Sunday, April 13, 2025

இன்றைய சிந்தனை

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

**

கொஞ்சம் ரிஸ்க் எடுங்கள். 

 _*சிலரை இந்த உலகம்*_

_*அவர்கள் எப்படி*_ _*இருக்கிறார்களோ*_

_*அப்படியே*_

_*ஏற்றுக்கொள்ளும்*_

_*அவர்கள்

அதிர்ஷ்டசாலிகள்*_

_*சிலர் இந்த உலகத்தை*_

_*அது எப்படி இருக்கிறதோ*_

_*அப்படியே*_

_*ஏற்றுக்கொள்வார்கள்*_

_*அவர்கள் புத்திசாலிகள்*_


நாம் செய்ய வேண்டியக் காரியத்தை முடித்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் இருந்தால் வெற்றி கிடைக்கும்.


எதையும் சிந்தித்து செய்தால் நமக்கு கிடைப்பது வெற்றி...


எதையும் செய்து விட்டு சிந்தித்தால் நமக்குக் கிடைப்பது அனுபவம்.


சவால் என்னும் வார்த்தையி்ல் தான் வாசல் என்ற வார்த்தை மறைந்திருக்கிறது.


நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களிலே தான் திறக்கின்றன உங்களின் எதிர்காலத்திற்கான

வாசல்கள்.


*அமைதியாகச் செல்லும் நதியைப் போல நல்லதையே நினைத்து நல்லதையே செய்...*

*தீயவை யாவும் குப்பைகள் போல் தானாகவே ஓரத்தில் ஒதுங்கி விடும்.*


*பயம் மனதை முடக்கும் பூட்டு..!*

*அதை திறக்கும் சாவி தன்னம்பிக்கை..!*


*வாழ்க்கையைப் படியுங்கள்.* 

*எல்லாப் புத்தகங்களும் அங்கிருந்தே நகலெடுக்கப் பட்டிருக்கின்றன!"*


ஈட்டியை விட மிகக் கூர்மையானது

பிடித்தவர் நம்மைச் செய்கின்ற அலட்சியம்.


ஒவ்வொரு நாளும் பலவிதமான

வேஷம் போடும் மனிதர்களின் நடுவில் உண்மை முகம் தெரியாமலே நாமும் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.


கோபங்கள் கூட

மன்னிக்கப்படுகின்றன ஆனால், உதாசினங்கள் ஒரு போதும்

மன்னிக்கப் படுவதில்லை.


நேர்மையோடு வாழ்வதில் தவறில்லை. அதே நேர்மையை பிறரிடம் எதிர்பார்ப்பது தான் தவறாகப் போகிறது.


என்ன செய்வது யார் எந்த முகமூடியோடு அழைக்கிறார்கள் என்று, வாழ்க்கையில் இவர்களையும்  கடந்து செல்ல வேண்டியதுதான். 


_*வாழ்க்கை எப்போதும் அமைதியாக ஓட வேண்டும் என்று நினைக்காதீர்கள். சில செயல்கள் டென்ஷன் ஆக்கினாலும் பரவாயில்லை. கொஞ்சம் `ரிஸ்க்’ எடுங்கள்.*_


_*சிலர் சம்பாதித்து வாழ்கிறார்கள். சிலர் சம்பாதிப்பதற்காக வாழ்கிறார்கள். சிலர் வாழ்வதற்காக சம்பாதிக்கிறார்கள். சிலர் யாரோ சம்பாதித்து விட்டதால் வாழ்கிறார்கள்.*_


🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

No comments:

Post a Comment