Thursday, December 14, 2023

காசினிக் கீரை-தினம் ஒரு மூலிகை

 


*காசினிக் கீரை* முள்ளங்கி இலை வடிவில் குத்தாக இளைவிடும் சிறு செடியினும் பூ விடும்போது தண்டு அழுத்தமானதாக வரும் இதில் கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ பி சி ஆகிய சத்துக்கள் உள்ளன இதன் இலை பூ வேர் விதை ஆகியவை மருத்துவ பயன் உடையவை இலை மலமிளக்கியாகவும் தாது கொதிப்பை தணிக்கவும் சிறுநீர் பெருக்கவும் பயன்படும் விதை பித்தம் மிகுக்கும் சிறுநீர்ப் பெருக்கும் மலச்சிக்கல் அகற்றும் இலையை பருப்புடன் சேர்த்து கூட்டாக செய்து உணவுடன் நெய் சேர்த்து பயன்படுத்தி வர ரத்தத்தில் உள்ள மாசுகளை அகற்றி தூய ரத்தத்தை பெருக்கும் உடலில் உள்ள வீக்கங்களை குறைக்கும் உடல் வெப்பத்தை தணிக்கும் காசினி விதை வேர் வகைக்கு 30 கிராம் கோழிக்கீரை விதை வெள்ளேரி விதை முலாம்பழ விதை வகைக்கு 20 கிராம் இவற்றை இடித்து இரண்டு லிட்டர் நீரில் இட்டு 500 மில்லியாகும் வரை காய்ச்சி வடிகட்டியதில் 100 மில்லி காடி நீரும் இரண்டு கிலோ சர்க்கரையும் கூட்டி தேன் பதமாக காய்ச்சி வைத்துக்கொண்டு காசினி மணப்பாகு 10 மில்லி அளவாக சம அளவு நீர் கலந்து காலை மாலை பருகிவர சிறுநீர் பெருகி உடம்பில் உள்ள வீக்கத்தை வாட்டும் நன்றி.

No comments:

Post a Comment