Thursday, March 21, 2024

கேரட் குடைமிளகாய் வதக்கல்

சமையல் குறிப்புகளில் இன்று கேரட் குடைமிளகாய் வதக்கல் செய்யும் முறையை பார்ப்போம் வாருங்கள்...!*


*கேரட் குடைமிளகாய் வதக்கல் - Carrot Capsicum Stir Fry:* 

 

*தேவையான பொருட்கள்:*


கேரட் - 1

குடைமிளகாய் - 1

கடுகு உளுந்து - 1/2 டீஸ்பூன் 

கொர கொரப்பாகச பொடித்து மிளகு சீரகத்தூள் - 1 டீஸ்பூன்

தட்டிய பூண்டு - 1 டீஸ்பூன் 

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிது 

உப்பு - தேவையான அளவு


*செய்முறை:*


1. கேரட்டை தோல் சீவி வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். குடைமிளகாயின் நடுவில் இருக்கும் விதைகளை நீக்கி சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்.


2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும். பின் வட்டமாக நறுக்கிய கேரட்டை சேர்த்து சிறு தீயில் வைத்து வதக்கவும். சிறிது வதங்கியதும் மெதுவாக திருப்பி விடவும். 


3. கேரட் வதங்கியதும் நறுக்கிய குடைமிளகாய் துண்டுகள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். 


4. குடைமிளகாய் லேசாக நிறம் மாறியதும் கொர கொரப்பாக பொடித்த மிளகுசீரகத்தூள் சேர்த்து வேகமாக பிரட்டி பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

No comments:

Post a Comment