Saturday, December 2, 2023

தினம் ஒரு மூலிகை-ஆத்தி மரம்

 

தமிழக காடுகளில் தானே வளரும் ஒரு வகை மரம் திருவாத்தி காட்டாத்தி எனவும் அழைக்கப்படும் இரண்டாய் பிளந்த இலைகளையும் ஐந்து இதழ் உள்ள சிறு பூக்களையும் தட்டையான காய்களையும் உடையது இலை பூ மொட்டு காய் பிஞ்சு பட்டை ஆகியவை மருத்துவ குணம் உடையது சிறுநீர் பெருக்குதல் குருதிப் போக்கு அடக்குதல் சீத கழிச்சல் தனித்தல் காமம் பெருக்குதல் ஆகிய குணம் உடையது இலை அல்லது மொட்டுக்களை பச்சையாகவோ உலர்ந்ததாகவோ 50 கிராம் அரை லிட்டர் நீரில் இட்டு நாளில் ஒன்றாக காய்ச்சி வடிகட்டி வேலைக்கு 50 மில்லி அளவாக கொடுத்து வர செய்த கழிச்சல் குணமாகும் மர பட்டை அல்லது வேர் பட்டை 60 கிராம் பஞ்சு போல் இடித்து 600 மில்லி நீரில் இட்டு நாளில் ஒன்றாக காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொண்டு 50 மில்லி அளவாக காலை மதியம் மாலையில் கொடுத்து வர மண்ணீரல் வீக்கம் தீரும் பசியின்மை நீர்த்த கழிச்சல் சீத கழிச்சல் குடல் புழுக்கள் தீரும் வாய் கொப்பளித்து வர பல்வலி வாய்ப்புண் ஆகியவை தீரும் விதையை காடிவிட்டு அரைத்து மேல் பூச்சாக தடவி வர விலங்கு கடிகளால் ஏற்படும் நஞ்சு விலகி புண் ஆறும் நன்றி...

No comments:

Post a Comment