Monday, May 20, 2024

உலக அளவியல் தினம் - (20-மே)

 *இன்றைய நாள்..*

👉 நாம் இவ்வுலகில் காணக்கூடிய மற்றும் பயன்படுத்தக்கூடிய அனைத்துமே நிறை, மீட்டர், அடி, கொள்ளளவு என்று அளவியலை சார்ந்தே உள்ளன. எனவே அளவியலின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே 20ஆம் தேதி உலக அளவியல் (Metrology) தினம் கொண்டாடப்படுகிறது.


👉 முதன்முதலாக 1875ஆம் ஆண்டு 17 நாடுகள் ஒன்று சேர்ந்து உலகில் உள்ள அனைத்து நாடுகளும் ஒரே அளவினை பயன்படுத்த சர்வதேச அளவியலை உருவாக்கினர். இதன்மூலமாக வெவ்வேறிடத்தில் உற்பத்தியாகும் பொருட்களை ஒன்றிணைக்க சர்வதேச அளவியல் பயன்படுகிறது.



*உலக தேனீக்கள் தினம்.*


🐝 உலக தேனீக்கள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 20 அன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.


🐝 நவீன தேனீ வளர்ப்பின் முன்னோடியான அன்ரன் ஜான்ஸாவின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையானது மே 20ஆம் தேதியை உலக தேனீக்கள் தினமாக அறிவித்தது.


🐝 உலக தேனீ தினம் என்பது சுற்றுச்சூழல் அமைப்பில் தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கைகளின் பங்கை அங்கீகரிப்பதாகும்.


🐝 தேனீக்களின் அவசியம் மற்றும் தேனீக்களின் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.

*முக்கிய நிகழ்வுகள்...*


👉 1570ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியசு வரைந்தார்.


👉 1998ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.


👉 1957ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி இந்திய சுதந்திர போராட்ட வீரரும், சென்னை மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான த.பிரகாசம் மறைந்தார்.

No comments:

Post a Comment