Thursday, September 19, 2024

குங்கிலியம் - தினம் ஒரு மூலிகை

 *தினம் ஒரு மூலிகை* *குங்கிலியம்*


மலை காடுகளில் தானே வளரும் கருமருது எனப்படும் மரத்தின் பிசினே குங்கிலியம் எனப்படும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் தூய வெண்மையான நிறமான வெள்ளை குங்கிலியம் அக மருந்தாகவும் பழுப்பு நிறமுடைய புற மருந்தாகவும் பயன்படும் இதனை இளநீரில் கொதிக்க வைத்து சுத்தி செய்த பின் பயன்படுத்துதல் சாலச் சிறந்தது உடல் வெப்பம் மிகுதல் கோழை அகற்றுதல் தடிப்பு உண்டாக்குதல் தீனாற்றம் நீக்கல் ஆகிய மருத்துவ குணம் உடையது குங்கிலியத்தை பொடித்து ஒரு கிராம் அளவாக 250 மில்லி பாலில் கலந்து காலைதோறும் பருகிவர தாது பலம் மிகும் குங்கிலியத்துடன் சம அளவு பொரித்த படிகாரம் கலந்து அரை கிராம் அளவாய் சர்க்கரை சேர்த்து கொடுத்து வர பசியின்மை சீத கழிச்சல் வெள்ளை பெரும்பாடு உள்மூலம் ஆகியவை குணமாகும் குங்கிலியம் 20 கிராம் மாம்பருப்பு 25 கிராம் இலவம் பிசின் 10 கிராம் ஜாதிக்காய் 25கிராம் உலர்ந்த வில்வ பழ சதை 25 கிராம் ஆகியவற்றை பொடித்து கலந்து வைத்துக்கொண்டு 250 மில்லி அளவாக இரண்டு அல்லது மூன்று வேளை நெய்யில் குழைத்து கொடுத்து வர நீர்த்த கழிச்சல் சீதக்கழிச்சல் ஆகியவை தீரும் நன்றி

No comments:

Post a Comment