Tuesday, May 7, 2024

செய்தித் துளிகள் - 07.05.2024 (செவ்வாய்க்கிழமை)


🌅🌅12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் - மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:-

👉திருப்பூர்               - 97.45%

👉ஈரோடு                   - 97.42%

👉சிவகங்கை           - 97.42%

👉அரியலூர்                - 97.25%

👉கோவை                    - 96.97%

👉விருதுநகர்                 - 96.64%

👉திருநெல்வேலி          - 96.44%

👉பெரம்பலூர்                - 96.44%

👉தூத்துக்குடி                 - 96.39%

👉நாமக்கல்                      - 96.10%

👉தென்காசி                    - 96.07%

👉கரூர்                            -   95.90%

👉திருச்சி                       - 95.74%

👉கன்னியாகுமரி     - 95.72%

👉திண்டுக்கல்           - 95.40%

👉மதுரை                    - 95.19%

👉ராமநாதபுரம்         - 94.89%

👉செங்கல்பட்டு      - 94.71%

👉தேனி                     - 94.65%

👉சேலம்                   - 94.60%

👉சென்னை           - 94.48 %

👉கடலூர்                - 94.36%

👉நீலகிரி                - 94.27%

👉புதுக்கோட்டை - 93.79%

👉தருமபுரி            - 93.55%

👉தஞ்சாவூர்           - 93.46%

👉விழுப்புரம்           - 93.17%

👉திருவாரூர்           - 93.08%

👉கள்ளக்குறிச்சி - 92.91% 

👉வேலூர்                - 92.53%

👉மயிலாடுதுறை - 92.38%

👉திருப்பத்தூர்       - 92.34%

ராணிப்பேட்டை - 92.28%

👉காஞ்சிபுரம்          - 92.28%

👉கிருஷ்ணகிரி      - 91.87%

👉திருவள்ளூர்          - 91.32%

👉நாகப்பட்டினம்    - 91.19%

👉திருவண்ணாமலை - 90.47%

🌹👉மொத்தம்                    - 94.56%

🌹👉புதுச்சேரி                    - 93.38

🌅🌅பாட வாரியாக தேர்ச்சி விகிதம்

👉இயற்பியல் பாடத்தில் 98.48% பேர்

👉வேதியியல் பாடத்தில் 99.14% பேர்

👉உயிரியல் பாடத்தில் 99.35% பேர்

👉கணிதம் பாடத்தில் 98.57% பேர்

👉தாவரவியல் பாடத்தில் 98.86% பேர்

👉விலங்கியல் பாடத்தில் 99.04% பேர்

👉கணினி அறிவியல் பாடத்தில் 99.80% பேர்

👉வணிகவியல் பாடத்தில் 97.77% பேர்

👉கணக்குப்பதிவியல் பாடத்தில் 96.61% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

🌅🌅ஆண்கள் vs பெண்கள் : +2 ரிசல்ட்டில் யார் டாப்?                             🌹👉தமிழகத்தில் +2 தேர்வில் 94.56% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

🌹👉இதில், கடந்த ஆண்டை போலவே, மாணவர்களை விட மாணவிகள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

🌹👉 3,52,165 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 3,25,305 பேர் (92.37%) தேர்ச்சி அடைந்துள்ளனர்.

🌹👉4,08,440 மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில், 3,93,890 பேர் (96.44%),                                                🌹👉மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் (100%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.                                                         🌅🌅மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களில்                                      👉திருப்பூர் மாவட்டம்  97.45% தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ளது.

👉97.42% தேர்ச்சி பெற்று ஈரோடு, சிவகங்கை மாவட்டங்கள் 2-ம் இடம் பெற்றுள்ளது;

👉97.25% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் 3-ம் இடம் பிடித்துள்ளது;

👉90.47% தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை கடைசி இடம் பிடித்துள்ளது.

🌅🌅2024-25 ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியீடு பள்ளிக்கல்வித்துறை - தொடக்கக் கல்வித் துறை

🌅🌅உபரி ஆசிரியர் பணிநிரவல் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் - அறிவுரைகள் வழங்குதல் - சார்பு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - 06.05.2024 வெளியீடு.

🌅🌅 2024-25ஆம் கல்வியாண்டிலும் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்படாமலேயே மாறுதல் கலந்தாய்வை மட்டும் நடத்திட பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி,


👉Apply (EMIS) : மே 13 - 17

👉Seniority & Vacancy : மே 20

👉Claims & Objections : மே 21

👉Final Seniority & Vacancy : மே 23

👉மலைச்சுழற்சி : மே 24

👉SGT பணிநிரவல் : மே 28


🌹👉M-HM

👉within Block.   : மே 31

👉within Ed.Dist.: ஜூன் 1 (மு.ப)

👉within District : ஜூன் 1 (பி.ப)

👉Dist. to Dist.    : ஜூன் 3


🌹👉BT

👉within Block.   : ஜூன் 6

👉within Ed.Dist.: ஜூன் 7 (மு.ப)

within District : ஜூன் 7 (பி.ப)

👉Dist. to Dist.    : ஜூன் 8


🌹👉P-HM

👉within Block.   : ஜூன் 10

👉within Ed.Dist.: ஜூன் 11 (மு.ப)

👉within District : ஜூன் 11 (பி.ப)

👉Dist. to Dist.    : ஜூன் 12


🌹👉SGT

👉within Block.   : ஜூன் 13

👉within Ed.Dist.: ஜூன் 14 (மு.ப)

👉within District : ஜூன் 14 (பி.ப)

👉Dist. to Dist.    : ஜூன் 15

🌹👉பார்வையில் குறிப்பிடப்படாமல் இருப்பினும், தொடக்கக்கல்வித்துறையிலும் மாநில அளவிலான முன்னுரிமையை நடைமுறைப்படுத்திய அரசாணை 243ன் அடிப்படையில் தலைமையாசிரியர்களுக்கும் ஒன்றியம் தாண்டிய மாறுதல் இம்முறை நடத்தப்பட உள்ளதால் ஒன்றிய அளவில் இன்றுவரை இருக்கும் பதவி உயர்வுப் பணியிடங்கள் பறிபோவது உறுதியாகியுள்ளது.

🌅🌅அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி நிரவல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு.

🌅🌅ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி /அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக 31.12.2023க்கு முன்னர் பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல் வெளியீடு - தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

👉கணிதம் பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல் வெளியீடு.                                                         👉31.12.2023க்கு முன்னர் பணியில் சேர்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களில் ஆங்கிலம் பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல் வெளியீடு.

👉அறிவியல் பாடத்தில் பட்டம் பெற்ற ஆசிரியர்களின் மாநில அளவிலான உத்தேச பெயர் பட்டியல் வெளியீடு.

🌅🌅தமிழகத்தில் 1.3 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்: ஜூன் 14-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு.

🌅🌅வருவாய் ஈட்டும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கான உதவித்தொகைக்கு எமிஸ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள.. பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் வெளியீடு.

🌅🌅பள்ளிகளில் குளிர்சாதன வசதி வழங்கப்பட்டால் பெற்றோர்களே செலவை ஏற்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம்

🌅🌅அராஜக அரசாணை 243 ஐ பின்பற்றியே கலந்தாய்வு  அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

🌅🌅நீட் தேர்வு இயற்பியல் பாடப்பிரிவு கேள்விகள் கடினமாக இருந்ததாக தேர்வெழுதிய மாணவர்கள் கருத்து.

🌅🌅தமிழக கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

🌅🌅+2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மறுதேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

🌅🌅12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9ஆம் தேதி வழங்கப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு

🌅🌅தமிழ்நாடு பள்ளிக்கல்வி திட்டங்கள் குறித்து பீகார் மாநில கல்வித்துறை அதிகாரிகள் 250 பேருக்கு சென்னையில் பயிற்சி

👉3 கட்டமாக நடந்த பயிற்சியை 117  அதிகாரிகள் முடித்துள்ளனர்.

👉வரும் 25ம் தேதி வரை மீதமுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சி நடக்க இருக்கிறது

👉"பள்ளிக்கல்வி - பீகார் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு பயிற்சி"

👉தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் சிறப்புத் திட்டங்கள் குறித்து அறியும் விதமாக பீகாரைச் சேர்ந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் 117 பேருக்கு மூன்று கட்டமாக சென்னையில் பயிற்சி முடிந்தது. மொத்தமாக 250 கல்வித்துறை அதிகாரிகள் பயன்பெற உள்ளனர்*

👉புதுமைப்பெண், இல்லம் தேடிக் கல்வி, காலை உணவுத் திட்டம், தகைசால் பள்ளிகள், திறன்மிகு வகுப்பறை உள்ளிட்ட பல சிறப்புத் திட்டங்கள் குறித்து பயிற்சி

🌅🌅பாரீஸ் ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி தகுதி

ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தகுதி பெற்று இந்திய அணி அசத்தல்

🌅🌅வெளி மாநிலம், வெளி மாவட்ட வாகனங்கள் கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் - ஆட்சியர்.

🌅🌅இ-பாஸ் குழப்பத்தால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை பெருமளவு குறைந்துள்ளது.

🌅🌅ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் மீதான கல்வீச்சு: டிஜிபி ராஜேந்திரநாத் ரெட்டி பணியிட மாற்றம்.

🌅🌅கேரளக்கடலில் எழுந்த ராட்சத அலைகளால் கடற்கரையோரம் உள்ள வீடுகள் சேதம் - அரசு.

🌅🌅உக்ரைனுக்கு அமெரிக்கா தந்த 4 அதிநவீன தொலைதூர ஏவுகணைகளை அழித்தது ரஷ்யா

🌅🌅சென்னை: ஆயிரம் விளக்கு மாநகராட்சி பூங்கா காவலாளியின் மனைவி மற்றும் மகளை வளர்ப்பு நாய்கள் கடித்த விவகாரத்தில் நாய்களின் உரிமையாளர் புகழேந்தியை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்துள்ளனர்;

புகழேந்தி, அவருடைய மனைவி  மற்றும் மகன் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

🌅🌅முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தொடர்ந்த மனு மீதான விசாரணையை மே 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

🌅🌅T20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி வெற்றிப்பெற்றால் வீரர்களுக்கு தலா ரூ.83 லட்சம் பரிசு அளிக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅🌅

🌹🌹தெரிந்து கொள்வோம்  .

👉சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்துதல் Diabeties can be Cured.

👉சர்க்கரை வியாதியில் இந்தியாவில் முன்னோடியாக இருக்கும் நாடு இந்தியா .

👉இந்தியாவில் சர்க்கரை வியாதியில் முதல் மாநிலம் தமிழ்நாடு .


🌹👉தமிழ் நாட்டில் முதலிடம் சென்னை.

👉நீரிழிவு நோய் என்பது இன்று அனைவருக்கும் பொதுவாகி விட்டது.

👉நமது பாரம்பரிய உணவுப் பொருட்கள் இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையில் இருந்தாலும் அந்த உணவுகளை நாம் சாப்பிட தயாராக இல்லை .

👉ஏனென்றால் அந்த அளவுக்கு அரிசியை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.

👉சர்க்கரை நோய்க்கான காரணம் என்னவென்றால் உணவு முறைகளின் முரண்பாடுகள்தான்.  பரம்பரையாக வந்தால் கூட உணவு முறைகளால் முதலிடம். தடுக்க முடியும்.

👉நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அது கண்டீப்பாக உணவுகளால்தான் சாத்தியமாகும்.

👉உணவுகளை அடையாளப்படுத்தி  தேர்ந்தெடுத்து சாப்பிடும் போது சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்தலாம்.

👉சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக்கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு .

வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.

👉பாகற்காயை நன்கு காய வைத்து பொடி செய்து காலை இரவு என்று இரண்டு வேலை சாப்பிட்டு வரலாம்.

👉துவர்ப்பு சக்தி அதிகமாக உள்ள உணவுப் பொருட்கள் நீரிழிவைக் கட்டுப்படுத்தும்.

👉வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டு வர நீரிழிவு கட்டுப்படும்.

👉தென்னை மரப்பூவை நன்றாக காய வைத்து பொடி செய்து காலை இரவு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும் .மற்றும் தளர்ந்து போன நரம்புகள் சரியாகிவிடும்.

👉கருவேப்பிலை , லவங்கப்பட்டை ,வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அற்புதமான பலன்  கிடைக்கும்.

👉சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்துவதில் ஆவாரம் பூவிற்கு முக்கிய பங்கு உண்டு  .ஆவாரம் பூவை தேநீராக சாப்பிடும் பொழுது நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் வரும்.

👉உடல் உழைப்பு அவசியம் தேவை. நடைபயிற்சி உடலை வருத்தி செய்யக் கூடிய சில வேலைகளை செய்து வியர்வை உண்டாக்க வேண்டும்.

👉நாம் உணவில் பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு , பீர்க்கங்காய் பிஞ்சு, புடலங்காய் பிஞ்சு ,பீன்ஸ் , அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வர வேண்டும்.

👉சிறுதானியங்கள் வரகரிசி, தினைஅரிசி ,சாமை , குதுரவாலி எல்லாமே அற்புதமான உணவு .இந்த உணவுகளை ஒரு வேளை (அ )இருவேளை தொடர்ந்து சாப்பிடும் பொழுது நோய் கட்டுப்படக் கூடிய தன்மை உண்டு .

No comments:

Post a Comment