Tuesday, May 14, 2024

கெட்ட பழக்கம்' என்பது வேறு; 'கெட்ட குணம்' என்பது வேறு..!

சிகரெட் பிடிப்பது என்பது ஒரு கெட்ட பழக்கம்; அது போலத்தான் டிரிங்கஸ் சாப்பிடுவதோ,  மற்ற  சில விஷயங்களோ..


நம்முடைய  'கெட்ட பழக்கம்' , எந்த வகையிலும் அடுத்தவர்களுக்கு தொந்தரவு ஆகாமல் பார்த்துக் கொள்வது நம் கடமை..! அதில் கவனம் இருக்கும் பட்சத்தில், கெட்ட பழக்கம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயமே..!


ஆனால்,  கெட்ட குணம் அப்படி அல்ல..!   அது அடுத்தவருக்கு தீங்கிழைக்கவே உருவாவது / இருப்பது...!


அதீத பொறாமைப்படுவது, தன் தேவைக்காக அடுத்தவர்களை வஞ்சிப்பது,   நன்றி மறத்தல், அடுத்தவர்களை manipulate செய்தல், அதீத  சுயநலம், புறம் பேசுதல், நம்பியவரை ஏமாற்றுவது, ஓருவரைத் தமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவருக்கு அதீத  பாதகம் செய்ய முனைவது....  இவை போன்றவை கெட்ட குணங்கள்..!


'கெட்ட பழக்கம்' உள்ளவர்கள் எல்லாம் 'கெட்ட குணம்' கொண்டவர்கள் அல்ல..! கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்கள் எல்லாம் நல்லவர்கள் என்று அர்த்தமல்ல..! 


நண்பர்களே..! ஒரு irony என்னவென்றால் - 


நாம்  நம் குழந்தைகளை "நீ அவன் கூட சேராதே... அவனிடம்,  பொய்,  பொறாமை, சுயநலம் போன்ற கெட்ட குணங்கள் இருக்கு..!" என்று யாரைக் காட்டியாவது தடுக்கிறோமா..? 


இல்லை..! 


சொல்லப்போனால், அது போன்ற குணங்கள் கொண்டவர்களைத்தான் காட்டி,  "பாத்தியா.. அவன்  எவ்ளோ சாமர்த்தியமா இருக்கான்.? 


நீ அவன்கூட  ஃப்ரெண்டாயி அது எல்லாம் கத்துக்கணூம்..!" என்று  நாமே அனுப்பி வைக்கிறோம்..!


ஆனால், பிறர்க்கு உதவும் குணம், இனிய பேச்சு, கள்ளமில்லா  நடத்தை போன்ற  'நல்ல குணங்கள்' கொண்டிருக்கும் ஒருவனை,  'அவன் சிகரெட் புடிக்கிறான்..' என்ற காரணத்தால் "அவனிடம் சேராதே.." என்று நம் பிள்ளைகளைத்   தடுக்கிறோம்..!


கெட்ட பழக்கங்கள், கெட்ட குணத்திற்கு வித்திடும் என்று நாம் நினைக்கிறோம். ஒரு முதிர்ச்சி வந்து விட்ட பிறகு,  நம்மால்  கெட்ட பழக்கத்திற்கும், கெட்ட குணத்திற்கும் வித்யாசப்படுத்தி பார்க்க முடியும்..!


 கெட்ட பழக்கம் இருந்தாலும், ஒருவன் கெட்ட குணமுடையவன் அல்ல என்று தெரிந்து அவர்களிடம் பழகுவதிலோ, போற்றுவதிலோ  தவறு இருக்காது..! 


முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!


நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்...

No comments:

Post a Comment