக்க கடி விஷங்கள் பாம்பு எலி வெறி நாய் மற்றும் தொழுநோய் கிராந்தி புண் வயிற்றுப்போக்கு குணமாகும் வேர் பட்டையை தூள் செய்து 100 கிராம் உடன் ஜாதிக்காய் ஜாதி பத்திரி சமன் கலந்து 200 மில்லி கிராம் தேனில் உழைத்து சாப்பிட்டு வர தொழுநோய் குணமாகும் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணையை உடலில் தடவி வர தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும் ஓரிரு துளிகள் உள்ளுக்கு கொடுக்கலாம் நன்றி.

No comments:

Post a Comment