Friday, December 29, 2023

தினம் ஒரு மூலிகை-சணப்பச்செடி

 

*சணப்பச்செடி*  மருத்துவ குணம் இலை உடல் தேற்றுதல் குளிர்ச்சி உண்டாக்குதல் நீர் மலம் போக்குதல் மாதவிடாய் தூண்டுதல் வாந்தி உண்டாக்குதல் ஆகிய குணங்களை உடையது வேர் சதை நரம்புகளை சுருங்கச் செய்யும் தாய்ப்பாலை வற்றச் செய்யும் இலையை அரைத்து கட்டிகளுக்கு வைத்து கட்டி வர விரைவில் உடைந்து ஆறும் இலையை நீரில் இட்டு வேக வைத்து வடிகட்டி 50 மில்லி அளவாக காலை மாலை கொடுத்து வர பித்த வாயு நீர்க்கசியும் படை கரப்பான் ஆகியவை தீரும் இதை பெண்களுக்கு கொடுக்க மாதவிலக்கை உண்டாக்கும் விதையை உலர்த்தி பொடித்து ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவாக காலை மாலை பாலில் கலந்து சாப்பிட்டு வர மிகையான பித்தம் சமப்படுத்தும் உறுதி தூய்மையாகும் கருவுற்ற மகளிர் உட்கொள்ளக்கூடாது விதை பொடியை நல்லெண்ணையில் போட்டு ஊற வைத்து வடிகட்டி வைத்துக்கொண்டு தலைக்கு தடவி வர முடி நன்கு வளரும் நன்றி.


No comments:

Post a Comment