*🪷
*விளாதிமிர் லெனின்.*
👉 'லெனின்' என்ற பெயரிலேயே உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விளாதிமிர் லெனின் 1870ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரஷ்யாவில் உள்ள சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் விளாதிமிர் இலீச் உல்யானவ்.
👉 இவர் மக்களுக்காக, கொடுங்கோலாட்சி நடத்திக் கொண்டிருந்த ஜார் மன்னனுக்கு எதிராக போராடத் தீர்மானித்தார்
. மேலும் தொழிலாளர்களுக்காக தொழிலாளர் விடுதலை இயக்கம் என்பதை தொடங்கினார்.👉 1917ஆம் ஆண்டு மக்களால் புரட்சி நிகழ்த்தப்பட்டு ரஷ்யாவில் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
👉 ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த லெனின் 1924ஆம் ஆண்டு மறைந்தார். இவருடைய உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பாதுகாக்கப்பட்டது. இவ்விடத்திற்கு லெனின் மாஸோ லியம் என்று பெயர்.
*மோண்டால்சினி*
💉 மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்ற பிரபல நரம்பியலாளர் ரீட்டா லெவி மோண்டால்சினி (Rita Levi Montalcini) 1909ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார்.
💉 இத்தாலி அரசு 1938ஆம் ஆண்டு யூதர்களுக்கு மருத்துவத்தில் தடைவிதித்தது. இதனால், இவர் தனது அறையிலேயே ஒரு சோதனைக்கூடம் அமைத்து ஆராய்ச்சி செய்து வந்தார்.
💉 நரம்பு செல்களின் வளர்ச்சியை தூண்டும் புரோட்டீன்கள் குறித்த இவரது ஆராய்ச்சி புற்றுநோய், அல்சீமர், மலட்டுத்தன்மை போன்ற சிகிச்சை முறைகளைக் கண்டறிய வழிவகுத்தன.
💉 இவருக்கு நரம்பு வளர்ச்சி காரணிகள் குறித்த கண்டுபிடிப்புக்காக 1986ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
💉 ஆராய்ச்சி செய்யவும், தொழில் செய்யவும் தடை விதித்த அதே இத்தாலி அரசிடம், 'நாட்டின் உயர்ந்த ஆராய்ச்சியாளர்' என்ற பட்டத்தை பெற்ற ரீட்டா லெவி மோண்டால்சினி 2012ஆம் ஆண்டு மறைந்தார்.
*ஜெயமோகன்.*
✍ தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகன் 1962ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி பிறந்தார்.
✍ இவர் தன்னை 'இந்தியத் தமிழ் மரபை நவீன காலக்கட்டத்தின் அறத்திற்கு ஏற்ப மறுவரையறை செய்தவர் ஜெயமோகன்' என அறியப்பட வேண்டும் என விரும்பினார்.
✍ 1978-ல் பள்ளிப்படிப்பு முடித்து, முழுக்காட்டில் இருந்தபொழுது மலையாளப் புதினங்களுக்கு அறிமுகம் ஆனார்.
✍ தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். 2006ஆம் ஆண்டு வெளிவந்த கஸ்தூரி மான் இவர் திரைக்கதை எழுதிய முதல் படம் ஆகும்.
✍ 2008ஆம் ஆண்டு பாவலர் விருது பெற்றார். 2012ஆம் ஆண்டு சிறந்த திரைக்கதைக்கான டீ.ஏ.ஷாஹித் விருது பெற்றார்.
No comments:
Post a Comment