Thursday, September 19, 2024

தொழிநுட்பம் மட்டுமே வாழ்க்கை இல்லை!


வயதான  தந்தையுடன் ஒருவர் வங்கிக்கு செல்ல வேண்டி இருந்தது, சுமார் ஒரு மணி நேரம் ஆனது அவரது நண்பருக்கு பணம் அனுப்பி பின் அவருடைய ரிடயர்மென்ட் பணம் தொடர்பாக பேசி வீடு வந்து சேர!

ஆவல் மிகுதியில் அப்பாவிடம், ஏன் நீங்கள் ஆன்லைன்ல நெட் பேங்கிங் பண்ண கூடாது, நீங்க வங்கிக்கு போக தேவை இல்லை, நீண்ட

வரிசையில் நிற்க தேவை இல்லை, உங்கள் நேரமும் வீண் ஆகாது என்று  மகன் யோசனை சொல்ல!

அதற்கு அவரது  அப்பா!

” மகனே! இந்த நெட் பேங்கிங் இருந்தால் நான் வீட்டை விட்டு வெளியே செல்ல தேவை இல்லை ஆனால் வீட்டில் முடங்கி போவேன்!

இன்று வங்கிக்கு வந்ததால் என் நான்கு நண்பர்களை சந்திக்க முடிந்தது. எங்கள் நட்பை அன்பை பரிமாறி கொள்ள முடிந்தது. வங்கி ஊழியர் ஒருவரின் நட்பும் கிடைத்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன் நான் உடம்பு சரி இல்லாமல் படுக்கையில் இருந்த போது! நான் எப்பொழுதும் பழம் வாங்கும் கடைக்காரர் என்னை வந்து பார்த்து, அமர்ந்து பேசி ஆறுதல் சொல்லி விட்டு சென்றார்!

போன வாரம் உன் அம்மா காலையில் வாக்கிங் செல்லும் போது கால் தடுக்கி

கீழே விழ அங்கு இருந்த நம் மளிகை கடை அண்ணாச்சி ஆட்டோ வைத்து அம்மாவை வீட்டில் வந்து விட்டு சென்றார்.

இந்த மனித உறவுகள் நீ சொல்லும் ஆன்லைனில் இன்டர்நெட் பேங்கிங் இல் கிடைக்குமா! நான் இருக்கும் இடத்திலேயே எல்லா பொருட்களும் கிடைக்கும் என்பதற்காக உயிரில்லா கணிப்பொறியுடன்

உறவை வைத்து கொள்ள வேண்டுமா! நான் சந்திக்கும் மனிதர்கள் நட்பாக, நல்ல உறவுகளாக மாறுகிறார்கள்!

இவைகளை உன் அமேசான், பிளிப்கார்ட் தருமா!

தொழிநுட்பம் மட்டுமே வாழ்க்கை இல்லை!

மனிதர்களுடன் அதிகம் செலவு செய்ய வேண்டும் என்று சொல்லி முடித்தார்!

No comments:

Post a Comment