Monday, August 26, 2024

வேலிப்பருத்தி

 *தினம் ஒரு மூலிகை* *வேலிப்பருத்தி*

இதய வடிவ இலைகளை மாற்றடுக்கில் கொண்டு பசுமை நிற பூங்கொத்துக்களையும் மென்மையான முட்களை கொண்ட காய்களை உடைய பால் உள்ள பிசுபிசுப்பான ஏறு கொடி முட்டை வடிவ விதைகளில் பட்டு போன்ற பஞ்சு இழைகள் காணப்படும் இதனை உத்தாமணி என்றும்

அழைப்பார்கள் வேலிகளில் தானே வளர்கிறது இல்லை வேர் ஆகியவை மருத்துவ பயன் உடையவை வாந்தி உண்டாக்குதல் கோழை அகற்றுதல் முறை நோய் நீக்குதல் இசிவு போக்குதல் ஆகிய குணங்களை உடையது அரிப்பு தடிப்பு இவற்றிற்கு இலை சாறு தடவலாம் இலையை வதைக்கி துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க கீல் வாதம் முடக்குவாதம் வாத குடைச்சல் இடுப்பு வலி முதலியன குணமாகும் சாற்றுடன் சுக்கு பெருங்காயம் பொடித்து காய்க்கு இளம் சூட்டில் பற்று போட வாத வலி வீக்கம் குணமாகும் யானைக்கால் நோய் தொடக்க நிலையில் இருந்தால் 40 அல்லது 50 நாட்களில் குணமாக்கலாம்.

*தினம் ஒரு மூலிகை* நேற்றைய தொடர்ச்சி *வேலிப்பருத்தி*  வேரை உள்ள தீ தூள் செய்து இரண்டு முதல் நான்கு சிட்டிகை வரை பாலில் கொடுக்க குழந்தைகளின் வாயு தொல்லைகள் நீங்கி பேதியாகும் பூச்சி கிருமிகள் சாகும் இலை சாற்றில் ஏழு முறை மிளகை ஊற வைத்து உலர்த்தி தூள் செய்து இரண்டு முதல் நான்கு அரிசி எடை பால் அல்லது தேனில் குழந்தைகளின் தெரியாமை வாந்தி மந்தம் மாந்த இலுப்பு கைகால் சில்லிட்டு போதல் ஜுரம் முதலிய சகல குழந்தை வியாதிகளுக்கும் கொடுக்கலாம் ஐந்து கிராம் வேரை பாலில் அரைத்து கலக்கி வடிகட்டி காலை மாலை மட்டும் 3 நாள் கொடுக்க நஞ்சுக்கடி கரப்பான் கிராண்டி பிடிப்பு வாயு முதலென போகும் வேலிப்பருத்தி பொடுதலை நுணா நொச்சி ஆகியவற்றின் இலைகளை வகைக்கு ஒரு பிடி வதைக்கு பிழிந்த சாறு பத்து மில்லி கொடுக்க சளியோடு கூடிய மாந்தம் தீரும் .வேலி பருத்தி இலையுடன் நாட்டு வெங்காயம் சம அளவு கலந்து அரைத்து அதை துணியில் வடிகட்டி வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர கர்ப்ப பை தொடர்பான நோய்கள் தீரும் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

நன்றி

No comments:

Post a Comment