Tuesday, August 13, 2024

 *இன்றைய நாளில் பிறந்தவர்.*

(13-ஆக)

*டி.கே.மூர்த்தி.*


🎶 தமிழ்நாட்டின் தலைசிறந்த மிருதங்க வித்வான்களில் ஒருவரான டி.கே.மூர்த்தி 1924ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி திருவனந்தபுரம்-கன்னியாகுமரி வழித்தடத்தில் அமைந்துள்ள நெய்யாத்தங்கரையில் பிறந்தார். தாணு பாகவதர் கிருஷ்ணமூர்த்தி என்பது இவரின் முழுப்பெயர்.


🎶 சிறுவயதிலிருந்தே இவருக்கு மிருதங்கம் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். இவரது முதலாவது கச்சேரி இவர் 10 வயதாக இருக்கும்போது நடைபெற்றது.


🎶 இவரின் திறமையைப் பார்த்து தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் தன்னோடு சேர்த்துக் கொண்டார். இவர் எம்.எஸ்.சுப்புலட்சுமி, செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற பல பிரபலங்களுக்கு வாசித்துள்ளார்.


🎶 மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமி விருது, சென்னை மியூசிக் அகாடமியின் 'சங்கீத கலாநிதி' விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.


*பிடல் காஸ்ட்ரோ.*


👨‍💼 1926ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி கியூபாவைச் சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும், அரசியல்வாதியுமான பிடல் காஸ்ட்ரோ பிறந்தார்.


👨‍💼 கியூபாவில் 1959ஆம் ஆண்டு தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிடல் காஸ்ட்ரோ 1959ஆம் ஆண்டு முதல் 1976ஆம் ஆண்டு வரை கியூபாவின் பிரதமராகவும், 1976ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.


👨‍💼 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட பிடல் காஸ்ட்ரோ 2008ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகினார். பிடல் காஸ்ட்ரோ உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் ஆவார்.


👨‍💼 பன்னாட்டளவில் பிடல் காஸ்ட்ரோ 1979ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டு வரை மற்றும் 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்துள்ள இவர் 2016ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் ஆண்டு மறைந்தார்.


*ஃபிரெட்ரிக் சேங்கர்.*.


👨‍🔬 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதி இன்சுலினின் கட்டமைப்பு மற்றும் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடரை கண்டுபிடித்த ஃபிரெட்ரிக் சேங்கர் இங்கிலாந்தில் பிறந்தார்.


👨‍🔬 இவர் நியுக்ளிக் அமிலத்தின் சங்கிலித் தொடர் தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக 1980ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக வேதியியலுக்கான நோபல் பரிசை வால்டர் கில்பெர்க் என்பவருடன் இணைந்து வென்றார்.


👨‍🔬 இதன்மூலம் இவர் 2 முறை நோபல் பரிசை வென்ற 4வது நபராகவும், வேதியலுக்காக 2 முறை நோபல் பரிசை வென்ற ஒரே விஞ்ஞானி என்ற பெருமையையும் பெற்றார்.


👨‍🔬 இவர் ஒற்றை இழை வார்ப்புருக்களிலிருந்து புதிய டிஎன்ஏ போக்குகளை (strands) உருவாக்க கதிரியக்க நியூக்ளியோடைட்களை அறிமுகம் செய்தார்.


👨‍🔬 காப்ளே பதக்கம் பெற்ற ஃபிரெட்ரிக் சேங்கர் 2013ஆம் ஆண்டு தனது 95வது வயதில் மறைந்தார்.

No comments:

Post a Comment