Saturday, March 30, 2024

வாதம், பித்தம், கபம் என்றால் என்ன?

வாதம்

வாதம் என்பது உடல் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருக்கும் வாயுவைக் குறிப்பதாகும்.

பித்தம்

பித்தம் என்பது உடலில் உயிர் தங்குவதற்கு ஆதரவு நிலையாக இருக்கும் உடல் வெப்பத்தைக் குறிப்பதாகும். இந்த வெப்பம் உணவு எரிக்கப்பட்டுச் சக்தியாக மாற்றப்படும் போது உண்டாவதாகும்.

கபம்

கபம் என்பது உடலின் குளிர்ச்சியைக் குறிப்பிடுவதாகும்.

இதன் அடிப்படையிலேயே 1482 வகையான நோய்கள் வாதத்தினால் ஏற்படுபவை என்றும், 1483 வகையான நோய்கள் பித்தத்தினால் வருபவை என்றும், 1483 வகையான நோய்கள் கபத்தால் தோன்றுபவை என்றும் சித்த மருத்துவர்களாலும் மருத்துவ நூல்களாலும் குறிப்பிடப்படுகின்றது.

வாதம், பித்தம், கபம் மூன்றையும் சீரான நிலையில் வைத்திருப்பது எப்படி?

மனித உடலில் மூன்றும் அவசியம் வாதம் பித்தம் கபம் இவை மூன்றும் சரிசமமாக இல்லாவிட்டால் உடலுக்கு குறைபாடு அதனால் பல இன்னல்கள் ஏற்படும் இதை சரி செய்ய மிகச் சிறந்த வழி உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருப்பது மட்டுமே.

வாதம் என்னும் போது காற்று சம்பந்தப்பட்டது காற்றை சுத்தமாகவும் பிராண சக்தியோடு சுவாசிக்கும்போது வாதம் சமநிலை பெறும் இதனை செய்ய மூச்சுப் பயிற்சி செய்தால் வாதம் சமநிலை பெறும்.

பித்தம் இது உடலில் உள்ள கழிவுகள் அதிகரித்தால் பித்தம் ஏற்படும் விரதம் இருந்தால் பித்தம் சமநிலைப்படும்.

உப்பு பேதி வைத்தியம் இருந்தால் பித்தம் சமநிலைப்படும்.

உப்பு பேதி வைத்தியம் தனியாக கொடுக்க இருக்கிறேன் தனியாக கேள்வி கேட்டால் பதிலளிக்கப்படும்.

கபம் என்பது நுரையீரல் சரி செய்தால் கபம் சமநிலை பெறும்.

அதற்கான தீர்வு தனியாக கேட்டால் பதில் அளிக்கப்படும்.

இவை மூன்றையும் சமநிலையில் வைத்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இதைவிட சிறந்த வைத்தியம் நாவிற்கு பிடித்ததை சாப்பிடவேண்டும்.

உணவை நன்றாக கூழ் போல் அரைத்து நாக்கில் சுவை அற்றுப் போகும் வரை நன்றாக மென்று சாப்பிடவேண்டும் இவ்வாறு சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

No comments:

Post a Comment