Sunday, September 1, 2024

 *இன்றைய நாளில் பிறந்தவர்.*

(01-செப்)

*புலித்தேவர்.*


🐅 இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த முன்னோடி புலித்தேவர் 1715ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் 'காத்தப்ப பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்' என்னும் பெயர் 'புலித்தேவர்' என்று அழைக்கப்பட்டது.


🐅 இந்திய விடுதலை வரலாற்றில் 'வெள்ளையனே வெளியேறு' என்று முதல்முறையாக 1751ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க் கலகத்திற்கு (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.


🐅 தமிழ்நாடு அரசு, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் புலித்தேவர் நினைவைப் போற்றும் வகையில் புலித்தேவர் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளது.


*அ.வரதநஞ்சைய பிள்ளை.*.


✍ 1877ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தமிழரசி குறவஞ்சி, கருணீக புராணம் போன்ற நூல்களின் ஆசிரியர் தமிழறிஞர் அ.வரதநஞ்சைய பிள்ளை பிறந்தார்.


✍ தமிழுடன் தெலுங்கையும், வடமொழியையும் அறிந்த இவர் கவிபாடுவதில் வல்லவர்.


✍ கரந்தைச் தமிழ்ச் சங்கத்தில் 'ஆசிரியர்' என்னும் சிறப்புப் பட்டம் பெற்றவர்.


✍ கரந்தைச் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளி விழாவின் பொழுது ஞானியாரடிகள் தலைமையில் தமிழரசி குறவஞ்சியை அரங்கேற்றிய இவர் 1956ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மறைந்தார்.

No comments:

Post a Comment