Tuesday, March 26, 2024

ஆகாய தாமரை - தினம் ஒரு மூலிகை

 


*ஆகாய தாமரை.*  மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆகாயத்தாமரை குளம் குட்டைகளில் கூட்டம் கூட்டமாக வளரும் சிறு செடியினம் இலைகளே மருத்துவ குணம் கொண்டவை வெப்புத்தணித்தல் தாகம் குறைக்கும் தாதுக்களின் எரிச்சலை தனித்து அவற்றை துவளச் செய்யும் மருந்தாக பயன்படுகிறது இலையை அரைத்து கரப்பான் தொழுநோய் புண் மீது வைத்து கட்டி வர விரைவில் ஆறும் ஆசன வாயில் வைத்து கட்டி வர வெளிமூலம் ஆசனக் குத்தல் தீரும் இலையை நீரில் இட்டு கொதிக்க வைத்து அந்த ஆவியை 10 நிமிடம் ஆசன வாயில் பிடித்து வர மூலமுளை அகழும் 25 மில்லி இலை சாற்றை தேனுடன் கலந்து காலை மாலை ஐந்து நாட்கள் கொடுக்க மார்பினில் உண்டாகும் கிருமி கூடுகள் போகும் நீர் சுருக்கு மூலம் சீதபேதி இருமல் தீரும் இளைச்சாறு அரை லிட்டர் நல்லெண்ணெய் ஒரு லிட்டர் கலந்து பலமுறை காய்ச்சி மெழுகு பதமான நிலையில் கிச்சிலிக் கிழங்கு சந்தனத்தூள் வெட்டிவேர் மஞ்சள் சாம்பிராணி வகைக்கு 10 கிராம் பொடித்து போட்டு இறக்கி வடித்து வாரம் ஒரு முறை தலைக்கு இட்டு குளித்து வர உச்சூடு கண் எரிச்சல் மூலநோய் தீரும் .

நன்றி.

No comments:

Post a Comment