Saturday, April 27, 2024

 *இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*


27.04.2024(சனிக்கிழமை)

*சிந்தனை துளிகள்*

 மனிதனும் வாழைமரமும் ஒன்று தான்...

தேவைப்படும் வரை  வைத்து இருப்பார்கள்

தேவை முடிந்ததும் வெட்டி வீசி விடுவார்கள்.!


ஒருவரைப் பற்றி மற்றவரிடம் குறை சொல்லக்கூடாது. பிடிக்கவில்லை என்றால் அவரை விட்டு விலகி விட வேண்டும்.

அதைவிடுத்து குறை சொன்னோம் ஆனால்

அது உறவுக்கும் அழகில்லை,

நட்புக்கும் இலக்கிணமில்லை.!!


மனதில் பட்டதை  

சொல்லும்போது சில இடங்களில் பிரச்சனை முடிவுக்கு வருகிறது.

சில இடங்களில் பிரச்சனை ஆரம்பமாகிறது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏


⛑️⛑️

*செய்தி துளிகள்* 


இடைநிலை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

👉31.12.1997 வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமை இறுதிப் பட்டியல் வெளியீடு.

⛑️⛑️ஓய்வூதியப் பலன்களை 30 நாட்களுக்குள் பெற்று வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

⛑️⛑️மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கும் நேர்வுகளில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - DSE & DEE இணைச் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் 2023-24 ஆம் கல்வி ஆண்டு மூன்றாம் பருவ தொகுத்தறி மதிப்பெண்களை EMIS வலைதளத்தில் பதிவு செய்தல் -சார்ந்து-வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கி தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அறிவிப்பு.

⛑️⛑️உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் Special SMC Meeting - 03.05.2024 அன்று நடைபெறுதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

⛑️⛑️வட்டாரக் கல்வி அலுவலர் பதவி உயர்வுக்கு 31.12.2011 க்கு முன்னர் பணியில் சேர்ந்து பணிபுரியும் தலைமையாசிரியர்களின் நடுநிலைப்பள்ளி தற்காலிக தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியீடு

⛑️⛑️அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உயர் கல்வி வழிகாட்டி குழு - மாநில / மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது

⛑️⛑️JEE மெயின் தேர்வு முடிவு வெளியீடு:நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து 56 மாணவர்கள் சாதனை 

⛑️⛑️ 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கும் - TNPSC அறிவிப்பு

⛑️⛑️நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான விவரம் வெளியீடு.

⛑️⛑️உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை கலந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

⛑️⛑️அதிகரிக்கும் கோடை வெப்பத்தை விவேகமான செயல்களால் வெல்வோம் - பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் 

⛑️⛑️ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு மே 6 ஆம் தேதி திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

⛑️⛑️உடல் பருமன் சிகிச்சைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த பரிதாபம் - விசாரணை குழு அமைக்கப்பட்டதாக என அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல்

⛑️⛑️தேர்தல் நடத்தை விதிமீறல் புகார் - பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவு 

⛑️⛑️உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி செய்வதாக செஸ் சம்மேளனம் தகவல்

⛑️⛑️பாகிஸ்தான் அணிக்கெதிரான 4வது டி20 போட்டி - 4 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி 

⛑️⛑️சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.54,040-க்கும் ஒரு கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,755-க்கும் விற்பனையாகிறது.

⛑️⛑️EVM-VVPAT இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை 100% சதவீதம் சரிபார்க்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்! 

⛑️⛑️மே 1 முதல் வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு:

வட உள் தமிழ்நாட்டில் மே 1 முதல் 4ஆம் தேதி வரை வெப்ப அலை உச்சத்தை தொட வாய்ப்பு காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி கரூர் ஆகிய மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் - தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

⛑️⛑️தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வெப்ப அலை வீசும் எனக்கூறி இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

⛑️⛑️சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கான்வேக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ரிச்சர்ட் க்ளீஸன் சென்னை வந்தடைந்தார்.

⛑️⛑️MTC பேருந்துகள் நிற்கவில்லையா?

சென்னை மாநகரப் பேருந்துகள் நிற்காமல் சென்றால் 149 என்கிற எண்ணில் புகார் அளிக்கலாம்  - பயணிகள் புகார் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அறிவித்தது போக்குவரத்துத் துறை.

⛑️⛑️உலகக்கோப்பை டி20 தூதர் யுவராஜ்சிங் உலகக்கோப்பை டி20 தொடரின் விளம்பர தூதராக யுவராஜ் சிங் நியமனம் - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு.

⛑️⛑️தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நேற்று வெப்பநிலை பதிவான இடங்கள்!

👉ஈரோடு - 108°F

👉திருப்பத்தூர் - 107°F

👉சேலம் - 106°F

👉தருமபுரி - 106°F

👉கரூ‌ர் பரமத்தி - 106°F

👉திருத்தணி - 105°F

👉வேலூர் - 105°F

👉திருச்சி - 104°F

👉நாமக்கல் - 104°F

👉கோவை - 103°F

👉மதுரை விமான நிலையம் - 103°F

👉மதுரை நகரம் - 102°F

👉தஞ்சாவூர் - 102°F

👉பாளையங்கோட்டை - 100°F

⛑️⛑️பிரதமர் மோடி என்னை பற்றியும் எனது ஆட்டத்தை பற்றியும் பேசியது மிகவும் பெருமைக்குரிய விஷயம்; அதற்காக மிக்க நன்றி; ஓட்டுப்போடுவது அனைவரது உரிமை; யாருக்கு ஓட்டுப்போட்டுள்ளோம் என்று யாரிடமும் கூற வேண்டிய அவசியம் இல்லை. 

-முகமது ஷமி

⛑️⛑️தமிழ்நாட்டில் மறுவாழ்வு பெற்ற பாகிஸ்தான் பெண்: 

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ராஷனுக்கு (19) சென்னையில் பொருத்தப்பட்ட இதயம். தற்போது உடல் நலம் தேறிய அப்பெண், அரசுக்கும் மருத்துவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதய பாதிப்பால் பாதிக்கப்பட்ட அவர், பாகிஸ்தானில் போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் தமிழ்நாட்டை நாடினார். இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய சூழ்நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்துள்ளது.

⛑️⛑️பாரிஸ் ஒலிம்பிக் பாய்மர படகோட்டுதல் போட்டிக்கு தமிழ்நாடு வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி பெற்றார்.

⛑️⛑️67 மாத்திரைகள் தரமற்றவை:

சளி, காய்ச்சல், உடல் வலி, செரிமான பாதிப்புக உள்ளிட்ட குறைபாடுகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மாத்திரைகள் தரமற்றவை;  

கடந்த மார்ச் மாதத்தில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 

-மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

⛑️⛑️முன்பதிவில்லா ரெயில் டிக்கெட்டுகள். -வீட்டில் இருந்தே எடுக்கலாம்.

-யுடிஎஸ் செயலியில் புது வசதி.

யூடிஎஸ் செயலி மூலம் ரெயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம்.

கவுன்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி மூலமாக முன்பதிவில்லாத ரெயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், மின்சார ரெயிகளுக்கான டிக்கெட் ஆகியவற்றை பெறும் வசதி உள்ளது.

இருந்த போதிலும், 'ஜியோ பென்சிங் என்ற கட்டுப்பாடுகள் இருந்ததால் குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இருந்து டிக்கெட்களை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், ஜியோ பென்சிங்கின் வெளிப்புற எல்லையை ரெயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.

இதனால் யூடிஎஸ் செயலி மூலம் ரெயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். 

ஆனால், டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்துவிட வேண்டும்.

 இத்தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

⛑️⛑️மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

⛑️⛑️100% VVPAT வாக்கு எண்ணிக்கை கோரிக்கை நிராகரிப்பு.!

தேர்தல் ஆணையத்தை கண்மூடித்தனமாக நம்பாமல் இருப்பது தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும் 

சந்தேகம் எழுப்பும் வேட்பாளர்கள் வேட்பாளர்கள் சொந்த செலவில் EVM மெமரியை ஏழு நாட்களுக்குள்  சோதனையிட அனுமதிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

⛑️⛑️வாக்கு பதிவில் குளறுபடி என சொல்லி யாரவது அதை சரி பார்க்க விண்ணப்பதால் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.

 EVM தவறாகக் செயல்பட்டது கண்டறியப்பட்டால், கட்டணம் திருப்பித் தரப்படும்: 

உச்சநீதிமன்றம்

⛑️⛑️புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும் " -  

திருச்சியில் அரசுப் பேருந்து இருக்கை கழன்று விழுந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி

அன்புமணி ராமதாஸ்

⛑️⛑️அதிக பணம் கொடுத்தால் சூப்பர் Fast டெலிவரி

-விரைவில் அறிமுகமாகும் சொமேட்டோவின் புதிய அம்சம்

கூடுதல் தொகை செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவை டெலிவரி செய்யும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளது Zomato

மேலும் ஒவ்வொரு ஆர்டருக்கும் உண்டான Platform Fee எனப்படும் கட்டணத்தையும் ₹5ஆக உயர்த்துகிறது.

⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️

🌹🌹


*உடல் நல குறிப்புகள்*



 தினமும் காலையில் ஒரு அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் அவ்வளவு நல்லது.

கூம்பு வடிவில், வித்தியாசமான நிறத்தில் இருக்கும் அத்திப்பழத்தின் நன்மைகளைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அத்திப்பழம் அனைத்து காலங்களிலும் கிடைக்காது.

இது மிகவும் சுவையாகவும், வித்தியாசமான சுவையுடனும் இருக்கும். இப்பழத்தில் கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்றவை உள்ளது.

இத்தகைய சத்துக்கள் நிறைந்த அத்திப்பழத்தை தினமும் காலையில் ஒன்று சாப்பிட்டு வந்தால் அதிக பலன்களைப் பெறலாம்.

🌹👉நோய் எதிர்ப்பு:-

👉அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. அதிலும் மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் இதில் தான் நல்ல தரமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதாம்.

🌹👉எலும்புகளை வலிமையாக்கும்:-

👉ஒரு உலர்ந்த அத்திப்பழமானது அன்றாடம் தேவைப்படும் கால்சியத்தில் 3 சதவீதத்தை வழங்குகிறது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால், எலும்புகள் வலிமையுடன் இருக்கும்.

🌹👉நீரிழிவு:-

👉அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.இருப்பினும் அத்திப்பழத்தில் சர்க்கரை அதிகம் இருப்பதால், மருத்துவரிடம் கலந்தாலோசித்து பின் எடுத்துக் கொள்ள வேண்டும்.

🌹👉மலச்சிக்கல் நீங்கும்:-

👉மூன்று துண்டுகளை அத்திப்பழத்தில் 5 கிராம் நார்ச்சத்து உள்ளது. இது அன்றாடம் தேவைப்படும் நார்ச்சத்துக்களின் அளவுகளில் 20 சதவீதத்தைத் தருகிறது. எனவே இவற்றை தினமும் காலையில் உட்கொண்டு வந்தால், செரிமானம் மேம்படுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கிவிடும்.

🌹👉இரத்த சோகை:-

👉அத்திப்பழத்தில் இரும்புச்சத்து உள்ளது. அதிலும் ஒரு உலர்ந்த அத்திப்பழத்தின் அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 2% கிடைக்கிறது. உடலில் ஹீமோகுளோபினை எடுத்து செல்வதற்கு இரும்புச்சத்து மிகவும் இன்றியமையாதது. எனவே இதனை தினமும் ஒன்று உட்கொண்டு வந்தால், இரத்த சோகை பிரச்சனை நீங்கும்.

🌹👉இரத்த அழுத்தம்:-

👉உப்பு அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும். இதனால் சோடியம் மற்றும் பொட்டாசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆனால் 1 அத்திப்பழத்தில் 129 மில்லிகிராம் பொட்டாசியம் மற்றும் 2 மிகி சோடியம் உள்ளது இதனால் இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

🌹👉புற்றுநோய்:-

👉அத்திப்பழத்தில் உள்ள அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால், ப்ரீ-ராடிக்கல்களின் மூலம் டி.என்.ஏ பாதிப்படைவது தடுக்கப்பட்டு,                  புற்றுநோய் வரும் அபாயம் குறையும்.

எடை குறையும்.

அத்திப்பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகம் மட்டுமின்றி, கலோரிகள் குறைவு. ஒரு துண்டு அத்திப்பழத்தில் 47 கலோரிகள் உள்ளன. மற்றும் 0.2 கிராம் கொழுப்புக்கள் உள்ளது. எனவே எடையைக் குறைக்க நினைப்போர் இதனை ஸ்நாக்ஸாக உட்கொள்வது நல்லது.

 🌹👉இனப்பெருக்க மண்டல ஆரோக்கியம்:-

👉அத்திப்பழம் மிகவும் சிறப்பான ஓர் பாலுணர்வைத் தூண்டும் பழம். மேலும் அத்திப்பழம் கருவுறும் திறன் மற்றும் பாலுணர்ச்சியைத் தூண்டுவதற்கு காரணம், அதில் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஜிங்க், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது.

🌹👉இதய நோய்:-

👉அத்திப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், ப்ரீ-ராடிக்கல்களினால் இரத்த நாளங்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு இதய நோய் ஏற்படும் அபாயம் குறையும்.

மேலும் இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.

🌹👉அழகான சருமம்:-

👉தினமும் அத்திப்பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால்,அழகான மற்றும் மென்மையான சருமம் கிடைப்பதோடு, இளமையையும் தக்க வைக்கலாம்.