Sunday, September 1, 2024

 *தசாங்கம் என்றால் என்ன?*

தசாங்கம் என்பது தூபம்  (புகையூட்டுதல்) -லுக்கு பயன்படும் ஒரு வகை மூலிகை சாம்பிராணி வகை ஆகும். 

ஆதி காலத்தில் இருந்து தெய்வத்திற்கு தூபம் காட்ட பயன்படுத்தி வரும் மூலிகை பொருள் இவற்றில் அபிஷேகம் செய்ய சேர்க்கப்படுகின்ற மகத்துவம் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்த அற்புதமான  பொருள். 


இதன் புகையில் இருக்கும் பலன்கள் சொல்லில் அடங்காதவை என்றே கூறலாம். குழந்தைகளுக்கு சிறப்பான மருத்துவம் இது


தசாங்கத்தில் பத்து வகையான மூலிகை பொருட்கள் இருக்கின்றன. 


இந்த பத்து வகை மூலிகை பொருட்களும் மகத்துவம் வாய்ந்தவை இவை அனைத்தையும் ஒன்றாக கலந்தால் தான் தசாங்கம் என்கிற அற்புத பொருள் உருவாகிறது.


இவை சித்தர்கள் அருளிய குறிப்புகளில் இருந்து பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. 


*தசாங்கத்தில் உள்ள மூல பொருட்கள்:*


*1. வெட்டி வேர்* 


*2. இலவங்கம்*


*3. வெள்ளை குங்குலியம்* 


*4. ஜாதிக்காய்* 


*5. மட்டிப்பால்*


*6. சந்தான தூள்*


*7. நாட்டு சர்க்கரை* 


*8. திருவட்ட பச்சை* 


*9. பால் சாம்பிராணி*


*10. கீச்சிலி கிழங்கு* 


*தசாங்கத்தின் பயனும் பலன்களும்:*


இந்த தசாங்கத்தின் புகையானது உடலின் பல்வேறு உடல் உள் உறுப்புகளின் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதன் நறுமணமே தெய்வீக உணர்வை உண்டாக்குபவையாக இருக்கும். துஷ்ட சக்திகளை இதன் புகை விரட்டி விடும். எனது பாட்டி/ எனது தாய் இவற்றை குழந்தைகளுக்கு திருஷ்டி கழிக்க உபயோகித்தார்கள் 


இதன் புகையை நுகர்வதால் நம் உடலும், மனமும் சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பு அடைந்து விடும். வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் அனைத்தும் மாயமாய் மறைந்தே போகும். இதற்கு அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த சக்தி இருக்கிறது. கோவில்களில் இருக்கும் நறுமணம் போல் நமது வீட்டிலும் அதன் மனம் நிறைந்து இருக்கும். உங்கள் தெருவே மணக்கும். 


*தசாங்கம் பயன்படுத்தும் முறை:*


தசாங்கம் ஏற்றி வீடுகளில் மூலை, முடுக்குகள் விடாமல் காண்பிக்க வேண்டும். இப்படி செய்வதால் வீட்டில் உள்ள துர் சக்தி மற்றும் நச்சுப் பூச்சிகள் வராது பூஜை அறையில் இறைவனுக்கு காண்பிக்க வேண்டும். குழந்தைகளுக்கு உடல் முழுவதும் படும் படி காண்பிக்க வேண்டும். திருஷ்டி கழிப்பதற்கு யாருக்கு திருஷ்டி கழிக்க வேண்டுமோ அவர்களை கிழக்கு பார்த்து உட்கார வைத்து மும்முறை சுற்றி திருஷ்டி கழிக்கலாம்.


சகல விதமான ஐஸ்வர்யமும் வீட்டில் சேரும்.


மேலும் தொடர்ந்து பயணிப்போம் 


சித்தர்கள் நம்மை வழி நடத்தட்டும் 


நன்றி

No comments:

Post a Comment