Sunday, December 10, 2023

உலர்ந்த இஞ்சியே சுக்கு...

சுக்கு!!!

சுக்கின் மேல் தோல் விடமாகும், எனவே மேல் தோலை நீக்கியே சுக்கை பயன் படுத்த வேண்டும்.




சுக்குடன் சிறிது பால் சேர்த்து, அரைத்து வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி குணமாகும்.



சுக்கு, பனங்கருப்பட்டி, மிளகு சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும்.




சிறிதளவு சுக்கு தூளை எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் குறையும்.




சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவைகளை கசாயமிட்டு பருகிவர, கடுஞ்சளி குணமாகும்.




சுக்குடன் நீர் சேர்த்து விழுதாக அரைத்து, நெற்றியில் பற்றிட தலைவலி போகும். ஒற்றைத் தலைவலிக்கும் சிறந்த மருந்தாகும்.




சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குத்திருமல் குணமாகும்.




சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று பின் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விடம் முறியும்.




சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.




சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட மலக்குடலின் கெடுதி கிருமிகள் அழியும்.




கரும்புச் சாறுடன், சுக்குத் தூள் கலந்து வெறும் வயிற்றில் அருந்தி வர வயிறு எரிச்சல் குணமாகும்.




"குடல்தனில் சீதமலாது சுரமும் வாராது" என்ற கூற்றின்படி குடல் மற்றும் இரைப்பையின் இயக்கத்தை சீராக்கி நோய் எதிர்ப்பு சக்தி நல்கும் சுக்கை நம் வீட்டில் என்றும் வைத்திருந்து பலன் பெறுவோம்.

No comments:

Post a Comment