Saturday, August 24, 2024

வெள்ளறுகு



தினம் ஒரு மூலிகை* *வெள்ளறுகு*.   வெளியே இலைகளை மாற்றடுக்கில் கொண்ட வெண்மையான பூக்களை கொண்ட சிறு செடி கசப்பு சுவை உடையது சமூகத்தை உலர்த்தி பாதுகாப்பாக வைத்திருக்க பல ஆண்டுகள் கூட கெடாமல் நின்று பயன் தரக்கூடியது வெள்ளருகு இதில் இரும்பு சத்து பொட்டாசியம் சோடியம் கால்சியம் குளோரைடு சல்பேட் பாஸ்பேட் மற்றும் வைட்டமின் சி மற்றும் பி ஆகியன அடங்கி உள்ளன நோய் நீக்கி உடல் தேற்றவும் பசி மிகுக்கவும் தாது பலம் மிகுக்கவும் மருந்தாக பயன்படுகிறது சமூகச் சாறு 25 மில்லி கொடுத்து இலையை அரைத்து கடிவாயில் கட்ட வாந்தி பேதியாகி பாம்பு நஞ்சு தீரும் ஓரிரு முறை கொடுக்க வேண்டும் உப்பில்லா பத்தியம் தேவையான சமுலம் மையாய் அரைத்து வெந்நீரில் குழைத்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்து வர சொறி சிரங்கு தினவு மேகத் தடிப்பு ஊழல் ஆகியவை தீரும் மாதவிடாயின் முதல் மூன்று நாட்கள் சமூகத்தை எலுமிச்சை அளவு அரைத்து குடிக்க கர்ப்பப்பை மாதவிடாய் கோளாறு தீரும் சமூலம் ஒருபிடி 10 மிளகு ஒரு துண்டு சுக்கு ஒரு தேக்கரண்டி சீரகம் ஆகியவற்றை சிதைத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக காய்ச்சி காலை மாலை குடித்து வர குடல் வாதம் வாத ரோகங்கள் தீரும்.

No comments:

Post a Comment