இன்றைய "தமிழ்நாடு" பெயர் உருவாக முக்கிய காரணர்கள் தியாகி சங்கரலிங்கனார் ஐயா மற்றும் "தமிழகத்தின் தந்தை"ம பொ. சிவஞானம் ஐயா அவர்கள். ம.பொ.சி ஐயா பல போராட்டங்களை முன்னெடுத்து, பின்பு சட்ட சபையில் குரல்
Thursday, October 31, 2024
Monday, August 12, 2024
அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில்
*இன்றைய திருக்கோவில்*
,*
தலைஞாயிறு,
(திருக்கருப்பறியலூர்),
நாகப்பட்டினம் மாவட்டம்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் – குற்றம் பொறுத்
Saturday, June 15, 2024
18வது லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024
2024 ஆம் ஆண்டு 18வது லோக்சபா தேர்தலின் முக்கிய அம்சங்கள்
- இந்தியாவின் அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க மைல்கற்களையும், மாற்றங்களையும் நன்கு குறிக்கும் வகையில், 18வது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் ஜூன் 4, 2024 அன்று அறிவிக்கப் பட்டன.
வரலாற்றில் வாக்காளர் பங்கேற்பு
- 2024 மக்களவைத் தேர்தலில் 31.2 கோடி பெண்கள் உட்பட 64.2 கோடி வாக்காளர்களுடன் இந்தியா உலக சாதனையினைப் படைத்துள்ளது.

- இந்த வாக்களிப்பு விகிதம் அனைத்து G7 நா
தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் – பகுதி I 15/06/2024
மிஷன் இயற்கை திட்டம்
தொடங்கப்பட்ட நாள்: நவம்பர் 28, 2022.
துறை: தமிழ்நாடு கல்வித்துறை
நோக்கம்:
- 'மிஷன் இயற்கை' திட்டமானது, அரசு பள்ளிகள், வீடுகள் மற்றும் சமூகங்களில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இத்திட்டம் காய்கறித் தோட்டங்கள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், கழிவு மேலாண்மை, நெகிழி ஒழிப்பு, விழிப்புணர்வுப் பேரணிகள் போ
Tuesday, June 11, 2024
அதிகபட்சம் உங்களால் என்ன செய்ய முடியும்?
கேலி செய்து நகைக்கமுடியும்-
°°°🧡
அவன் நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறான்
நீங்கள் முதுகில் ஒளிந்து
குத்திக் கொண்டிருக்கிறீர்கள்-
°°°🧡
உனது ஈனபுத்திக்கு மகிழ்ச்
Wednesday, November 1, 2023
நாகப்பட்டினம் வரலாறு
வரலாறு
நாகப்பட்டினம் பண்டைய காலம் முதல் துறைமுக நகரமாகவே இருந்தது. வடநாட்டினர் தமிழரை 'நாகர்' என்றே அழைத்தனர். அதன் காரணமாக அவர்கள் வாழ்ந்த கடற்கரை நகர் நாகப்பட்டினமாயிற்று. நாகப்பட்டினத்தின் மற்றொரு பெயர் 'நீர்பெயற்று'. காவிரிப் பூம்பட்டினம் அழிவுக்குப் பின்னர் இந்நகர் பெயர் பெற்ற துறைமுகப்பட்டினமாக விளங்கியது. 'பதறிதிட்டு' என்னும் பகுதியில் முன்பு புத்தவிகாரை இருந்துள்ளது. இவ்விகாரை கி.மு. 265-270 இடைப்பட்ட காலத்தில் கட்டப்பெற்றிருக்கலாம். அசோகர் கல்வெட்டு சோழ, பாண்டிய நாடுகளில் புத்த பள்ளிகளை எழுப்பியதைக் கூறுகிறது. சினப்பயணி யுவான் சுவாங் (கி.பி. 629-645) தன் பயணக் குறிப்பேட்டில், அசோகர் எழுப்பித்த புத்தப்பள்ளியை நாகப்பட்டினத்தில் தான் கண்டதாகக் குறித்துள்ளார். புத்த விகாரங்களின் வெளிப்பகுதியில் சீன நாட்டு முறையில் கோபுரங்கள் இருந்துள்ளன. நரசிம்மவர்மன் காலத்தில் 'புதுவெளிகோபுரம்' ஒன்றை கட்டியுள்ளார். கி.பி. 11-ஆம் நூற்றாண்டில் ஸ்ரீ விஜயம் மன்னர் சூளாமணிவர்மன் நாகையில் 'சூளாமணி விகாரை'யை அமைத்தான். இந்த பெளத்தபள்ளிக்கு இராசராசனும் அவன் மகன் இராசேந்திரனும் 'ஆனைமங்கலம்' என்ற ஊரை பள்ளிச்சந்தமாக தானமாக அளித்துள்ளனர். இதைப்பற்றிய செப்பேடு ஹாலந்து நாட்டில் உள்ள லெய்டனில் இன்றும் உள்ளது. நரசிம்மவர்மன் எழுப்பிய 'புதுவெளிகோபுரம்' 1882 வரை இருந்துள்ளது. பின்னர் கிருத்துவ குருமார்கள் ஆங்கில அரசிற்கு எழுதி இதை இடித்து விட்டனர். இதன் அடியில் கண்டெடுக்கப்பட்ட 5 புத்தர் சிலைகளும் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது. நாகப்பட்டினத்தை அடுத்த' 'பரவை' என்ற கடற்துறை சார்ந்த ஊரில் 'நீர்ச்சுழல்' அடிக்கடி ஏற்பட்டு பல கலங்கள் மூழ்கியதற்கான அகச்சான்றுகள் பல கிடைத்துள்ளன. நாகை மாவட்டம் சோழநாட்டின் கடற்கரையோரப் பகுதியாகவே இருந்து வந்துள்ளது. சோழராட்சியில் 'சோழகுல வல்லிபட்டினம்' என்ற பெயரைப் பெற்றிருந்தது. வணிக துறைமுகபட்டினமாகவே இருந்து வந்துள்ளது. கி.பி. 10ஆம் நூற்றாண்டிலேயே இங்கு இயற்கை வாயு வெளிப்பட்டுள்ளது. அக்கால மக்கள் இயற்கைவாயு வெளிப்பட்ட கிணற்றை 'புகையுண்ணிக்கிணறு' என்று அழைத்துள்ளனர். சோழர்களுக்குப் பிறகு தமிழகத்தை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சியில் நாகையை போர்ச்சக்கீசியருக்கு தாரை வார்த்தனர். கி.பி. 1500 முதல் 1658 வரை ஆண்டனர். அக்காலத்தில் போர்ச்சுக்கீசியன் பல மீனவர்களை கொன்றனர். நாகூரில் இருந்து அரங்கநாதர் கோயிலை இடித்தனர். போர்ச்சுக்கீசியர்களுடன் சண்டையிட்டு ஆலந்துக்காரர்கள் இப்பகுதியை 1658 முதல் 1824 வரை ஆண்டனர் தஞ்சை மராட்டிய மன்னர் ஏக்கோஜியுடன் உடன் படிக்கை செய்து கொண்டு குத்தகையாக நாகையை எடுத்தனர். இவர்களுக்குப் பின் நாகை ஆங்கிலேயர் கைக்கு வந்தது. விடுதலைக்குப்பி தஞ்சை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் இருந்து 1991, அக்டோபர் 18ஆம் நாள் நாகையை தலைநகராகக் கொண்ட நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
உள்ளாட்சி நிர்வாகம்
- நகராட்சிகள் - 3
- ஊராட்சி ஒன்றியங்கள்- 11
- பேரூராட்சிகள்-10
- பஞ்சாயத்துக்கள் - 432
சட்டசபை தொகுதிகள்
- சீர்காழி
- பூம்புகார் மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- வேதாரண்யம்
- குத்தாலம்
பாராளுமன்ற தொகுதிகள்
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
கல்வி
- தொடக்கப் பள்ளிகள்- 823
- நடுநிலைப் பள்ளிகள்- 177
- உயர்நிலைப் பள்ளிகள்- 71
- மேல்நிலைப்பள்ளிகள்- 46
- கல்லூரிகள்- 5
- தொழிற்கல்வி நிறுவனங்கள்- 3
- தொழிற்பயிற்சி நிறுவனங்கள்- 2
வழிபாட்டிடங்கள்
- வேளாங்கண்ணி மாதா கோவில்
- நாகூர்தர்கா
- எட்டுக்குடி
- சிக்கல் முருகன் கோவில்கள்
மற்ற ஊர்கள்
- மயிலாடுதுறை,
- சீர்காழி,
- வேதாரண்யம்,
- செம்பனார்கோவில்,
- வைத்தீஸ்வரன் கோவில்
இம்மாவட்டம் இந்து, கிருஸ்துவ, முஸ்லீம் சமயங்களின் சமரச மாவட்டமாக விளங்குகிறது.
தொழில்கள்
வேளாண்மைத்தொழில்
காவிரியின் கடைமடை பகுதியாக இந்த மாவட்டம் அமைந்துள்ளது. குறிப்பாக நெல்விளைச்சலில் மயிலாடுதுறை, குத்தாலம், கொள்ளிடம், நாகப்பட்டினம் முதலிய இடங்களில் விளைச்சல் அதிகம். நெல் தவிர கரும்பு, வாழை, ராகி, காய்கறிகள், பூக்கள் முதலியவை விளைவிக்கப்படுகிறது. தலைஞாயிறு விவசாய ஆராய்ச்சி நிலையம் நெல்வித்துக்களை உண்டாக்கி அறித்துள்ளது. மயிலாடுதுறையில் 2 1/2 இலட்சம் ஏக்கரில் நெல், மணிலா, எள், கரும்பு, தென்னை முதலியவை பயிரிடப்படுகின்றன.
தொழிலும் வாணிகமும்
விவசாயமே முதல்நிலை தொழிலாக இருப்பதால் வேறு தொழில்கள் இம்மாவட்டத்தில் குறைவே. உப்பளத்தொழில் இம்மவாட்டத்தில் நாகப்பட்டினம், வேதாரண்யம், தரங்கம்பாடி ஆகிய இடங்களில் காய்ச்சப்படுகிறது. வேதாரண்யத்துக்கு அருகேயுள்ள உப்பளங்கள் சிறு வணிகர்களாலும், பெருவணிகர்களாலும், குத்தகைக்கு எடுத்து நடத்தப்படுகின்றன. 'மேட்டூர் கெமிகல்' குழுமத்தார் இரசாயனப் பொருள்களின் உற்பத்தியில் பயன்படுத்துவதற்காக 'வெள்ளை உப்பு' (Reined Salt) செய்வதற்கு, வேதாரண்யத்தில், குத்தகைக்கு எடுத்து மேட்டூருக்கும், ஆல்வாய்க்கும் உப்பு அனுப்புகின்றனர். வேதாரண்யம் பகுதியில் மட்டும் ஆண்டுதோறும் 20 இலட்சம் டன் உப்புக்காய்ச்சப்படுகிறது. வேதாரண்யம் உப்பு ஜிப்சம் செய்ய ஏற்றது. இங்கு தொழிற்சாலைகள் ஏற்பட இருக்கின்றன. மீன்பிடிக்காரருக்கான வலைகள், புகையிலையும் கருப்பட்டியும் வைப்பதற்கான தாழ ஓலைப்பாய்கள் இங்கு கோடியக் கரையிலும், வேதாரண்யத்திலும் கைத்தொழிலாக வளர்ந்துவந்துள்ளது. நெல் வாணிபத்திற்கு குற்றாலம் புகழ் பெற்றது. மயிலாடுதுறையை அடுத்த கூறைநாட்டில் பட்டுப்புடவை நெய்யும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்து வருகிறது.
மீன்பிடித்தொழில்
திருமுல்லைவாயில் தொடக்கம் கோடியக்கரை வரையுள்ள கிட்டத்தட்ட 120 கி.மீ கடற்கரையைக் கொண்டிருப்பதால் சிறப்பானபயன் தொழிலாக மீன்பிடித்தல் விளங்குகிறது. சாதாரண கட்டுமரங்களை பயன்படுத்தியே இங்கு தொழில் செய்யப்படுகிறது. சில இடங்களில் இயந்திர படகு மீன்பிடியும் நடைபெறுகிறது. பூம்புகார், நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை முதலிய இடங்களில் பெருமளவு மீன்பிடிக்கப்படுகிறது. இங்கு சுறா, வாளை, திருக்கை, நெத்திலி, நண்டு மற்றும் கடலோரப் பகுதிகளில் நன்னீர் இறாலும் வளர்க்கப்படுகிறது. மீனும், கருவாடும் நாகையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாகையில் மீனவர் பயிற்சி நிலையம் உள்ளது.
கனிவளம்
நாகையை அடுத்த நரிமணம் கிராமத்தில் பெட்ரோலியம் எடுக்கப்படுகிறது. சீர்காழிக்கருகில் உள்ள நெய்பத்தூரில் இயற்கைவாயு உள்ளது. கோடியக்கரைக்கருகில் பழுப்பு நிலக்கிரி படிவுகள் இருப்பதாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தரமான எஃகு செய்வதற்கு உதவும் இல்மனைட் தரங்கம்பாடியிலிருந்து 3.கி.மீ தொலைவில் உள்ள கடற்கரையில் கிடைக்கிறது. நாகையிலும் காணப்படுகிறது. கொதிகலச் செங்கல் செய்வதற்குத் துணையாக உள்ளதும், பிளாஸ்டிக் தொழிலுக்குப் பயன்படுவதுமாகிய ஜர்க்கான் என்னும் கனிவளம் தரங்கம்பாடிக் கடற்கரை மணலில் 2 முதல் 5% இருக்கிறது. நாகூர் பகுதியருகே மட்டமான ஜிப்சம் கிடைக்கிறது.
காட்டுவளம்
கோடியக்கரை காடே இம்மாவட்டத்திலுள்ள காட்டுவளப்பகுதியாகும். இதன் பரப்பு 4,500 ஏக்கர். அடுத்து சொல்லப்படும் சீர்காழி வட்டத் திருமுல்லைவாயில் காட்டில் பிரம்புக்கொடிகள் நிறைய உண்டு. இதனால் ஆனைக்காரன் சத்திரத்தில் பிரம்பு வேலைகள் நடைபெறுகின்றன.
சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்
பூம்புகார்
காவிரியாறு கடலோடு கலக்கும் இடமே காவிரிப் பூம்பட்டினம். ஆறு கடலுள் புகும் ஊர் என்பதையே 'புகார்' என்ற சொல் குறிக்கிறது. பூம்புகார், அக்காலத்தில் எப்படி இருந்தது என்பதை அறிய பட்டினபாலையும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும் உதவுகிறது.
காவிரிப்பூம்பட்டினம்-மருவூர்பாக்கம், பட்டினப்பாக்கம் என்ற இருபகுதிகளாக இருந்ததையும், சோழரின் தலைநரமாகவும், துறைமுக நகரமாகவும், வணிகத்தில் கொடிகட்டி பறந்தது. பல நாட்டு வணிகர்களும் திரியும் தெருக்களும், யவன இருக்கையும், கண்ணகி, கோவலன், மணிமேகலை முதலியோரின் வாழ்க்கையின் முக்கிய இடமாக இருந்ததையும் இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பெரும் துறைமுகப் பட்டினமாக விளங்கியது என்பதை 'பெரிப்ளூஸ்' நூலும், டாலமியின் பூகோளக் குறிப்புக்களிலிருந்தும் பாலி மொழியில் எழுதப்பட்ட மிலிந்த அரசரின் கேள்விகள் என்ற நூலிலிருந்தும் தெரியவருகிறது. பட்டினத்தாரின் நினைவை போற்றும் முகமாக பூம்புகாரில் 12 நாட்கள் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. சித்திரை மாதத்தில் பெளர்ணமி அன்று மக்களில் கடலில் நீராடுவ. அன்றே தமிழக அரசும் அரசு சார்பில் கவியரங்கு, கருத்தரங்கம் இசை நிகழ்ச்சி, நாடகம் முதலியவை நடத்துகிறது. ஏழுநிலை மாடமுள்ள மாளிகையை தமிழக அரசு கட்டியுள்ளது. அதில் சிலப்பதிகார காட்சிகள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. இங்கு தமிழக அரசின் சுற்றுலாத் துறையின் விடுதியுள்ளது.
நாகூர்
நாகப்பட்டினத்திற்கு வடக்கே 6 1/2 கி.மீ தொலைவில் நாகூர் உள்ளது. இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு தலைச்சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பது நாகூர். ஹஜாரத் சையது ஷாகுல் ஹமீது குவாதிர் அலி கஞ்சசவாய் என்ற முஸ்லீம் பெரியார் 17-ஆம் நூற்றாண்டில் அடக்கமாகிய இடம் 'தர்கா' எனப்படுகிறது. இந்துக்கள் அதிகளவில் இங்கு வருகின்றனர். இங்கே அடங்கியிருக்கும் பெரியாரை இந்துக்கள் 'நாகூர் ஆண்டவர்' என்று குறிப்பிடுகின்றனர்.
நாகூர் கந்தூரி விழா முஸ்லீம் ஆண்டு தொடங்கும் போது நடைபெறுகிறது. நாகூர் ஆண்டவர் இறந்த நாள் முதல் 14 நாட்களுக்கு இவ்விழா நடைபெறுகிறது. இந்த விழா நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரும். விழாதேதி ஆண்டு தோறும் மாறும். அக்காலத்தில் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்படும்.
கந்தூரித் திருவிழாவில் பாய்மரக்கப்பல் போலவும் தோணி போலவும் மரத்தாலும் காகிதத்தாலும் செய்த பொம்மைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. கடலில் செல்லும் கப்பல்களைப் புயலினின்றும் காற்றினின்றும் நாகூர் ஆண்டவரே காப்பாற்றி அவைகளைக் கரையில் சேர்க்கிறார் என்ற நம்பிக்கை. இவ்வூர் மக்களாகிய மரக்காயரிடம் வேரூன்றியிருப்பதாலேயே இவ்வாறு ஊர்வலம் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் விழவில் சந்தனக்கூடு ஊர்வலம் நிகழும். தர்காவைப் போன்ற வடிவத்தில் அமைத்த ஒரு தேரில் சந்தனம் முதலிய நறுமணப்பொருள்கள் சேமித்து வைக்கப்பெற்று, பிறகு அவையாவும் நாகூர் ஆண்டவர் சமாதியின் மீது போடப்பட்டு வழிபட வந்திருப்பவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
முஸ்லீம்கள் இத்திருவிழாவின் போது உண்ணாநோன்பு மேற்கொள்வர்; இறுதி நாளில் கடலிற்று சென்று தம் கரங்களைக் கழுவுவார்கள். இத்திருவிழாவுக்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், இலங்கை, பர்மா, மலேசியா, அரபு நாடுகள் ஆகியவற்றிலிருந்தும் 2 இலட்சம் பேர் நாகூருக்கு வருகின்றனர். வருபவர்கள் மூலம் தர்காவுக்கு 10 இலட்சத்திற்கு மேற்பட்ட அளவு பணம் கிடைக்கும். செலவு போக வருவாயில் எஞ்சும் தொகை நாகூர் ஆண்டவரின் வளர்ப்புக் குழந்தையான யூசூப் என்பாரின் வாரிசுகளால் 640 பங்காக பகிர்ந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது.
நாகூர் ஆண்டவரின் மனைவி, மக்களின் சமாதியும் தர்காவிலேயே உள்ளன. வியாழக்கிழமைகளில் இங்கு மக்கள் கூட்டம் மிகுதியாக இருக்கிறது. புறாக்களைப் பறக்கவிட்டு வழிபடும் முறையும் இங்கு உண்டு. நாகூர் ஆண்டவராகிய சாகுல் அமீது, முகம்மது நபியின் வழித்தோன்றல் என்பது வரலாறு. தஞ்சை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரின் வயிற்று வலியைப் போக்கி அவனுடைய பேராதரவைப் பெற்று நாகூரில் தங்கினார். நாகூர் ஆண்டவர் உயிர்நீத்தபிறகு நாகூரில் அவருக்குத் தர்காவைக் கட்டி வைத்ததோடு கந்தூரி விழாச் செலவுக்காக நிலங்களையும் அச்சுதப்ப நாயக்கரே மானியம் விட்டிருக்கிறார்.
தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசர் பிரதாப்சிங் இந்த தர்காவின் முன்னாலுள்ள 90 அடி (28 மீட்டர்) உயரமுள்ள மினார் ஒன்றை அமைத்திருக்கிறார். இது தவிர இன்னும் நான்கு கூண்டுகள் உள்ளன. கடலிலிருந்து பார்த்தால் இவை நன்றாக தெரியும். தர்காவுக்குள் கோயில்களில் காணப்படுவது போன்ற மண்டபமும், திருக்குறளும் உள்ளன. நாகூர் ஆண்டவர் காலத்தில் வாழ்ந்த டச்சு கவர்னர், அவர் நினைவாக 'பீர் மண்டபம்' என்ற மன்றத்தை கட்டியுள்ளார். மாராட்டிய அரசர் துளஜாஜி, தர்காவின் நடைமுறைச் செலவுக்காக 6,000 ஏக்கர் நன்செய் நிலத்தை வழங்கியுள்ளார். நாகூர் ஆண்டர் தர்கா மீது பொன்னாடை போர்த்தும் உரிமை இந்துக்களுக்கு வழங்கப்படுகிறது.
வேளாங்கண்ணி
நாகப்பட்டினத்திற்கு தெற்கே 10.கி.மீ தொலைவில் கடுவையாறு கடலுடன் கலக்குமிடத்தில் உள்ளது. போர்ச்சுக்கீசிய கப்பல் கடலில் சிக்கி சின்னா பின்னமடைய இருந்த நேரத்தில் கரை சென்றால் கன்னிமேரிக்கு கோயில் எடுப்போம் என்று வேண்டிக் கொண்டதால் கி.பி. 1565 வேளாங்கண்ணியில் மாதா ஆலயம் அமைந்தது. 'அவர் லேடீஸ் டாங்க்' என்ற குளமும், நடுத்திட்டும் அழகுற அமைந்த ஆரோக்கிய மாதா ஆலயமும் காணத்தக்க இடங்கள் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 30 தொடங்கி, செப்டம்பர் 8 வரை ஆரோக்கிய மாதாவின் நினைவாக இவ்வூரில் பெரிய திருவிழா நடைபெறுகிறது.
வேளாங்கண்ணிக்கு, "கீழை நாட்டு லூர் டீஸ்" (Lourdes of the East) என்ற பெயர் உண்டு.
தரங்கம்பாடி
தரங்கம்பாடியில் 'டேனிஷ் கோட்டை' காணத்தகுந்த இடமாகும். இது தமிழக கோட்டையிலிருந்து வேறுபட்டது. வெளிநாட்டுக் கட்டடக்கலையின் அழகை காணலாம். இவ்வூர் நாகப்பட்டினத்திற்கு 40 கி.மீ. வடக்கேயும், மயிலாடுதுறைக்கு 30. கி.மீ கிழக்கேயும், வங்காளக் விரிகுடாக் கடலோரத்திலுள்ள துறைமுக நகரம். தரங்கம்பாடி உடல் நலத்துடன் வாழ்வதற்குரிய சிறந்த ஊராகவும் இருந்து வருகிறது.
தரங்கம் என்பது அலைகளைக் குறிக்கும். இவ்வூரில் கடல் அலைகள் ஓசை நயத்துடன் பாடிக் கொண்டு கரையை மோதுகிறதாம். அதனால் இவ்வூரை 'தரங்கம்பாடி' என்று அழைத்தனர். இப்பொருள்பட ஐரோப்பியர் சிலரும் இவ்வூரைப்பற்றி Song of Tranquebar; waves of Tran quebor என்ற தலைப்புகளில் நூற்களுக்கும் கட்டுரைகளும் எழுதியுள்ளனர். தென்னிந்தியாவில் கிருத்துவம் பரப்பும் தலைமையிடமாகவும் இருந்தது. இங்கிருந்தே புரொட்டாஸ்டாண்ட் மதம் பரவியது. சீகன்பால்க் என்ற ஜெர்மானியர் தமிழ் எழுத்துக்களை ஜெர்மனியில் செய்ய சொல்லி தரங்கம்பாடியில் அச்சிட்டார். 'புதிய ஏற்பாடு' 1715-இல் இங்கு அச்சிடப்பட்டுள்ளது. இந்நாளில் இந்நகரம் சிற்றுராக இருப்பினும், பழைய கட்டடங்கள், பாழடைந்துள்ள சின்னங்கள், டேனிஷ்காரரின் புகழ்பரப்பும் கோட்டை, மசூதி, கோயில்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை இவ்வூரின் தொன்மையை தெரிவிக்கின்றன.
டேனிஷ் கவர்னர் வாழ்ந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள உப்பள அலுவலகமும், டேனிஷ் தளபதியுடைய இல்லத்தின் கனத்த சுவர்களும், டேன்ஸ்பர்க் கோட்டையின் கிழக்கு மதிலில் வைக்கப்பட்டுள்ள பழைய காலத்துத் துப்பாக்கியும், கோட்டையருகே கடலோரத்தில் சீகன்பால்க் நினைவு சின்னமும் காணத்தக்கவை.
1624-இல் இக்கோட்டை, டேனிஷ் கிழக்கிந்திய கம்பெனியாரால் டென்மார்க் அரசருக்கு விற்கப்பட்டது. இக்கோட்டை ஐரோப்பாவிலுள்ள கோட்டைகளைப் போன்றது. நடுவே ஒரு முற்றம், சுற்றிலும் பல கட்டிடங்கள், அவற்றையடுத்துச் செங்கற்களால் உறுதியாகக் கட்டப்பெற்ற மதில்கள். மதில்களின் நான்கு மூலைகளிலும் காவல் அரண்கள். அவற்றை அடுத்து அகழிக்ள என்ற அமைப்பில் அது கட்டப்பெற்றிருக்கிறது. கோட்டைக்குள் டேனிஷ் கவர்னரின் மாளிகையும், படைத்தலைவரின் மாளிகையும், வெடி மருந்துக் கிடங்கும், கிறித்துவ ஆலயங்களும், சுங்க அலுவலகமும் சிறைச்சாலையும் இருந்தன. அவர்களுடைய தேவைக்கேற்ப, 1791 வரை பல தடவை இக்கொட்டை திருத்தியமைக்கப்பட்டது. 1845-இல் டேனிஷ்காரர்கள் பிரிட்டீசாருக்கு 12 1/2 இலட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு தங்கள் நாடு சென்றுவிட்டனர்.
கோடியக்கரை வனவிலங்கு புகலிடம்
கோடியக்காடு வேதாரண்யத்துக்குத் தெற்கே இருக்கிறது. 10 கி.மீ. நீளத்துக்கும் 5 கி.மீ அகலத்துக்கும் அடர்ந்துள்ள இக்காடு இருமருங்கிலும் கடலால் சூழப்பட்டிருக்கிறது. இதைச் சுற்றிலும் உவர்மண் இருக்கிறது. மழை குறைவாக இருப்பதால், நீண்ட அகன்ற இலையுள்ள மரங்கள் இங்கு வளருவதில்லை. பாலைப்பழம், துவரம்பழம், கொழுஞ்சிப்பழம் போன்ற சில காட்டுப் பழங்களும், கீரை, கிழங்கு வகைகள் சிலவும், சீந்தில் கொடி என்னும் மூலிகையும், கோழிதுவரை என்ற கொட்டையும் பூனைக்காய்ச்சிக் கொட்டையும் முட்புதர்களும் இக்காட்டில் மண்டிக் கிடக்கின்றன.
இங்கு வரையாடு (Black Buck) என்ற மான் இனமும், புள்ளிமானும், குதிரை, நரி முதலிய விலங்குகள் உள்ளன. இக்காடு சதுப்பு நிலத்தில் இருக்கிறது. ஆறுகளுக்கும் கடலுக்கும் இடைப்பட உப்பங்குழிகளில் பூநாரை செங்கா, நாரை, வக்கா, கூழக்கடா, சிரவி, உல்லான் போன்ற பறவை இனங்களை ஐப்பசி மாதம் முதல் தைமாதம் வரை காணலாம்.
இங்குள்ள காடுகளில் (type one para) ஒருவகைப்பறவை (Flamingo) கோடியக்கரைக்கு நவம்பர் முதல் ஏப்ரல் வரை ஆண்டுதோறும் வந்து செல்கிறது. இது சிவப்பு நிறமும், அழகிய தோற்றமும் கொண்டது. நான்கடி உயரம், நீண்டு சுருங்கிய கால்கள், குழாய் போன்ற வளைந்த கழத்து, ஆரஅமர உண்ணும் தன்மை, ஒற்றைக்காலில் நின்று கொண்டே உறங்கும் ஆற்றல் இத்தகைய இயல்புகள் நிறைந்தது. கோடியக்கரையில் கடலோரத்திலுள்ள நண்டு இனங்களில் சாறைக் குடிக்கவே இவை இங்கு வருகின்றன.
மாவட்டத்தின் முக்கிய ஊர்கள்
ஆக்கூர்
தரங்கம்பாடிக்குச் செல்லும் வழியில் இவ்வூர் இருக்கிறது. 'தான் தோன்றிமாடம்' என்பது இங்குள்ள கோயிலின் பெயர். சோழர்கள் திருப்பணி செய்திக்கின்றனர்.
கொள்ளிடம்
காவிரியின் அதிகமான நீரை கொள்ளுவதால் 'கொள்ளிடம்' எனப்பட்டது. நறுமணப் பொருள்களும், தைலங்கள் செய்யவும், மாலைகளில் கட்டப்படும் 'வெட்டிவேர்' இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மகாராஜாபுரம்
இவ்வூரிலிருந்தே மகாராஜபுரம் விஸ்வநாதய்யர், சந்தானம் போன்ற புகழ்பெற்ற பாடகர்கள் தமிழகத்திற்கு தெரியவந்தனர்.
சீர்காழி
சோழர்காலத்திலேயே பெருமை பெற்ற நகரமாக விளங்கியது. தேவாரம் அருளிய மூவருள் ஒருவரான திருஞானசம்பந்தர் பிறந்த ஊர் இவ்வூர் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு 7 கி.மீ வடக்கேயும், சிதம்பரத்துக்கு 18 கி.மீ தெற்கேயும் இத்தலம் இருக்கிறது. தமிழிசை மும்மணிகளுள் இருமணிகளான முத்துத்தாண்வரும், அருணாசலக்கவிராயரும் இவ்வூரே. சீர்காழி கோயில் மூவராலும் பாடப்பெற்றது. இந்திய நூலத் இலக்கத்தின் தந்தை எஸ். ஆர். ரெங்கநாதனும் இசையுலகில் புகழ்பெற்ற கோவிந்தராஜனாலும் இவ்வூர் புகழடைந்தது. தற்காலத்தில் பெருநனும்ராக விரிவடைந்துள்ளது.
தென்திருமுல்லைவாசல்
சம்பந்தரால் பாடப்பெற்ற தலம். சீர்காழியிலிருந்து 15கி.மீ தொலைவில் உள்ள கடற்கரையூராகும். 1941 வரை துறைமுகநகராகவும் இருந்தது. ஆசிரியர் பயிற்சி பள்ளி இங்குள்ளது. கிருஷ்ணதேவராயர் கால செப்பு பட்டயங்கள் இங்குள்ளன. அமாவாசையிலும், கிரகண நாட்களில் மக்கள் இங்கு வந்து திருமுழுக்குச் செய்வார்கள்.
வைத்தீஸ்வரன் கோயில்
'புள்ளிருக்கும் வேளூர்' என்று இவ்வூரை தேவாரம் குறிப்பிடுகிறது. இக்கோயிலில் சிவனுக்குப்பெயர் வைத்தியநாதர். இங்குள்ள முருகனுக்கு, செல்வமுத்துக்குமாரசாமி என்று பெயர். செவ்வாய்க் கிரகமாகிய அங்காரகனுக்கு உரிய தலமாக இவ்வூர் உள்ளது. இக்கோயில் தருமபுர ஆதீனத்தின் கீழ் வருகிறது.
திருவெண்காடு
சீர்காழியிலிருந்து 11 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. தேவாரத்தால் பாடல்பெற்ற தலம். மணிவாசகரும் இத்தலத்து பெருமானை பாடிப்பரவியுள்ளார். தில்லையிற் போலவே இங்கும் நடராசசபை அமைந்திருக்கிறது. புதனுக்குத் தனிகோயிலும், சிலப்பதிகாரம் கூறும் சூரியகுண்டம்-சோமகுண்டம் என்னும் குளங்கள் இங்குண்டு. இக்கோயிலிலுள்ள அகோரவீரபத்திரருக்கு ஞாயிறு இரவில் பூசை செய்யப்படுகிறது. 1950 ஆண்டு இக்கோயில் புதைபொருள் ஆய்வு செய்த போது, உலகப்புகழ்பெற்ற சோழர்பாணி செப்புத் திருமேனிகளான புதன், அர்த்த நாரீசுவரர் திருவுருவங்கள் எடுக்கப்பட்டு தஞ்சை கலைக்கூடத்திற்கு சென்று விட்டது. இன்றும் அங்கு மாதொரு பாகனை கண்டு மகிழலாம்.
செம்பொன்னார் கோயில்
இவ்வூர் மயிலாடுதுறையிலிருந்து தரங்கை போகும் வழியில் 8.கி.மீ தொலையில் இருக்கிறது. தேவார மூவராலும் பாட தலம். சோழ மன்னர்களின் வெற்றி நினைவாக அமைந்த இக்கோயில், நாயக்க மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டது. இக்கோயிலில் அழகிய செப்பு விக்ரகங்களும், கொடிவட்டமும், கல்வெட்டும் குறிப்பிடத்தக்கவை.
குத்தாலம்
மயிலாடுதுறைக்கு தென்மேற்கே 10.கி.மீ தொலைவிலிருக்கிறது. நெல்வாணிகம் இங்கு முக்கியத் தொழில். தேவார மூவராலும் பாடப்பட்டத்தலம். சோழர்கள் கட்டிய மூன்று கோவில்கள் இங்கு உள்ளன. அதில் ஒரு கோயிலின் பெயர்: 'சொன்னவாறு அறிவார் கோயில்'. இக்கோயிலில் உள்ள மணக்கோல நாதர் திருமேனியும்; சண்டிசுவரும் செம்பியன் மாதேவி திருப்பணி காண வேண்டியவை.
திருக்கடவூர்
மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையிலுள்ள இந்த இரயில் நிலையத்திற்கு திருக்கடையூர் என்றும் தலத்துக்கு திருக்கடவூர் என்றும் பெயர். இவ்வூர் கோயில் தேவார மூவரால் பாடப்பெற்றது. சிவபெருமானின் அஷ்டவீரட்ட தலங்களுள் ஒன்று. காலசம்கார மூர்த்தியும் எருமையுடன் கூப்பிய கையொடு நிற்கும் யமனும், அபிராம அம்மன் கோயிலும் இங்கு காணத்தக்கவை. இத்தலத்தில் எழுந்த சமய இலக்கியம்: அபிராமி அந்தாதி.
தில்லையாடி
இவ்வூர் தரங்கம்பாடி அருகில் இருக்கிறது. தமிழிசைக்குத் தரமான பாடல்களைத் தந்த அருணாசலக் கவிராயர் பிறந்தது இவ்வூரே. தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகளுடன் போராடிய தில்லையாடி வள்ளியம்மை பிறந்ததும் இந்தவூர்தான். வள்ளியம்மையை நினைவு கூரும் முகமாக நினைவு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
வழுவூர்
மயிலாடுதுறையிலிருந்து எட்டு கி.பி. தொலைவில் உள்ளது. நாட்டிய மேதை வழுவூர் ராமைய்யாபிள்ளை பிறந்ததும் இவ்வூரே. தேவாரத்தில் குறிப்பிடப்பட்ட வைப்புத்தலம். இங்கள்ள கோவிலில் பிட்சாடணர் திருவுருவமும், முருகன் திருவுருவமும், ஐந்து தீர்த்தங்களும், மாசிமகத்தன்று நிகழும் கஜசம்கார திருவிழாவும் காணத்தக்கவை.
மயிலாடுதுறை
- தஞ்சை-சென்னை வழியில் உள்ள முக்கியமான இரயில் தடத்தில் உள்ளது இவ்வூர். இறைவி மயிலாக ஆடிய காவிரித் துறையில் இவ்வூர் அமைந்ததால் மயிலாடுதுறை என அழைக்கப்பட்டது. சோழர் காலத்திற்கு பின்னர் இவ்வூர் வடமொழி பெயர்பெற்று 'மாயூரம்' என்றானது. பின்னர் தமிழறிஞர்கள் போராடி பழைய பெயரை நிலைநாட்டினர். தமிழில் முதல் நாவல் படைத்த வேதநாயகம் பிள்ளை இவ்வூரினரே ஆவார்.
- காவிரியின் வடகரையில் வள்ளலார் கோயில், துலாகட்ட மண்டபத்தருகே விசுவநாதர் கோயில், சம்பந்தர் பாடிய மயூரநாதர் கோயில், அதன் உட்கோயிலும் அருணகிரிநாதர் பாடல் பெற்றதுமாகிய குமரக்கட்டளை என்ற கோயில்களும் இங்குண்டு.
- ஆடி 18-லும் ஐப்பசி மாதத்தில் 30 நாட்களிலும் இங்கே காவிரிக்கரையில் பல்லாயிரம் மக்கள் நீராடுவர். ஐப்பசி மாதத்தின் கடைசி நாளில்-கடை முகத்தன்று முழுகுவர். அன்று வரமுடியாதவர்கள் கார்த்திகை முதல் நாளில் முழுகுவர் அன்றைய பெயர்: 'முடவன் முழுக்கு நாள்'.
நாகப்பட்டினம்
1782-முதல் நாகப்பட்டினத்தைத் தலைநகராகக்கொண்டு, பிரிட்டிஷார் தஞ்சை மாவட்டத்தை ஆளத்தொடங்கினர். 1844- நாகப்பட்டினத்தில் அர்ச். சூசையப்பர் கல்லூரி தொடங்கப் பெற்றது. 1861 நாகையிலிருந்து தஞ்சைக்கு இரயில்பாதை போடப்பட்டது. 1866 இல் நகராண்மைக் கழகம் நிறுவப்பட்டது.
தென்னிந்திய இரயில்வேயின் தொழிற்கூடம் பல ஆண்டுகள் நாகையில் இருந்தது. 1928-இல் இத்தொழிற்கூடம் திருச்சியை அடுத்த பொன்மலைக்கு மாற்றப்பட்டது. இதன் விளைவாக தொழிலாளர்கள் நாகையிலிருந்து பொன்மலைக்கு சென்றனர். இங்கிருந்த பலர் மலேயா, சிங்கப்பூர் நாடுகளுக்கு சென்றுவிட்டனர். அதற்குக்காரணம் சுதந்திரத்திற்கு பிறகு பலமுறை புயலா இவ்வூர் பாதிக்கப்பட்டதுதான். 1941 க்குப்பிறகு நாகை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை இழந்தது. அந்த இடத்தை தூத்துக்குடி பெற்றது.
டச்சு ஆட்சியின் அறிகுறிகளாக செயிட்பீட்டர் தேவாலயம், ஹாலண்டு பங்களா, 20 அடி உயரமுள்ள கொடிமரம், டச்சுமார்கெட், ஹாலாண்டு ரோடு போன்றவை இன்றளவும் உள்ளன.
வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் தற்போது புகழ்பெற்று விளங்கும் தொழிற்பயிற்சி நிறுவனம் ஆகும்.
நாகை பாடல்பெற்ற தலம் சப்த விடங்கர் தலங்களுள் இது ஒன்று. இறைவன் பெயர் காயாரோகணசாமி, அம்மன்: நீலாய தாட்சி, இக்கோயிலில் நவக்கிரகங்கள் யாவும் மேற்கு நோக்கியிருக்கின்றன. வைகாசி பிரமோற்சவமும், ஆடிப்பூரத்தன்று பீங்கான் ரத விழாவிலும் இங்கு காணத்தக்கவை.
சிக்கல்
நாகையிலிருந்து 5கி.மீ. தொலைவில் இருக்கிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். சிக்கல் சிங்கார வேலன் கோவில் எழுநிலை மாடமும் 80 அடி உயரமுள்ள கோபுரமாக இருக்கிறது. இங்குள்ள தங்க மயிலும், தங்க ஆட்டுக்கிடா வாகனமும் காணத்தக்கவை. சிவபெருமான், சிங்காரவேலர் திருவுருவங்கள் கட்டுமலையின் மேலுள்ளன. கந்தசஷ்டி, கார்த்திகை விழாக்களை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.
எட்டுக்குடி
எட்டிமரங்கள் நிறைந்த காடுகள் இருந்ததால் 'எட்டுக்குடி' என்ற பெயர் பெற்றது. நாகைக்கு தென்மேற்கே 25 கி.மீ தொலைவில் இருக்கிறது. அருணகிரிநாதரின் பாடல் பெற்றது. எட்டுக்குடிக் கோயிலில் முருகனைத் தாங்கும் மயிலின் உருவம் கல்லில் இருந்த போதும் மயியின் கால்கள் கனமின்றி மென்மையாக இருப்பது காணத்தக்கது. இது ஒரு அரிய வேலைப்பாடாகும்.
இலங்கையிலுள்ள கதிர்காமம், திருக்கேதீச்சுரம், திருக்கோணமலை மூன்றும் இந்தியத்தமிழரின் ஈடுபாட்டுக்குரிய தலங்களாக இருப்பவை போல, ஈழத்தமிழர் வழிபடும் தமிழ்நாட்டுக் கோயில்களுள் சிதம்பரம், வேதாரண்யம், எட்டுக்குடி, திருவாலங்காடு ஆகிய நான்கும் முக்கியமானவை.
வேதாரண்யம்
வடமொழியில் மாற்றபெற்ற ஊர் பெயர்களில் இந்த ஊரும் ஒன்று இங்கு மான்கள் அதிகம் இருந்ததால் பண்டையக் காலத்தில் இவ்வூரை 'திருமரைக்காடு' என்று அழைக்கப்பட்டது. இரை உணராத வேற்றுமொழியினர் 'மரை'யை மறை எனக் கொண்டு வேதம் + ஆரண்யம் = வேதாரண்யம் என்று தங்கள் போக்குக்கு ஏற்ப மாற்றி விட்டனர். வேதாரண்யம், நாகையிலிருந்து 55 கி.மீ தொலைவிலுள்ளது சிவன் மணவாளசுவாமியாக அகத்தியருக்கு காட்சி கொடுத்த இடம் என்பது ஐதீகம். திருநாவுக்கரசர் 11 பாடல்கள் பாடி இக்கோயிலின் கதவை திறந்ததும்; ஞானசம்பந்தர் பாடிய பாட்டால் மூடிக்கொண்டதாகக் கூறி இந்நிகழ்ச்சியை சித்தரிக்கும் பூட்டும் திருவிழா மாசிமாதத்தில் நடைபெறுகிறது.
யாழ்ப்பாணத்தார் இக்கோயிலுக்கு நிறைய திருப்பணி செய்திருக்கிறார்கள் இக்கோயிலில் சரசுவதி கையில் வீணையின்றி ஏடுமட்டும் இருப்பது, நவக்கிரகங்கள் கிழமை வரிசைப்படி ஒரே நேர்கோட்டு வரிசையில் அடுத்தடுத்து இருப்பது, சோழர் வரலாற்றைக் கூறும் 84 கல்வெட்டுக்கள் இக்கோயிலில் உள்ளன.
இங்கு காண வேண்டியவை
மரகத புவினி விடங்கர், இராமர் வழிபட்டலிங்கம், கதோபநிஷத்தை இயற்றிய நசிகேதர் தவம் செய்த இடம், விசுவாமித்திர தீர்த்தம், தேர் முதலியவை.
1930-ஆண்டு சர்தார் வேதரத்தினம் பிள்ளை தலைமையில் ராஜாஜி 'உப்பு சத்தியாகிரகம்' செய்த இடமானதால் இந்தியா முழுவதும் இந்த ஊரைப்பற்றி செய்தி பரவியது. மீன், உப்பு, மிளகாய், காய்கறிகள், கவுதாரி, மாம்பழம் முதலியன இவ்வூரிலிருந்து ஏற்றுமதியாகிறது.
அகத்தியாம் பள்ளி
இவ்வூர் வேதாரண்யத்திலிருந்து 2 1/2 கி.மீ தொலைவிலுள்ள கடற்கரையூர். இங்குதான் உப்பு சத்தியாகிரகம் நடத்தப்பட்டது. அதற்கான நினைவுத்தூன் இங்கு கட்டப்பட்டுள்ளது. இங்கு அகத்தியருக்கு ஒரு கோவில் உண்டு.
கோடியக்கரை
வேதாரண்யத்திலிருந்து 11 கி.மீ தொலைவிலுள்ளது. தாலமி என்ற வெளிநாட்டு ஆசிரியர் இவ்வூரை தம் படைப்பில் குறிப்பிட்டுள்ளார். வெள்ளைக்காரர்கள் பாயின்ட் காலிமோர் என்று பெயரிட்டனர்.
வடக்கே இருந்து தெற்கு நோக்கிச் செங்குத்தாக வந்து கொண்டிருக்கும் நமது கடற்கரை இந்த முனையில் நேர் கோணமாக மேற்கு நோக்கிச் செல்லத் தொடங்குகிறது. கோடிக்கரையில் காலையில் கீழைக்கடலில் கதிரவன் தோன்றுவதையும், மாலையில் தெற்குக் கடலில் சூரியன் மறைவதையும் பார்க்கலாம். இதுபோன்ற காட்சியை கன்னியாகுமரியில் மட்டும்தான் பார்க்கலாம். கடற்கரையில் நீராட, ஆடி, தை அமாவாசைகளில் மக்கள் பெருங்கூட்டமாக வருகின்றனர். 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அர்த்தோத்திரய விழாவன்று கடலில் நீராடுவது சிறப்பாகக் கருதத்தக்கது.
ஆதாரம்: மாவட்ட நிர்வாகப்பிரிவு
தமிழ்நாடு சுற்றுலா ஒர் தொகுப்பு
முன்னுரை
தமிழ்நாடு மாநிலம் வங்காள விரிகுடாவின் கரையோரம் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் செழிப்பான பண்டைய நாகரிகத்தின் தொட்டிலாக இருந்த மாநிலம் இன்று வெற்றிகரமாக முன்னேற வழி வகுக்கிறது..
இந்த மாநிலத்தின் புகழ்பெற்ற வரலாறு, 2000 வருடங்களுக்கு மேல் பரவியிருக்கிறது, அது பல பேரரசுகளின் உயர்வு மற்றும் வீழ்ச்சியைக் கண்டிருக்கிறது, அதாவது: சேரன், சோழர்கள், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்கள். ஒவ்வொரு காலமும் அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் படைப்புகளோடு நிலத்தை வளமை செய்து, மற்றும் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் ஒரு மரபுவழியை விட்டுச் சென்றிருக்கிறது.
சமீபகாலமாக தமிழ்நாடு உலக சுற்றுலா பயணிகள் கவனத்தை ஈர்க்கிறது.
நிறைய மக்கள் பழைய கோவில்களில், பொறிக்கப்பட்ட கற்களில் தொன்மங்கள் மற்றும் புனைவுகள் எப்படி உயிருடன் வருகின்றன என்பதைப் பார்க்க தமிழ்நாட்டிற்கு பயணம் செய்கிறார்கள். மகாபலிபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் எப்படி நிபுணத்துவ கைவினைஞர்கள் திட பாறைகளிலிருந்து சுத்த இசையை உருவாக்கினார்கள் என்பதை பார்க்க தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள்.
கோவில்கள்
தமிழ்நாட்டு கோயில்கள் மற்றும் தேவாலயங்களின் புகழ் மிக்க வரலாறு நூற்றாண்டுகளைக் கடந்தது கட்டடக்கலையின் திறமையை வெளிப்படுத்துகிறது. சோழர்கள், பல்லவர்கள், பாண்டியர்கள் மற்றும் நாயக்கர்களின் வித்தியாசமான படைப்பு திறன் பல கோயில் கட்டமைப்புகளில் தங்கள் முத்திரைகளோடு விட்டு தமிழகத்தின் புனித இடத்தை அலங்கரிக்கின்றன. இறைவன் வெங்கடேசா, விநாயகர் மற்றும் சிவனிலிருந்து முருகன் மற்றும் விஷ்ணு வரை, கோவில் இடங்களில் பல்வேறு கடவுள்களை அற்புத விக்கிரகங்களும் பேணி காக்கப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் இருந்து, அண்மையில் 20 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாடு காலம் மற்றும் சமகால கோயில் கட்டிடக் பாணி இரண்டையும் காண்பிக்கிறது. கலை, கலாச்சாரம் மற்றும் பழமையான ஆட்சியாளர்கள் தொன்ம சரித்திரத்தால் ஈர்க்கப்பட்டு, கோவில்கள் மற்றும் தேவாலயங்கள் தமிழ்நாட்டின் மெய்சிலிர்க்க வைக்கும் தொடர்களைப் பிரதிபலிக்கிறது.
ஒரு பொதுவான கோபுர குணவியல்புகளை, மேலும் கோவில் கோபுரங்கள் என அறியப்படும் இவைகளுடன், தமிழ்நாட்டின் கோவில்கள் 700 A.Dக்கு கூட பின்னோக்கி செல்கிறது. முக்கியமாக செங்கல் மற்றும் காரைகள் மூலப் பொருள்கள் கொண்டு கட்டப்பட்ட இந்த புனிதமான வழிபாட்டு இடங்கள், அவைகளின் கம்பீரமான தூண் கட்டமைப்புகள், விசாலமான பிரகாரங்கள் மற்றும் அலங்கரித்த நுழைவாயில்களுக்காக, உலகெங்கிலும் மதிப்பிற்குரியதாக உள்ளன.
கடற்கரைகள்
தமிழ்நாடு கடற்கரைகள் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளன மற்றும் அவைகள் அனைத்தும் தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு பிடித்த சுற்றுலா தலமாக செயகின்றன. மாநிலம் தனது சொந்த அழகை கொண்டிருக்கும் தென் இந்தியாவின் சிறந்த கடற்கரைகளில் சிலவற்றைப் பெற்றுள்ளன. இவை சூரிய குளியல், ஓய்வெடுக்க மற்றும் நீர் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு சிறந்த இடங்களாக உள்ளன. சென்னைக்கு நாற்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோவளம் தனிமையில் அவர்களின் ஓய்வு நேரத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவர்களுக்குச் சரியான விடுமுறை இலக்காகப் பணியாற்றுகிறது. கோவளம் கடற்கரை அந்த இடத்தில் அழகு சேர்க்க உயரமான பனை மற்றும் தென்னை மரங்களை வரிசையாக கொண்டிருக்கும். இந்த இடம் தண்ணீர் விளையாட்டுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.
வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்கள்
தமிழ்நாடு, தென் இந்திய கலாச்சார சூடான இருக்கை, அதன் பல்வேறு இயற்கை பாரம்பரியம் காரணமாக அதன் தொப்பியில் மற்றொரு இறகைச் சேர்த்துள்ளது. தமிழ்நாடு வனவிலங்கு பயணம் மிகவும் இயல்பாக சுற்றுலா பயணிகள் மத்தியில் இயற்கையிலேயே ஒரு ஆர்வமாக உள்ளது. தமிழ்நாடு ஒரு மாறுபட்ட நிலத்தின் அமைப்பால் குறிக்கப்பட்டுள்ளது. மாநிலம், 1,30,058 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதியில், 17.6% காடுகள் மூடப்பட்டிருக்கும் ஒரு பகுதி உள்ளடக்கப்பட்டுள்ளது. பசுமையான நிலப்பகுதி, வளமான தாழ்வான சமவெளிகள், உயர்ந்த மலைகளையும், மேற்கு மலைத் தொடரையும் கொண்டுள்ளது. வறண்ட மற்றும் ஈரமான இலையுதிர் காடுகளின் ஒரு மகிழ்ச்சிகரமானதாக கலவை, ஈரமான பசுமைமாறா காடுகள், திரள்கள், புல்வெளிகள் மற்றும் முட்களுள்ள புதர்க்காடுகள் மற்றும் சதுப்புநிலங்கள் மாநிலத்தின் இயற்கை தாவரத்தை செய்கின்றன..
விடுதிகள்
தமிழ்நாடு நட்சத்திர அந்தஸ்து மற்றும் நட்சத்திர அந்தஸ்து இல்லாத இரண்டு வகைக்கும், பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும் வீடாக இருக்கிறது. தவிர, அது ஓய்வு விடுதி, உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றுடன் அனைத்து பிரிவு பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்கிறது. இந்தியாவில் 28 மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு தீபகற்ப இந்தியாவின் தெற்கில் அமைந்துள்ளது. மாநில கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் அது கிழக்கு தொடர்ச்சி மலை எல்லையாகவும், தென் கிழக்கில் அது மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தியால் சூழப்பட்டுள்ளது. நீலகிரி, பாலக்காடு மற்றும் ஆனைமலை மேற்கே, தெற்கே இந்தியப் பெருங்கடல் மற்றும் கிழக்கே வங்காள விரிகுடா தமிழ்நாட்டை உள்ளடக்குகின்றன. சென்னை தலைநகராகவும் மற்றும் தமிழ்நாட்டின் பெரிய நகரமாகவும் சேவை புரிகிறது.
தமிழ்நாட்டை அடைவதற்கான சேவைகள்
தமிழ்நாடு மாநிலத்தில் கோயில்கள், நினைவுச் சின்னங்கள், கடற்கரைகள், மலைவாழிடங்கள் மற்றும் காட்டு வாழ்க்கை ஆகியவை வசீகரமானதாகும். செதுக்கப்பட்ட சிற்ப கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் இந்திய நாகரிகத்தின் கட்டடக்கலை சிறப்புகளை காட்டுகின்றன. அமைதியான மலைவாழிடங்களோடு கண்கவர் கடற்கரைகள் ஒரு உதாரண விடுமுறையை உங்களுக்கு உறுதி செய்கின்றன.
மொத்தமாக, தமிழ்நாடு அலட்சியபடுத்த மிகவும் கடினமானது. “தமிழ்நாட்டை அடைவது எப்படி” என்பது, தென்னிந்தியாவின் மிகவும் அழகான இந்த மாநிலத்தை அடைய உதவுகிறது.
விமானம் சேவை
தமிழ்நாட்டில் சென்னைக்கருகே ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது அது தமிழ்நாட்டில் சர்வதேச விமானங்களுக்கு ஸ்ரீலங்கா, துபாய், ஜெர்மனி, ஜாகர்த்தா, மலேசியா, இங்கிலாந்த்து, மாலத்தீவுகள், சவுதி அரேபியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு மிகவும் வசதியான நுழையும் புள்ளியாக உள்ளது. நீங்கள் நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் பொது மற்றும் தனியார் விமானங்கள் மூலம் சென்னையை அணுகலாம்.
ரெயில் சேவை
தமிழ்நாட்டில் முக்கிய ரயில் நிலையம் சென்னையில் உள்ளது. பல முக்கியமான ரெயில்கள் சென்னையை நாட்டில் மற்ற முக்கிய ரயில் நிலையங்களுடன் இணைக்கின்றன.
சாலைசேவை
சாலையின் ஒரு விரிவான நெட்வொர்க் தமிழ்நாடு முழுவதையும் இணைக்கிறது. பல தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் பல நிலத்தின் குறுக்கு நெடுக்கே செல்கின்றன. தில்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய முக்கிய நகரங்கள், சாலைகள் வழியாக சென்னை மற்றும் மாநிலத்தின் மிக முக்கிய நகரங்களுடன் இணைக்கப் பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழக (TNSTC) பேருந்துகள் மாநிலம் முழுவதும் ஓடுகின்றன மற்றும் அண்டை நகரங்கள் மற்றும் மாநிலங்களுடன் அதை இணைக்கின்றன.
தமிழ்நாடு ஷாப்பிங்
தமிழ்நாடு ஷாப்பிங் ஒரு உண்மையான மகிழ்ச்சிகரமான அனுபவம். இந்த பிராந்தியம் கலை மற்றும் கைவினை பொருட்களுக்கு ஒரு விதிவிலக்கான் பணக்கார பாரம்பரியத்தை அதிகம் பேசுகிறது. ஷாப்பிங் செய்வதில் மிகவும் பிரபலமான ஒரு பொருள் தமிழ்நாட்டில் அதனுடைய பட்டுத்துணியாகும். தஞ்சாவூர், கோயம்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகியவை பட்டுக்காக உலகப் புகழ் பெற்றுள்ளன, அதேசமயம் மகாபலிபுரத்தில் நீங்கள் கல் சிற்பங்கள் வாங்க முடியும்.
தமிழ்நாட்டில் கடைக்கு மற்றொரு புகழ்பெற்ற பொருள் இந்திய பாரம்பரிய இசைக்குப் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளாகும்.
தமிழ்நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள்
தமிழ்நாடு இந்தியாவின் தென்கோடியிலுள்ள மாநிலம் மற்றும் அது பலவிதமான ஈர்க்கும் சுற்றுலாத் தலங்களின் வீடாக உள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்தலங்கள் அழகிய பள்ளத்தாக்குகள், அதிர்ச்சி தரும் கடற்கரைகள், அமைதியான மலைவாழிடங்கள் வனவிலங்கு பூங்காக்கள், அழகான கோயில்கள், மற்றும் கண்ணுக்கினிய மலைகளுக்கு உட்பட்டவை ஆனால் இவற்றிற்குள் மட்டுமே வரையறுக்கப்பட்டவையல்ல.
வேளாங்கண்ணி
வேளங்கண்ணி வங்காள விரிகுடாவின் கரையில் இருக்கும் ஒரு குக்கிராமமாகும். இங்கு அமைந்துள்ள புனித பெசிலிக்கா எங்கள் லேடி ஆப் ஹெல்த், இந்தியாவிலுள்ள முக்கியமான கிருத்துவ யாத்திரை தலங்களில் ஒன்றாகும். இது ஜாதி மற்றும் சமயமில்லாமல் உலகம் முழுவதிலிருந்தும் யாத்ரிகர்களை இழுக்கிறது. அற்புதமான கட்டிடம் கோதிக் கட்டிடக்கலை கொண்டு அலங்கரிக்கப்பட்டது. இரகசியங்கள் மற்றும் அதிசயக் கதைகள் இங்கே பொதுவானதாக உள்ளன மற்றும் சர்ச் அதன் ஆசை நிறைவேற்றும் சக்தியினால் உயர் மதிப்பு பெற்றது. பக்கச்சுவர்களில் அழகாக விவிலிய சம்பவங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதில் விநோதம் என்னவென்றால், இங்கு வரும் யாத்திரிகள் பல இந்து வழிகளை வேண்டுதலின் போது பின்பற்றுகின்றனர். அதில் மொட்டை அடித்துக் கொள்ளுதல் மற்றும் காது குத்துதலும் அடக்கம்.
வேதாரண்யம்
திருமறைக்காடு என்றும் அறியப்படும் வேதாரண்யம், சி.இராஜகோபாலச்சாரி உப்பு யாத்திரை மற்றும் காந்திஜியின் தண்டி யாத்திரைக்கு சாட்சியாகும்.
கோடிக்கரை
நாகப்பட்டினத்திலிருந்து 66 கி.மீ. மற்றும் தெற்கு வேதாரண்யத்திலிருந்து 11 கி.மீட்டரில் உள்ள கோடிக்கரை ஒரு பிரபலமான கடலோர நகரம் ஆகும். கெலிமர் புள்ளி என்று அறியப்படும் இது, விலங்குகளுக்கு ஒரு வனவிலங்கு சரணாலயமும் மற்றும் இடம் பெயரும் பறவைகளுக்கு பறவைகள் சரணாலயமும் கொண்டது. பறவைகள் ரஷ்யா, சைபீரியா, ஈரான், ஆஸ்திரேலியா மற்றும் இமயமலைகள் போன்ற தூரத்தில் இருந்தும் பயணம் செய்வதாக அறியப்படுகிறது. இனங்கள் ஃபிளமிங்கோ, இபுசெஸ், ஹெரான்கள், ஸ்பூன்பில்ஸ், உட்காக், ஹார்ன்பில்ஸ், ஸ்டோர்க்ஸ், வில்லோ வாப்ளர், வேக்டெய்ல் மற்றும் காட்டு வாத்து அடங்கும். கலங்கரை விளக்கம், சோழர் காலத்தை நினைவூட்டுவதாக உள்ளது.
திருநள்ளார்
காரைக்காலிலிருந்து 5 கி.மீ தூரத்திலுள்ள திருநள்ளாறு, இறைவன் சனீஸ்வரரின் இருக்கையாகும்.
திருநெல்வேலி
திருநெல்வேலி அல்லது நெல்லையின் வரலாறு 2000 வருடங்கள் பழமையானது. திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் பாண்டவர் தலைநகரமான இந்த நகரம் காந்திமதி நெல்லையப்பர் சிவன் கோவிலினால் இந்த பெயர் வைக்கப்பட்டது.
முண்டந்துரை-களாக்காடு வனவிலங்கு சரணாலயம்
1988 ஆம் ஆண்டு முதல் தேசிய புலிகள் சரணாலயம், முண்டந்துரை-களாக்காடு வனவிலங்கு சரணாலயம், 817 சதுர கி.மீ பரப்பளவு வரை நீளுகிறது. சாலையைப் வழியாக அம்பாசமுத்திரத்திலிருந்து களாக்காடு (15 கிமீ) தொலைவில் உள்ளது. புலிகளைத் தவிர மற்ற கொடூரர்கள் சிறுத்தைப் புலிகள், காட்டுப் பூனைகள், சிவெடஸ், டோல்ஸ், குள்ளநரிகள் மற்றும் கோடிட்ட கழுதைப் புலிகள் அடங்கும். அது வரையாடு, மலபார் ராட்சத அணில், கரடி, இந்திய காட்டெருமை, இந்திய யானை, சுட்டி மான் மற்றும் Pangolin போன்ற ஆபத்தான இனங்கள் ஒரு பாதுகாப்பான புகலிடமாக உள்ளது. விஷ ஊர்வன, நீர்நில வாழ்வன மற்றும் பெரிய பல்வேறு வகையான பறவைகளும் சரணாலயத்தில் காணப்படுகின்றன. புலிகள் காப்பகம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகளுக்கு ஆண்டு முழுவதும் திறந்தே உள்ளது. முண்டந்துரை மற்றும் தலையானை வன ஓய்வு, வீடுகள், சுற்றுலா பயணிகளுக்கு தங்க விடுதிகள் வழங்கும்.
மாவட்ட அறிவியல் மையம்
திருநெல்வேலி மாவட்டத்தின் அறிவியல் மையம் கண்டுபிடிப்பு செயல்முறை மூலம் அறிவியல் கற்பித்தலில் ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்து விஞ்ஞான பயன்பாடுகளில் காண்பிக்கிறது. மாவட்ட அறிவியல் மையம் மொபைல் அறிவியல் கண்காட்சியை, படம் காட்ட, தற்காலிக கண்காட்சிகள், அறிவியல் நாடகங்கள் மற்றும் அறிவியல் கண்காட்சி கூட நடத்துகிறது.
கூத்தங்குளம் பறவை சரணாலயம்
திருநெல்வேலியின் தெற்கு கோடியிலுள்ள புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம், இடம் பெயரும் பறவைகளுக்கு சொர்க்கமாக இருந்து வருகிறது. இங்கே குளிர்காலத்தில் 35 பல்வேறு இனப் பறவைகளைப் பார்க்கலாம்.
குற்றாலம்
குற்றாலம் அதன் அழகான் நீர்வீழ்ச்சிக்காக அறியப்படுகிறது. அது தன்னை மேலும் எட்டு ஆற்றல் வாய்ந்த வீழ்ச்சிகளாக பிரித்துக் கொள்கிறது மற்றும் இது நாள் முழுவதும் குளிப்பதற்கு பொருத்தமானது. நீர் சிகிச்சை பண்புகள் கொண்டது மற்றும் கீல்வாத மூட்டுகள், நாள்பட்ட தலைவலி மற்றும் நரம்பு கோளாறு ஆகியவற்றை நீரைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது குணப்படுத்துகிறது.
ஸ்வாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவில்
சுவாமி நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயில் மணி மண்டபத்தில் உள்ள இசையுடன் தூண்கள் தாக்கியபோது இனிய ஒலியை ஏற்படுத்துகின்றன. ஆயிரம் தூண்களைக் கொண்ட சோமவார மண்டபம், வசந்த மண்டபம் மற்றும் தம்ரா சமையிலுள்ள அழகான சிற்பங்கள் 700 AD.க்கு பின்னோக்கி செல்கின்றன
திருச்சிராப்பள்ளி
அமைதியான காவரி நதிக்கரையில் திருச்சிராப்பள்ளி மதுரையின் நாயக்கர்களால் கட்டப்பட்டது. காவேரி நதி 146.90 சதுர கி.மீ பரப்பளவு பரவியுள்ளது. திருச்சிராப்பள்ளி ஆரம்ப சோழர்கள் ஆதிக்கத்திலும் பின்னர் பல்லவர்களிடமும் இருந்தது. அன்புடன் திருச்சி என்று அழைக்கப்படும் இந்த பழமையான நகரம் அதன் கட்டிடக்கலை அற்புதங்களுக்குப் பிரபலமானது. தமிழ்நாட்டின் இந்த சலசலக்கும் நகரம், வண்ணமயமான கண்ணாடி வளையல்கள், செயற்கை வைரங்கள், சுருட்டு, கைத்தறி துணி, மற்றும் மர மற்றும் களிமண் பொம்மைகளுக்குப் பிரபலமானது.
மலைக் கோட்டை
மலைக் கோட்டை நகரம் ஒரு திடீர் பாரிய பாறை உருவாக்கம் உச்சியில் மற்றும் 83 மீட்டர் உயரத்தில் உட்கார்ந்துள்ளது. இந்தப் பாறை 3800 மில்லியன் வருடங்களுக்கு முன் செல்கிறது என்பதே ஒரு அற்புதம். எனினும், முக்கிய சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடம் கோட்டையை விட உள்ளே உள்ள கோவில் தான். விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்ட உச்சிப் பிள்ளையார்கோவில் திருச்சிராப்பள்ளியின் ஒரு கண்கொள்ளா காட்சியை அளிக்கிறது. இடிபாடுகள் மத்தியில், 344 படிகள் ஏறுவது 3 வது நூற்றாண்டு கல்வெட்டுகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.
ஸ்ரீரங்கம்
ஒரு 600 ஏக்கர் தீவில் அமைந்துள்ளது – திருச்சிராப்பள்ளியிலிருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள இது, ஒரு மிக முக்கியமான பகுதியாக இந்தியாவின் யாத்திரையில் உள்ளது. ஒரு பக்கம் காவேரி நதி மற்றொரு பக்கம் அதன் கிளை நதியான கொள்ளிடம் மீதும் பிரிந்துள்ளது. ஸ்ரீரங்கம் நகரம் முழுதும், பெரிய ஸ்ரீரங்கநாத ஸ்வாமி கோவிலின் ஏழு சுவர்களுக்குள் மூடப்பட்டுள்ளது. அங்கே 21 கோபுரங்கள் உள்ளன. அவற்றில் ராஜகோபுரம் தான் மிகவும் பெரியது மற்றும் பல மைல்களுக்கு அப்பாலிருந்தும் ஒரு விந்தையான தோற்றமாகும்.
திருவானைக்காவல் (அ) ஜம்புலிங்கேஸ்வரர் கோவில்
ஸ்ரீரங்கத்திற்கு அருகேயுள்ள இந்த அமைதியான சிவன் கோவில், குறிப்பாக அதன் சிறந்த கட்டடக்கலை ஆடம்பரத்திற்காக அறியப்படுகிறது. ஒரு பண்டைய ஜம்பு மரத்தின் கீழ், இங்குள்ள லிங்கம் தண்ணீரால் பாதி மூழ்கடிக்கப் பட்டிருக்கிறது, இது கடவும் நீராக அவதாரம் எடுத்ததைக் குறிக்கிறது.
தேனி
தெற்கு தமிழ் நாட்டின் தேனி விரும்பத்தக்க சுற்றுலாத்தலம் ஆகும் மற்றும் அதன் அமைதியான சூழலுக்காக அறியப்படுகிறது. மயக்கும் அணைகள், வசீகரிக்கும் அருவிகள் மற்றும் பசுமையான பச்சை நிலச்சரிவுகள் ஆகியன தேனியை மிகவும் வித்தியாசமானதாகச் செய்கிறது.
வைகை அணை
111 அடி வைகை அணை 71 அடி நீரை சேமிக்க முடியும். தேனியின் நாட்டுப்புற சூழலில் இருந்து 14 கி.மீட்டரிலுள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத்தளம் ஆகும்.
மாவூத்து வேலப்பர் கோவில்
இந்த புனிதமான கோவில் ஆண்டிப்பட்டியிலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள பசுமையான வருஷநாடு மலைத் தொடரில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் விநாயகர் மற்றும் சப்தகன்னிகளையும் உள்ளடக்குகிறது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் ஆண்டு திருவிழா உள்ளது.
தேவதனாப்பட்டி
தேவதனாபட்டியிலுள்ள முக்கிய தெய்வம் காமாட்சி அம்மன் கோவில், ஆனால் இங்கே கருவறை எப்போதும் திறக்கப் படுவதில்லை. பூஜை முன்வாயிலுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. மாலை பூஜை பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்கும் செயல்திறன் கொண்ட ஒரு அழகான சூழலை வழங்குகிறது.
தஞ்சாவூர்
முன்பு டாஞ்சூர் நகரம் என்று அழைக்கப்பட்ட கிழக்கு தமிழ்நாட்டின் தஞ்சாவூர், 29,24 சதுர கிமீ பரப்பளவில் நீண்டு காவேரி (காவிரி) ஆற்றுப்படுக்கையில் இருக்கிறது. அது 10 ஆவது முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை சோழர்களின் அதிகார இருக்கையாக இருந்தது மற்றும் விஜயநகர், மராட்டா பிரிட்டிஷார் காலத்தில் மிகவும் முக்கியமானது. கற்றல் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு மையமாக அறியப்படும் இது, அதன் தனிப்பட்ட வெண்கலக் கலை, கைவினைப்பொருட்கள், மற்றும் தென்னிந்திய இசைக்கருவிகளுக்கு, பிரபலமானது
ஸ்ரீ பிரகதீஸ்வரா கோவில்
10வது நூற்றாண்டு சோழ அரசர் ராஜராஜன் 1 னால் கட்டப்பட்ட் ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயம், சோழ கட்டடக்கலை ஆடம்பரத்திற்கு ஒரு அற்புத உதாரணம் ஆகும். அற்புதமான 14 மாடிகளைக் கொண்ட கிரானைட் கோவில் 216 அடி உயரத்திற்கும், மத்திய ஆலயம் என்ற பீடம் 45,72 சதுர மீ மற்றும் சரியான சன்னதி 30.48 சதுர மீ அளவீட்டிலும் உள்ளது. 60.96 மீட்டர் உயரம் ஒரு சதுர தளத்தில் இருந்து செங்குத்தாக உயரும் ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவில் விமானம் மற்றும் மேல் தங்க-பூசப்பட்ட செம்பு கலசம் 339.5 கிலோ எடையுள்ளது. 20 டன் எடையுள்ள பெரிய காளை, நந்தி, ஒரே கல்லில் இருந்து சிற்பமாக செதுக்கப்பட்டது மற்றும் கருவறைக்கு நேர் எதிராகவே அமர்ந்துள்ளது. ஸ்ரீ பிரகதீஸ்வரர் கோவிலின் இந்த மகத்தான அமைப்புக்குள்ளே, 7 மீட்டர் உயர சிவலங்கம் தலைமை தாங்குகிறது. கோவில் உள் சுவர்களில் மற்றும் கூரையில் அழகான ஓவியங்கள் மற்றும் சிறப்பான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அரண்மனை
530 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அது 15 அடி உயரமான சுவரால் சூழப்பட்டுள்ளது, வளாகத்தில் 190 அடி ஆர்சனல் கோபுரம் எட்டு மாடிகளில் கம்பீரமாக நிற்கிறது மற்றும் சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் ஈர்க்கிறது. செரிநாயகர் பாணியில் ஆர்செனல் கோபுரத்திற்கு சிறிது வடக்கு பக்கத்தில் கட்டப்பட்ட, மணி கோபுரம், பிரபலமான மராட்டிய தர்பார் அரங்கில் அழகிய ஓவியங்களுடன் பொருந்தியுள்ளது. சரஸ்வதி மஹால் நூலகம் பண்டைய நூல்கள் மற்றும் கையெழுத்து பிரதிகளின் விலைமதிப்பற்ற சேகரிப்பை வழங்குகிற சமயத்தில், கலைக்கூடம் சோழர் கால கிரானைட், வெண்கலம், கல் சிற்பங்கள் மூலம் செழுமையாக உள்ளது. சங்கீத மஹால் ஒரு அதிசய குறிப்பாக அக்காலத்தின் பொறியியல் திறன்களின் அடையாளங்களைத் தாங்கியுள்ளதாக அறியப்படுகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை சமஸ்தான அரசு தற்போது தமிழ்நாடு மாநிலத்தின் ஒரு பகுதியாக உள்ளது. மாநில மூலங்கள் 17 ஆம் நூற்றாண்டிற்குச் செல்கிறது. புதுக்கோட்டை பல்வேறு பகுதிகளில் சேமிப்பில் உள்ள தொல்பொருள் மூலம் சிறப்பாக உள்ளது. மேலும் புதுக்கோட்டையை ஆண்ட பல்வேறு வம்சாவளிகளால் கட்டப்பட்ட கோயில்கள், மற்றும் கால்வாய்கள் அதிகமாக உள்ளது.
புதுக்கோட்டை, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து 390 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த பிராந்தியம் மாநிலத்தின் மற்ற நகரங்களுடன் இரயில், பஸ் பாதைகளில் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. நகரம், கலாச்சார மற்றும் மத பாரம்பரியத்தை நினைவுச்சின்ன கட்டமைப்புகள் மற்றும் புதுக்கோட்டை பகுதியில் அதிக அளவில் உள்ள புண்ணியத் தலங்களில் காணலாம்.
ஸ்ரீ பிரகதாம்பாள் கோவில்
இது தென் இந்தியாவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இந்தக் கோயில் கோகர்னேஸ்வர தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். கோவிலின் கட்டிடக்கலை அற்புதமானது. நீண்ட காலமாக இந்த கோவில் இங்கிருப்பது, கோவிலில் சில சிறப்பு அம்சங்கள் வளரச் செய்ய வழிவகுத்துள்ளது.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
இந்த கோவில் தேவி மீனாட்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டது மற்றும் பிரகதாம்பாள் கோயிலுக்கு நெருக்கமாக அமைந்திருக்கிறது. கோவிலுக்கு பக்கத்தில் பெரிய-குளம் தொட்டி இருக்கிறது. பெரிய குளத் தொட்டியின் தெற்கு முனை, விநாயகர் பதினாறு வடிவங்களில் உருவம் கொண்டிருக்கும் சன்னதியில் அமைந்துள்ளது.
சென்னை
சென்னை, இந்திய நகரங்களில் நான்காவது பெரிய நகரமாக உள்ளது. கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள சென்னை தெற்கு இந்தியாவிற்கு நுழைவாயில் என்று கருதப்படுகிறது. சென்னை, இந்தியாவின் முதல் முக்கிய பிரிட்டிஷ் குடியேற்றமாக இருந்தது. சென்னை நகரில் பாரம்பரியம் மற்றும் நவீனம் ஒரு கண்கவர் கலவையாகும். வளர்ந்து வரும் மற்றும் மாறும் வெளிப்புறம் காஸ்மோபாலிட்டன் தோற்றம் அளித்தாலும், அதேசமயம் நகரம் உள்புறம் பாரம்பரிய மற்றும் மத தோற்றத்துடனே உள்ளது.
முன்னர் மெட்ராஸ் என்று அறியப்பட்ட சென்னை, 174 சதுர கி.மீ பரப்பளவை உள்ளடக்கியது. இந்த நகரம் முதலில் ஒரு பிரிட்டிஷ் குடியேற்றத்தை சுற்றி வளர்ந்தது. படிப்படியாக சுற்றியுள்ள கிராமங்களில் சில சென்னையுடன் ஒருங்கிணைக்கப்பட்டன.
இந்த நகரம் ஒரு முக்கிய வர்த்தக மையமாகும் மற்றும் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களும் சாலை, ரயில் மற்றும் விமான மூலம் இணைக்கப்பட்டுள்ளது. நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் திரிசூலத்தில், காமராஜ் தேசிய மற்றும் அண்ணா சர்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ளன. சென்னையின் முக்கிய ரெயில் நிலையங்கள் - செண்ட்ரல் மற்றும் எக்மோர். சென்னை ஒரு முக்கியமான கடல் துறைமுகமாகும்.
சென்னை அருகே உள்ள சில முக்கிய நகரங்கள் காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, பெங்களூர், திருப்பதி, வேலூர் மற்றும் மாமல்லபுரம்.
தமிழ்நாட்டில் உள்ள நினைவுச்சின்னங்கள்
- பாரதியார் இல்லம்
- சென்னை போர் கல்லறை
- காமராஜர் நினைவு இல்லம்
- ரிப்பன் கட்டிடம்
- செனட் மன்றம், சென்னை
- வள்ளுவர் கோட்டம், சென்னை
- விவேகானந்தர் இல்லம், சென்னை
- தஞ்சாவூர் அரண்மனை, தஞ்சாவூர்
- மலைக்கோட்டை கோவில், திருச்சிராப்பள்ளி
- பதமநாபபுரம் அரண்மனை, கன்யாகுமர்
- ஓரத்தநாடு
- சிவகங்கை அரண்மனை
தமிழ்நாட்டிலுள்ள மலைவாசஸ்தலங்கள்
- கோத்தகிரி மலை வாசஸ்தலம்
- குன்னூர்
- ஏற்காடு மலை வாசஸ்தலம்
- உதகமண்டலம் மலை வாசஸ்தலம்
- ஏலகிரி மலை வாசஸ்தலம்
- கொடைக்கானல் மலை வாசஸ்தலம்
மலைவாழிடங்கள் வெறுமனே உங்களை மெய்மறக்கச் செய்யும். ஊட்டி தான் அனைத்து மலை வாசஸ்தலங்களின் அரசி என குறிக்கப்படுகிறது அது மிகவும் அழகிய மலை வாசஸ்தலம் ஆகும். கொடைக்கானல் மதுரையிலிருந்து 120 கி.மீ தொலைவில் உள்ளது மற்றும் அதன் அதன் காடுகளின் நிலக்காட்சி மற்றும் அழகிய ஏரிகளால் பார்வையாளர்களை வசீகரிக்கிறது..
ஆதாரம் : http://tamil.mapsofindia.com/
