Tuesday, May 21, 2024

ஒழுங்கற்ற மாதவிடாய்- சீராக்கும் வழிமுறைகள்!

அக்குபிரசர் -உடலில் உள்ள முக்கிய புள்ளிகளை அக்குபிரசர் முறையில் கையாள்வதன் மூலம் மாதவிடாய் சுழற்சியை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்
மாதுளை - இது மாதவிடாயின் போது ஏற்படும் தாங்கமுடியாத தசைப்பிடிப்பை தடுக்கக்கூடியது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் குறைபாட்டையும் தடுக்கக்கூடியது
யோகா - இது ரத்த ஓட்டத்தை இயல்பாக்குகிறது. வயிற்று பகுதியில் உள்ள உறுப்புகளின் செயல்பாட்டை ஊக்குவித்து மாதவிடாய் சுழற்சியை சீராக்கக்கூடியது
அன்னாசி பழம் - மாதவிடாய் சுழற்சி சீராக்கவும், தசை பிடிப்புகளிலிருந்து நிவாரணம் பெறவும் உதவும்
இஞ்சி டீ - இது மாதவிடாய் சுழற்சியை இயல்பாக்கும். மாதவிடாய் தாமதத்தையும் தடுக்கும்
கற்றாழை - இது உடலில் உள்ள ஹார்மோன் அளவை இயல்பாக்கக்கூடியது. ஹார்மோன் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவும்
பெருஞ்சீரகம் - ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகள் கொண்ட இது மாதவிடாய் வலியை குறைக்கக்கூடியது
லவங்கப்பட்டை - இது பெண்கள் உடலில் இன்சுலின் அளவை ஒழுங்குப்படுத்தக்கூடியது. புரோஜெஸ்ட்டிரோன் பற்றாக்குறையையும் போக்கக்கூடியது
வெந்தயம் - இது உடலில் ஹார்மோன் அளவை சமநிலைப்படுத்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் மாதவிடாய் சுழற்சிக்கு வித்திடக்கூடியது
பேரீச்சை - இதில் நார்ச்சத்து துத்தநாகம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துமிக்க கனிமங்கள் காணப்படுகின்றன
விளக்கெண்ணெய் - இந்த எண்ணெயில் காணப்படும் சேர்மங்கள், இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை அகற்ற உதவும்.
பின்பற்ற வேண்டியவை
தினசரி உணவில் ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் இடம் பெறுவதை உறுதி செய்யுங்கள்.
தினமும் உடற்பயிற்சி செயவதை வழக்கமாக்குங்கள்
காய்கறிகள், பழங்களை ஜூஸாகவும் தொடர்ந்து பருகுங்கள்
வைட்டமின் சி சத்து கொண்ட உணவுகளை அதிகமாகவே உட்கொள்ளுங்கள்
அதிக கொழுப்பு கொண்ட உணவுகளை தவிருங்கள்

No comments:

Post a Comment