Thursday, August 8, 2024

செய்தித்துளிகள்

 *இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*


8.08.2024(வியாழக்கிழமை)

*சிந்தனை துளிகள்*


 யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று நினைப்பர்கள் தான் எல்லோராலும் கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்.!


பணத்தினால் வரும் பாசம் பணம் இருக்கும் வரை...

அழகினால் வரும் பாசம் இளமை இருக்கும் வரை...

ஆனால் குணத்தினால் வரும் பாசம் மட்டுமே உயிர் இருக்கும் வரை நிலைத்து இருக்கும்.!!


ஒருவருடைய மனதில் இருக்கும் வலிகளையும் வேதனைகளையும் ஒருபோதும் அடுத்தவர்களால் உணர முடியாது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏


*


 

🍒🍒போக்சோ சட்டம் பற்றிய காணொலிகளை பள்ளிகளில் திரையிட தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

🍒🍒டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் பெயர் பட்டியல் வெளியீடு.

🍒🍒 “அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் முடிவை கைவிடுக” - தினகரன்

🍒🍒ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தல் - நீதிமன்றத்தில் பெறப்படும் தீர்ப்பாணைகளுக்கு, நடைமுறையில் உள்ள அரசாணைகளை கருத்தில் கொண்டு உரிய ஆணைகள் வழங்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

🍒🍒ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - பணியாளர் தொகுதி - மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் நிலையில் உள்ள அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் மற்றும் பணியிடம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

🍒🍒09.08.2024 அன்று விசாரணைக்கு வர இருந்த உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 14.08.2024க்கு விசாரணைக்கு வர உள்ளது.

🍒🍒பிறப்பு சான்றிதழில் 15 ஆண்டுகளாக பெயர் சேர்க்காதவர்கள் வரும் டிசம்பர் 31 க்குள் பெயர் சேர்த்துக் கொள்ளலாம் என அறிவிப்பு வெளியீடு.

🍒🍒நீட் முதுகலை மருத்துவ படிப்பிற்கான வினாத்தாள் வெளியாகவில்லை டெலிகிராம் வலைதளத்தில் முதுகலை நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள்  70 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக   வெளியான தகவல் பொய்யானது என்று தேசிய மருத்துவக் கல்வி வாரியம் அறிவிப்பு.

🍒🍒தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் 2024-25ம் ஆண்டுக்கான தரவரிசை நேற்று வெளியானது.

இளநிலை கால்நடை மருத்துவம், பராமரிப்பு படிப்புகள், கோழி இன தொழில்நுட்பம் மற்றும் பால்வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் வெளியானது.

🍒🍒இளங்கலை மருத்துவப் படிப்புகள் (எம்.பி.பி.எஸ்.) உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்க இன்று 8-ஆம் தேதி வரை காலக்கெடுவை சென்டாக் நிா்வாகம் நீட்டித்துள்ளது.

இதுகுறித்து சென்டாக் நிா்வாகம் தரப்பில் கூறியிருப்பதாவது:

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் (பல் மருத்துவம்), பி.ஏ.எம்.எஸ். (ஆயுா்வேதம்), கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கைக்கு கடந்த ஜூலை 28 -ஆம் தேதி முதல் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. அதன்படி, மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்.

இந்த நிலையில், விண்ணப்பிக்க கடந்த செவ்வாய்க்கிழமை (ஆக. 6) இறுதி நாளாக சென்டாக் அறிவித்திருந்தது.

மேலும், 1,300-க்கும் மேற்பட்டோா் வருவாய் சான்றிதழை சமா்ப்பிக்காமலும் உள்ளனா்.ஆகவே, அவா்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கும் வகையில்,இன்று 8-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்டாக் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை விண்ணப்ப கட்டணமாக, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு, ரூ. 500, இதர பிரிவினருக்கு ரூ.1,000 கட்டணம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நிா்வாக இடங்கள், சுய நிதி இடங்களுக்கு எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.1,000, இதர பிரிவினா், பிற மாநில மாணவா்களுக்கு ரூ.2,000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. என்.ஆா்.ஐ., பிரிவினருக்கு ரூ. 5,000 விண்ணப்பக் கட்டணமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி குடியுரிமையுள்ள மாணவா்கள் ரூ.20 க்கான இ.ஸ்டாம்ப் பேப்பரில் உறுதிமொழி படிவத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும். 

அந்த படிவத்தில் முதல் வாதியாக பெற்றோா் பெயரும், இரண்டாம் வாதியாக (பாா்ட்டி) கன்வீனா், சென்டாக் இடம் பெற வேண்டும். அதில் பெற்றோரும், மாணவரும் கையொப்பமிட வேண்டும்.

உறுதிமொழி படிவத்தில், எக்ஸிகியூட்டி மாஜிஸ்திரேட், நோட்டரி கையொப்பம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.அத்துடன் மாணவா் சோ்க்கை சம்பந்தமான சந்தேகங்களுக்கு சென்டாக் மின்னஞ்சல் முகவரியிலும்,

 0413-2655570, 2655571 என்ற தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

🍒🍒நீலகிரி மாவட்டம் கோக்கால் பகுதியில், மண்ணில் புதையும் வீடுகள்

வீடுகள் மண்ணில் புதைவதற்கான காரணம் குறித்து புவியியல் வல்லுநர்கள் நேரில் ஆய்வு

இந்திய புவியல் மூத்த வல்லுநர் யுன்யெலோ டெப் தலைமையில்  ஆய்வு

அதிநவீன கருவிகள் மூலம் நேற்று முதல் 20 நாட்கள் ஆய்வு நடைபெற உள்ளது

நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னோட்டமா, புதிய கட்டடங்கள் கட்டப்படுவதால் பாதிப்பா என ஆய்வு.

🍒🍒வெண்கலம் வென்ற மனு பாக்கருக்கு உற்சாக வரவேற்பு!

பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டைப் பதக்கம் வென்று நாடு திரும்பிய

மனு பாக்கருக்கு  ரசிகர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்

10 மீ. தனி நபர் ஏர் பிஸ்டல், 10 மீ. ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார் மனு பாக்கர்

🍒🍒முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிறைவையொட்டி, அவரது உருவம் பொறித்த ரூ.100 நாணயம்

வரும் 17ஆம் தேதி, சென்னையில் கருணாநிதி நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

சென்னை கலைவாணர் அரங்கில் விழா ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட உள்ள இந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.

🍒🍒சந்திரயான்-3 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகள், பொறியாளர்களுக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 33 பேருக்கு ராஷ்ட்ரிய விஞ்யான் புரஸ்கார் விருதுகளை மத்திய அரசு அறிவித்தது.

🍒🍒தமிழகத்தைச் சேர்ந்த நெசவாளர் பாலகிருஷ்ணனுக்கு டெல்லியில் தேசிய கைத்தறி விருது வழங்கப்பட்டது.

மத்திய ஜவுளித் துறை சார்பில் டெல்லியில் நடந்த விழாவில் விருதை துணை குடியரசுத் தலைவர் வழங்கினார். விருதுடன் சேர்ந்து ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையையும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் வழங்கினார்

🍒🍒அமெரிக்காவைச் சேர்ந்த கம்பியூட்டர் தயாரிப்பு நிறுவனமான DELL, அதன் SALES பிரிவில் இருந்து 12,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவுள்ளதால் இந்த முடிவு என விளக்கம் அளித்துள்ளது. கடந்தாண்டு சுமார் 13,000 ஊழியர்களை DELL பணிநீக்கம் செய்திருந்தது.                                           🍒🍒வினேஷ் போகத் தகுதி நீக்க விவகாரத்தில் எந்த மாற்றமில்லை என்று சர்வதேச மல்யுத்த சங்கம் உறுதி அளித்துள்ளது.

100 கிராம் எடைக்காக அனுமதித்தால் மற்றவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டிவரும். போட்டிக்கான விதி என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியானது தான் என்று சர்வதேச மல்யுத்த சங்கம் கூறியுள்ளது.

🍒🍒SSLV என்ற சிறு செயற்கைக் கோள் ஏவும் ராக்கெட் மூலம் ஆக.15-ம் தேதி சுதந்திர தினத்தன்று EOS-08 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்பட உள்ள செயற்கைக் கோளில் 3 முக்கிய கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

🍒🍒வினேஷ் போகத்.. 

நீங்கள் சாம்பியன்களின் சாம்பியன். இந்தியாவின் பெருமை, ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிப்பவர். உங்களுடைய இந்த பின்னடைவு மிகுந்த வருத்தத்தை தருகிறது. என்னுடைய வருத்தத்தை விவரிக்க வார்த்தைகளே கிடையாது.

சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வதுதான் உங்கள் இயல்பு. இதிலிருந்து மீண்டு வலிமையாக வாருங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்”

பிரதமர் மோடி ஆறுதல்

🍒🍒இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி.உஷாவை தொடர்பு கொண்டு வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி பரிந்துரை அளித்துள்ளார்.

🍒🍒வங்காள தேசத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் 400 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.

🍒🍒உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய அளவில் 2-வது இடத்தை பிடித்து தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

595 உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து தேசிய அளவில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. உடல் உறுப்புகளுக்காக காத்திருந்தவர்களுக்கு 178 உடல் உறுப்புகள் வெற்றிகரமாக பொருத்தப்பட்டு சாதனை படைத்தது. இந்தியாவில் அதிகளவில் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

🍒🍒முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13ம் தேதி கூடுகிறது அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 13ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

உலக முதலீட்டாளர் மாநாட்டின் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

🍒🍒பங்களாதேஷில் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். 

இந்துக்கள் தாக்கப்படுவதாக பொய்யான வீடியோக்களை நம்பவேண்டாம்

இங்க நடப்பது இடஒதுக்கீடு, வேலை வாய்ப்புக்கான போராட்டம்.

மத கலவரம் அல்ல

வங்கதேசம் இந்து அமைப்பு

🍒🍒சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைவு

ஒரு கிராம் தங்கம் ரூ.6,330க்கும், ஒரு சவரன் ரூ.50,640க்கும் விற்பனை

🍒🍒நாளை நடைபெறுவதாக இருந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் ஒத்திவைப்பு

🍒🍒இரவு 10 மணிக்குள் தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்

👉இரவு 10 -11 மணிக்குள் தூங்குவதால் இதயம் மற்றும் அது சார்ந்த நோய் அபாயங்கள் குறைவதாக ஐரோப்பிய ஹார்ட் ஜர்னல் நடத்திய ஆய்வு கூறுகிறது.

👉தினமும் 8-9 மணி நேரம் உறக்கம் பெற வாய்ப்புள்ளதால், உடல் முழுமையாக ஓய்வெடுக்க வழிவகுக்கிறது.

👉ஹார்மோன்களில் சமநிலை ஏற்படுவதால், வேலையில் செயல்திறன் அதிகரிக்கிறது.

👉இதனால் நோய் எதிர்ப்பு மண்டலம் நல்ல வலுப்பெறுவதால், உடல் முழுமையான ஆரோக்யம் பெறுகிறது.

No comments:

Post a Comment