Sunday, August 11, 2024

 *தினம் ஒரு மூலிகை* *முத்தக்காசு(அ) கோரை கிழங்கு*



 கோரை இன சிறு புள் முட்டை வடிவ மனமுடைய சிறு கிழங்குகள் பெற்றிருக்கும் இதை முத்தக்காசு எனப்படும் கிழங்கு மருத்துவ பயன் உடையது செய்தல் உடல் மனம் ஊக்கியாக செயல்படுதல் சிறுநீர் வியர்வை பெருக்கல் மாதவிலக்கு தூண்டுதல் குடல் பலம் மிகுதல் நுண் புழு கொல்லுதல் சிறுநீரக கற்கரைத்தல் ஆகிய குணம் உடையது ஒரு கிராம் கிழங்கு பொடியை காலை மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை தாது பெருக்கம் பசி மிகுத்தல் உடற்பொலிவு ஆகியவை உண்டாகும் முத்தக்காசு சந்தனம் வெட்டிவேர் பொற்பாடகம் பேய்மிரட்டி சுக்கு ஆகியவை வகைக்கு ஐந்து கிராம் எடுத்து ஒன்று இரண்டாய் இடித்து அரை லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டர் ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி சம அளவாக காலை மாலை குடித்து வர ஜுரம் நீர்விடாய் ஆகியவை தீரும் கிழங்கை பொடித்து நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி பாலுடன் சேர்த்து காய்ச்சி மோராக்கி அதை உணவுடன் கொள்ள குழந்தைகளுக்கு காணும் பசியின்மை தெரியாமை வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும் தோல் நீக்கிய கோரைக்கிழங்கு இஞ்சி சம அளவாக அரைத்து சுண்டக்காய் அளவு தேனில் குழைத்து கொடுக்க சீதபேதி குணமாகும் நன்றி

No comments:

Post a Comment