Sunday, August 11, 2024

 *இன்றைய நாளில் பிறந்தவர்.*

(11-ஆக)

*வீ.துரைசுவாமி.*


🎻 1920ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி கர்நாடக இசை வீணை வித்துவான் மைசூர் வீ.துரைசுவாமி பிறந்தார்.


🎻 இவரது முதலாவது இசைக்கச்சேரி பெங்களூர் காயன சமாஜத்தில் 1943ஆம் ஆண்டு நடைபெற்றது.


🎻 சென்னையில் முதன்முதலாக 1944ஆம் ஆண்டு ரசிக ரஞ்சனி சபா ஏற்பாடு செய்த இசைக்கச்சேரியில் வீணை வாசித்தார்.


🎻 சங்கீத கலாநிதி விருது, சங்கீத கலாசிகாமணி விருது, பத்மபூஷண் விருது, சங்கீத நாடக அகாதமி விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். மைசூர் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய சிறப்பித்தது.


🎻 சிறிது காலம் கல்லீரல் அழற்சியால் (Hepatitis) பாதிக்கப்பட்டிருந்த துரைசுவாமி பெங்களூருவில் 1997ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி மறைந்தார்.


*ஸ்டீவ் ஓனியாக்.*.


💻 1950ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி ஆப்பிள் கணினி நிறுவனத்தை நிறுவியவர்களுள் ஒருவரான ஸ்டீவ் ஓனியாக் அமெரிக்காவில் பிறந்தார்.


💻 அமெரிக்கவைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப வல்லுநர் ஆவார்.


💻 இவர் 1976ஆம் ஆண்டு ஆப்பிள் கணினி நிறுவனத்தைத் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் உரோனால்டு வேன்னுடன் இணைந்து தொடங்கினார்.


💻 1970ஆம் ஆண்டு ஆப்பிள்-1 மற்றும் ஆப்பிள்-2 ஆகிய கணினிகளை சிறு குழுவின் உதவியுடன் உருவாக்கினார்.


*எனிட் பிளைட்டன்.*


✍ குழந்தைகளுக்கான நூல்களை எழுதி உலக அளவில் புகழ்பெற்ற எனிட் பிளைட்டன் (Enid Blyton) 1897ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி லண்டனில் பிறந்தார்.


✍ இவருக்கு சிறுவயதிலிருந்தே எழுத்து மீதான ஆர்வம் அதிகமாக இருந்தது. நாஷ் என்ற இதழில் அவரது கவிதை வெளிவந்த பிறகு வெற்றிப் பயணம் தொடங்கியது.


✍ இவரது கவிதைகள், கதைகள் 1921ஆம் ஆண்டு முதல் அதிக அளவில் பிரசுரமாகின. உலகில் மிக அதிகம் விற்பனையாகும் புத்தகங்களில் இவரது நூல்களும் இடம்பெற்றன.


✍ 'மாடர்ன் டீச்சிங்', 'விஷ்ஷிங் சேர்' தொடர், 'தி ஃபேமஸ் ஃபைவ்', 'சீக்ரட் செவன்', 'லிட்டில் நூடி சீரிஸ்' ஆகிய புத்தகங்கள் இவருக்குப் புகழை பெற்றுத் தந்தன.


✍ தனக்கென்ற புதிய படைப்புலக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய எனிட் பிளைட்டன் 1968ஆம் ஆண்டு மறைந்தார்.


*ரஞ்சன் ராய் டேனியல்.*


👉 1923ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி இந்திய இயற்பியலாளர் ரஞ்சன் ராய் டேனியல் நாகர்கோவிலில் பிறந்தார்.


👉 இவர் பிரபஞ்ச இயற்பியல் மற்றும் விண்வெளி இயற்பியல் துறைகளில் பணிபுரிந்தார்.


👉 மேலும் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆப் பர்மாண்டன் ஆராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராக இருந்தார்.


👉 1976ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி ஆலோசகராகவும் பணியாற்றிய இவர் 2005ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி மறைந்தார்.

No comments:

Post a Comment