Tuesday, March 26, 2024

காலை மாலை எனப்பெயர் வந்த காரணம் தெரியுமா?

 ஒரு முறை நாரதர் சூரியதேவரிடம் நீ

உதயமாகும் போதும்,

மறையும்போதும் பார்ப்பது என்ன?என்ற கேள்வியை  கேட்டார்.


_அதற்கு சூரிய தேவர்_

_தான் உதயமாகும் போது  பாற்கடலில் பள்ளி_ _கொண்டிருக்கும்_ 

_சர்வ வியாபியான விஷ்ணுவின்_ _தாமரைத் திருவடிகளைச்_ _சரணடைந்து தன் அன்றாட_ _பணியைத் தொடங்குவதாகவும்,_

_தான் மறையும் மாலைப் பொழுதில்_ _திருமாலை அடி_

_முதல் முடி வரை_ _முழுமையாகத் தரிசிப்பதுடன்_ _திருமால்_ 

_கழுத்தில்_ _அணிந்திருக்கும் மாலையையும் தரிசிப்பதாகவும் கூறினார்._


_சூரியன் உதிக்கும் காலைப் பொழுதில்_ _திருமாலின்_

_திருவடிகளை (கால்கள்) தரிசிப்பதால் அந்த நேரத்தை _*காலை வேளை*_ _எனவும்_


_சூரியன் மறையும் மாலைப் பொழுதில் திருமாலின் கழுத்தில் அணிந்துள்ள மாலையை தரசிப்பதால்     அந்த நேரத்தை _*மாலை* *வேளை*_     _என்றும் பெயர் வரக்காரணமாயிற்று._

No comments:

Post a Comment