*🏵️
*உலக சித்தர்கள் தினம்.*
🌿 உலக சித்தர்கள் தினம் ஏப்ரல் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
🌿 இத்தினம் 2009ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டது.
🌿 சித்த மருத்துவத்தின் சிறப்பைப் போற்றும் வகையிலும்,
சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய சித்தர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.*தேசிய தீயணைப்பு சேவை தினம்.*
🌟 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி தேசிய தீயணைப்பு சேவை தினம் கொண்டாடப்படுகிறது.
🌟 பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருக்கும் தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாகவும், பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு வீரர்களுக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
*தீத்தடுப்பு தினம்.*
💥 ஒவ்வொரு ஆண்டும் தீத்தடுப்பு தினம் ஏப்ரல் 14ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
💥 தீ விபத்தினால் உயிர்ச்சேதம், பொருட்சேதம், காயமடைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே, தீ ஏற்பட்டால் அதனைத் தடுத்து, கட்டுப்படுத்துவது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
*முக்கிய நிகழ்வுகள்.*
📝 இந்திய மதகுரு ராகுல் சாங்கிருத்யாயன் 1963ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மறைந்தார்.
📝 விடுதலை போராட்ட வீரர் ராம்தாஸ் காந்தி 1969ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மறைந்தார்.
📝 தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதி ரமண மகரிஷி 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மறைந்தார்.
📝 இந்தியப் பொறியியலாளர் எம்.விஸ்வேஸ்வரய்யா 1962ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மறைந்தார்.
No comments:
Post a Comment