Sunday, August 18, 2024

18 08 2024 செய்தித்துளிகள்

7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் எந்தவித கட்டணங்களையும் பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கக்கூடாது என்று தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7.5% இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசே செயல்படுத்தி வருகிறது என்றும் தொழில்நுட்ப கல்வி

இயக்ககம் தெரிவித்துள்ளது.

🍒🍒கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீது அரங்கேறும் அத்துமீறல்கள் மன்னிக்க முடியாதவை,

 மருத்துவர்களின் முழு பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்  

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

🍒🍒குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு, அறிவித்தபடி செப்டம்பர் 14ம் தேதிதான் நடைபெறும் 

செப்.28ம் தேதி என குறிப்பிடப்பட்டு பரவும் தகவல் குறித்து

TNPSC விளக்கம்.

🍒🍒வயநாடு நிலச்சரிவில் உயிரை பணயம் வைத்து உதவிய செவிலியர் சுதந்திர தினத்தில் பெற்ற விருதுடன் சொந்த ஊர் சென்ற போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

🍒🍒மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 20 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! 23ஆம் தேதி கடைசி நாள்

🍒🍒TNPSC - பொறியியல் பணி தேர்வு முடிவுகள் வெளியீடு: நேர்முகத் தேர்வுக்கு 644 பேர் அனுமதி.                                                                              🍒🍒அரசாணை 234ன் பலன்களை நீட்டித்து வழங்க உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பாணைகள் மீது ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் குறிப்புகள் வெளியிடுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - உயர் நீதிமன்ற தீர்ப்பானையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த வழிகாட்டுதல்கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 20.08.2024 அன்று விசாரணைக்கு வர உள்ளது.

🍒🍒டிப்ளமா, ஐடிஐ கல்வித் தகுதி கொண்ட 861 காலிப் பணியிடங்களுக்கு நவம்பரில் தேர்வு:- டிஎன்பிஎஸ்சி

🍒🍒பள்ளிக் கல்வித் துறை - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2024 2026-ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு -அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் புதிதாக தெரிவு செய்யப்படும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் விவரம் EMIS இல் பதிவேற்றம் செய்தல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் - சார்பு அறிவிப்பு வெளியீடு.

🍒🍒இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க உத்தரவு

மாவட்ட வாரியாக ஆய்வு செய்து விவசாய பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகளை கணக்கெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய மின் வாரியத்திற்கு தமிழக அரசு உத்தரவு 

தமிழகத்தில் 23.56 லட்சம் இலவச மின் இணைப்புகள் விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளன

ஒவ்வொரு மின் இணைப்புக்கும் ஆண்டுக்கு ரூ.30,000 மின்சார துறைக்கு, வேளாண்துறை வழங்கி வருகிறது

விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்திருக்கும் நிலையில் தமிழக அரசு நடவடிக்கை

🍒🍒பார்முலா 4 கார் பந்தயம் - வீரர்கள் பெயர் வெளியீடு

சென்னையில் நடைபெற உள்ள ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பங்கேற்கும் வீரர்களின் பெயர்கள் வெளியீடு

இந்தியன் ரேசிங் லீக் போட்டியில் இந்திய வீரர்கள் ருஹானல்வா, அகில் ரபிந்திரா பங்கேற்க உள்ளனர்

ஸ்விட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கார் பந்தய வீராங்கனை பேபினே உள்வென்ட், வீரர் நீல் ஜெயின் பங்கேற்க உள்ளார்

இந்தியாவின் முதல் இரவு நேர கார் பந்தயமான சென்னை ஃபார்முலா ஆகஸ்ட் 31 மற்றும் செப். 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது

ஆக. 24 மற்றும் 25 தேதிகளில் இந்தியன் ரேசிங் லீக் மெட்ராஸ் இன்டர்நேஷனால் சர்க்யூட்டில் போட்டிகள் துவங்க உள்ளது.

🍒🍒13 அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை"

"பிரதமர் வீட்டு வசதி திட்ட நிதியில் முறைகேடு செய்ததாக 13 அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை"

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

"கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிதி கையாடல் தொடர்பாக அம்மாவட்டத்தில் 13 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது"

"முறைகேடு தொடர்பாக அரசுக்கு அறிக்கை கிடைத்துள்ளது, விரைவில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்" 

தமிழக அரசு                      

🍒🍒சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்வு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,670க்கும், ஒரு சவரன் ரூ.53,360க்கும் விற்பனை

🍒🍒நாடாளுமன்ற பொது கணக்கு குழு தலைவராக காங்கிரஸ் கட்சியின் கே.சி.வேணுகோபால் நியமனம்

🍒🍒தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை வரும் 22ம் தேதி விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்

முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு முன்பாக கட்சி கொடியை தவெக தலைவர் விஜய் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்

🍒🍒ரூ.1916.41 கோடியில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் விவசாயம், குடிநீர்  தேவைகளை நிறைவேற்ற உதவும் திட்டம்

🍒🍒அமைச்சரவையின் முடிவை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம் சாட்டி உள்ளார்.

முடா முறைகேடு குறித்த புகாரில் விசாரணைக்கு ஒப்புதல் தரும் முடிவை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என ஆக.1-ல் கர்நாடக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை மீறி ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளதாக டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். முதல்வர் சித்தராமையாவுக்கு துணையாக கர்நாடக அமைச்சரவை உள்ளதாக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் குறிப்பிட்டுள்ளார்.

🍒🍒சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை 6 மாதங்களில் 1,000 பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டிலேயே அதிநவீன வசதிகள் கொண்ட துறையாக கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை இருதயவியல் துறை திகழ்கிறது. இருதயவியல் துறையில் 6 மாதத்தில் சுமார் 30,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

🍒🍒தமிழகத்தில் தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்கள் அதிகம் உள்ளனர்: 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

🍒🍒மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கப்படும்: மத்திய அரசு.

👉மாநில அரசுகளின் பிரதிநிதிகள் உட்பட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு மருத்துவர்களின் பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்த ஆலோசனைகள் பெறப்படும் என மத்திய சுகாதாரத்துறை உறுதி.

மேற்கு வங்கம் - பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்ப மத்திய அரசு அழைப்பு.

🍒🍒நாடு திரும்பினார் தங்க மகள் வினேஷ் போகத்.

டெல்லி வந்த வினேஷ் போகத்துக்கு மேள தாளங்களுடன் சக வீரர்கள் கண்ணீர் மல்க வரவேற்பு

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹தொலைநிலையில் உயர்கல்வி; புதிய நடைமுறை அறிவிப்பு.

👉திறந்தநிலை கல்வி, தொலைநிலை கல்வி மற்றும் ஆன்லைன் கல்வியை கற்க விரும்பும் மாணவர்களுக்கான, புதிய சேர்க்கை நடைமுறைகளை, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ளது.

👉நாட்டில் அங்கீகரிக்கப்படாத பல்வேறு கல்வி நிலையங்கள் ஆன்லைன் வழியாகவும், தொலைநிலை வழியாகவும், திறந்தநிலை வாயிலாகவும், பல்வேறு படிப்புகளை நடத்துகின்றன. அவற்றில் படித்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதையும், புகார்களின் வாயிலாக யு.ஜி.சி., அறிந்தது.

👉இதை தடுப்பதற்கான ஆலோசனை கூட்டம், ஜூன் 25ல், டில்லியில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி, புதிய நடைமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

👉இதுகுறித்து, யு.ஜி.சி., தலைவர் மமிதாலா ஜெகதேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

👉இந்த கல்வியாண்டின், தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கைக்கான புதிய நடைமுறை, அடுத்த மாதம் அமலாகும்.

👉அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் மட்டுமே மாணவர்கள் சேருவதை, வெளிப்படைத்தன்மையுடன் உறுதி செய்ய முடியும். 

மாணவர்கள், யு.ஜி.சி.,யின், 

ஆட்  என்ற இணையதளத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தொலைதுார கல்வி நிஅறுவனங்களின் பட்டியலை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும், யு.ஜி.சி - டி.இ.பி., இணையதள போர்ட்டலின் மாணவர்களுக்கான, 

deb.ugc.ac.in/StudentDebId என்ற பக்கத்தில் பதிவு செய்து, அவர்களின், 'அகாடமிக் பாங்க் ஆப் கிரடிட்' -ஐ.டி.,யை பயன்படுத்தி, தனித்துவமான ஆயுள் கால அடையாள குறியீட்டை பெற வேண்டும்.

இதை பயன்படுத்தி தான், தொலைநிலை கல்வி சேர்க்கையில் இணைய முடியும். 

இந்த ஆயுள் கால ஐ.டி.,யைதான், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களும் ஏற்க வலியுறுத்தப்படும்.

இதனால், அங்கீகாரமில்லாத நிறுவனங்கள் மற்றும் படிப்புகளில் சேர்வதை தவிர்க்க முடியும்.

🍒🍒🍒

No comments:

Post a Comment