*:*
தாவரவியல் பெயர்:Gaultheria Fragrentissina wall கொடைக்கானல் ஊட்டி போன்ற இடங்களில் பயிர் செய்யப்படும் இந்தச் செடிகள் நறுமணம் உடையவை எண்ணெய் எளிதில் ஆவியாகும் தன்மை கொண்டவை இதை இந்தியன் வின்டர் கிரீன் ஆயில் என்று கூறுவார்கள் இதன் தைலம் நாம் அன்றாடம்
பயன்படுத்தும் தசை வலி பசை மற்றும் பல மூட்டு வலி தைலங்களில் சேர்க்கப்படுகிறது இதன் பணத்தை முகர்ந்த உடன் நுரையீரல் பகுதி விரிவடைவதால் ஆவி பிடிக்க கூடிய பல மருந்துகளில் இதை சேர்க்கப்படுகிறது நாட்டு மருந்து கடைகளில் விற்கும் கால்தீரியா தைலத்துடன் விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து வழி உள்ள இடங்களில் தடவி வர கால் வலி நீங்கும் கடும் வேலை மற்றும் அசதியினால் உடல் முழுவதும் வலி உள்ளவர்கள் வெந்நீரில் மூன்று சொட்டுக்கள் இத்தயிலத்தை ஊற்றி குளித்து வர உடல் வலி நீங்கும் புத்துணர்ச்சி உண்டாகும் கால்தீரியா தைலத்துக்கு கிருமி நாசினி செய்கை மற்றும் புண்களை ஆற்றும் தன்மை உள்ளதால் அழுகிய புண்களை கழுவி வரவும் புண்களை துடைக்கவும் இந்த தைலம் பயன்படுகிறது நன்றி
No comments:
Post a Comment