Saturday, December 9, 2023

மூதேவியே முன்னோர்கள் வழிபட்ட தெய்வம்!

செல்வ வளத்தை அள்ளித்தரும் ஸ்ரீதேவிக்கு எதிர்ப்பதமாக மூதேவி என்று அழைக்கிறோம்.
அமங்கலமானவள், என்று அதற்கு பொருளும் சொல்கிறோம்.
"மூதேவி"தான் நம் முன்னோரின் பிரதான தெய்வமாகும்.
மூதேவி தான் செல்வத்துக்கான தெய்வமாக முன்னோர்களால் வணங்கப்பட்டாள். மூதேவி என்றால், மூத்த தேவி. தவ்வை, சேட்டை, கேட்டை, மாமுகடி என்று மூதேவிக்குப் பல பெயர்கள் உண்டு. கொற்றவைக்கு அடுத்ததாக சங்க இலக்கியங்களில் அதிகமாகப் பாடப்படும் தெய்வம் மூதேவி. "தவ்வை" என்ற பெயரில் பல இலக்கியங்களில் மூதேவி குறிப்பிடப்
படுகிறாள்.உரத்தின் அடையாளம் 'தவ்வை'. நெற்கதிர்களின் அடையாளம் 'திருமகள்'. நெற்கதிர்கள் செழித்து வளர வேண்டும் என்றால் உரம் மிக அவசியம். இங்கே உரமாகத் திகழ்பவள் தான் தவ்வை.
தவ்வையின் கொடி
காக்கைக்கொடி, வாகனம் கழுதை, அவளின் கையில் துடைப்பம். தற்போது கூட வீட்டைச் சுத்தப்படுத்தும் துடைப்பத்தை மிதிக்கக் கூடாது என்பார்கள். அதேபோல், 'என்னைப் பார் யோகம் வரும்' என்று ஒவ்வொரு வீடுகளிலும் தொங்குகின்ற அட்டைகளில் கழுதை யின் படம் காணப்படும். கழுதையின் குரலைக்
கேட்பதுகூட நற் சகுணமாகத்தான் பலரால் நம்பப் படுகிறது.பல கோவில்களில் 'ஜேஸ்டா தேவி' என்று தவ்வை வழிபடப் படுகிறாள்.வட
மொழியில் ஜேஸ்டா என்றால் மூத்தவள் என்று பொருள். காஞ்சி கயிலாசநாதர் ஆலயத்தில் ஜேஸ்டா (தவ்வை) தேவிக்குத் தனி சந்நிதி இருக்கிறது. திருவானைக்காவல்,
வழுவூர் போன்ற இடங்களில் தவ்வைச் சிற்பங்கள் வணங்கப்
படுகின்றன.சப்தமாதா வழிபாட்டிலும் ஜேஸ்டா தேவிக்கு (தவ்வை) இடம் உண்டு. மூதேவி என்று உங்களைப் பார்த்து இனி யாராவது அழைத்தால்,அதைக் கேட்டு கோபம் கொள்ளாதீர்கள்! மாறாக நம்மை அவர்கள் "மூத்த தேவி" என்றும், செல்வத்திற்கு அதிபதி என்றும் மரியாதையாக அழைத்தார்கள் என்று நினைத்து மகிழுங்கள்!









No comments:

Post a Comment