Thursday, August 8, 2024

 முதல்ல  இத படிங்க!


பழங்காலத்தில் தீப்பெட்டி இல்லை எனவேதான் பழந்தமிழகத்தில் சட்டியில் நெருப்பை காக்கப் படாத பாடு பட்டனர் (QUEST FOR FIRE ஆங்கில படம் பாருங்க)


ஒரு வகுப்பாரின் கடமையாக வீட்டில் அக்கினி வளர்ப்பது ஆக்கப்பட்டது இதற்க்குத்தான்.

காலையில் வயற்காடு சென்று மாலையில் வீடு திரும்புவோர் வீட்டில் அக்கினியை பாதுகாக்க இயலாது 


எனவே எப்போதும் வீட்டில் ஆள் இருக்கும் வகுப்பாக பார்த்து அந்த வகுப்பாரின் கடைமையாக அக்கினியை வளர்ப்பது ஒப்படைக்கப்பட்டது 


அந்த வகுப்பாரின் பெயரே 'அந்தணர்'

'அந்தணர்' என்பதில் 'தணல்' உள்ளது பாருங்கள் 

'தணல்' வளர்த்தோர் 'தணர்' 


இதிலிருந்து தமிழகத்து அந்தணர் யாவரும் தமிழரே என்று தெளியலாம் வெளி மாநில வெளிநாட்டு மக்கள் அல்ல அவர்கள் 


நெருப்பை பார்த்துகொள்வதால் 'பார்பார்' என்றும் 

அதுவே 'பார்பனர்' என்று ஆகியது 


'பிராமணர்' என்பதற்கும் அதே பொருள்தான் 


பிரமம் = நெருப்பு 


பிரமதாயம் - நெருப்பை வளர்தலுக்கு அரசன் தந்த மானியம் 


பிரம மூகூர்த்தம் = காலையில் ஒளி வரும் நேரம் 


பிரம கூர்ச்சம் = நெருப்பை வளர்க்க பயன்படும் தருப்பை முடிச்சு 


பிரம தேஜஸ் = நெருப்பின் ஒளி 


இவற்றால் 'பிரமம்' என்பதற்கு 'நெருப்பு' என்று பொருள் என்பது புலனாகிறது 


எனவே 'அந்தணர்,பிராமணர்,பார்ப்பார், ஆகிய மூன்று சொற்களுமே 'தீ வளர்ப்போர்' என்ற ஒரே பொருளில் தான் ஆதி தமிழர்களால் வழங்கப்பட்டு வந்தது 


ஆதாரம் புறநானூறு.......

No comments:

Post a Comment