Sunday, August 25, 2024

 


*தினம் ஒரு மூலிகை* வெள்ளை பூண்டு கடுமையான மனம் உடைய குமிழ் வடிவ கிழங்கையும் தட்டையான இலைகளை உடைய சிறு செடி கிழங்குகளே மருத்துவ பயன் உடையது அதாவது வெள்ளை பூண்டு பசி தூண்டுதல் செரிமானம் மிகுதல் வயிற்று வாய்வு அகற்றல் சிறுநீர் பெருக்குதல் குடற்புழு கொள்ளுதல் கோழை அகற்றுதல் உடல் தேற்றுதல் வியர்வை பெருக்குதல் நோவு தணித்தல் காய்ச்சல் தணித்தல் என்புருக்கி தனித்தல் காமம் பெருக்குதல் ஆகிய மருத்துவ குணம் உடையது 10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை பாலில் வேகவைத்து கடைந்து சாப்பிட வாயு தெரியாமை சளி ஆகியவை தீரும் குடல் புழுக்கள் மடியும் பூண்டை இழைத்து பருகட்டிகளில் பூச அவை உடைந்து கொள்ளும் வெள்ளைப் பூண்டின் சாற்றில் நவாசாரத்தை குறைத்து வெண்மேகத்தில் தடவி வர வெண்ணிற மாதிரி இயல்பு நிறமாகும் 10 கிராம் உரித்த வெள்ளைப் பூண்டை 50 மில்லி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி இரண்டொரு துளிகள் காதில் விட்டு வர காது வலி காது மந்தம் ஆகியவை தீரும் வண்டு குளவி பூச்சி ஆகியவை கடித்த இடத்தில் வெள்ளைப் பூண்டை அரைத்து கட்டி எரிச்சல் தாங்க முடியாத நிலையில் எடுத்து விட நஞ்சு அகலும் நன்றி...

No comments:

Post a Comment