Sunday, September 1, 2024

 


*தினம் ஒரு மூலிகை* *அதிவிடயம்* மலைச்சாரலில் அகன்ற கூர் நுனி உடைய நேராக உயர்ந்து வளரும் ஒரு செடி இனம் வேர்கள் கிழங்கு வடிவானவை வேர் மருத்துவ பயன் உடையது உலர்ந்த வேர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பசி தூண்டுதல் காமம் பெருக்குதல் உடல் பலம் மிகுதல் முறை காய்ச்சல் தணித்தல் ஆகிய குணம் உடையது அதிவிடயம் ஒரு கிராம் கழற்சி விதை இரண்டு கிராம் ஆகியவற்றை பொடித்துக் கலந்து வைத்துக் கொண்டு அரை கிராம் முதல் ஒரு கிராம் காலை மாலை தேனில் கொடுத்து வர பித்த காய்ச்சல் விட்டு விட்டு வரும் காய்ச்சல் ஆகியவை தீரும் அதிவிடயப் பொடியை 250மி.கி முதல்500மிகிராம் வரை நாளும் மூன்று வேளை கொடுத்து வர காய்ச்சலுக்குப் பின் ஏற்படும் அசதியை போக்கும் இடையே உடல் திடத்திற்கு ஏற்ப அளவை கூட்டியும் குறைத்தும் கொடுக்க தெரியாமை கழிச்சல் சீத கழிச்சல் வாதம் மூலம் மூலக்கடுப்பு ஆகியவை தீரும் அதிவிடயம் சிற்றாமுட்டி முத்தக்காசு கர்க்கடசிங்கி பேய்மிரட்டி ஆகியவற்றை சம அளவு உலர்த்தி பொடித்து அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை அளவாக தேனில் குழைத்து காலை மாலை கொடுத்து வர வயிற்றுப்போக்குடன் உள்ள காய்ச்சல் தீரும் நன்றி.

No comments:

Post a Comment