Wednesday, January 29, 2025

BP......* *உயர் இரத்த அழுத்தம்

 *.*

காலை உணவுக்கு முன்...

சீரகம் அரை ஸ்பூன்

லவங்கப்பட்டை ஒரு பின்ச் 

ஏலக்காய் ஒன்று 

மொக்கு நீக்கிய கிராம்பு இரண்டு

ஆகியவற்றை வறுத்து அத்துடன்

இரண்டு நெல்லிக்காய் கொட்டை நீக்கி 

அரை எலுமிச்சை பழச்சாறு 

கறிவேப்பிலை ஒரு கைப்பிடி ஆகியவற்றை எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து 200 மில்லி

வெந்நீர் விட்டு கலந்து வடிகட்டி சிறக சிறக பருகவும்

இப்படி தொடர்ந்து காலையில் தேநீர் பருகுவது போல் சுவைத்து குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.


மதியம் உணவுடன்

நெல்லிக்காய்.

சீரகம்.

பூண்டு.

சின்ன வெங்காயம்.


நெல்லிக்காய், சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை அரைத்து உணவுடன் சோ்த்து சாப்பிட்டவும்.


இரவு சாப்பாடுக்கு பின்


வறுத்த பூண்டு 4 பல் மென்று சாப்பிட்டு விட்டு வெண்ணீர் அருந்தவும் அல்லது பச்சை பூண்டு பல் நான்கெடுத்து தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மெல்லாமல் மாத்திரை விழுங்குவது போல் விழுங்கி விட்டு வெந்நீர் ஒரு டம்ளர் பருகவும்


*நன்றி நன்றி* 

*நட்பும் நிகழ்வும் குழு*


*இதயம் வலுவடைவ தற்கான சூரணம்.*


மருதம் பட்டை – 200 கிராம்


 நற்சீரகம்   – 100 கிராம்


சோம்பு    – 100 கிராம்


கொத்தமல்லி விதை 100 கிராம் 


(சீரகம் சோம்பு கொத்தமல்லி விதைகளை வறுத்துக் கொள்ளவும்)


விரலி மஞ்சள்                – 100 கிராம்


*செய்முறை:*


இவற்றை ஒன்றாகத் தூள்செய்து பத்திரப் படுத்தவும். இதில் ஐந்து கிராம் அளவில் எடுத்து, இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, பாதியாகச் சுண்டச் செய்யவும். இதை காலை, மாலை உணவுக்கு பின் அல்லது முன் இருவேளையும் சாப்பிட்டுவர குறைரத்த அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தம். இருந்த சூவடே இல்லாமல் மறையும்.


புகை மற்றும் மதுப்பழக்கம் மற்றும் காஃபின் போன்றவற்றை எடுத்து கொள்பவர்கள் கண்டிப்பாக அதை தவிர்க்க வேண்டும்.


 தினமும் அதிக டீ மற்றும் காபி போன்ற பானங்களை அருந்தாமல் இருப்பதும் நன்மை பயக்கும். 


தினசரி 7-8 மணி நேரம் தூக்கத்தை கொள்வது அவசியம். ரத்த அழுத்தம் குறைய போதுமான தூக்கம் அவசியம்.


 மன அழுத்தம் ரத்த அழுத்த அளவினை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். உடலும், மனதும் சரியாக இருந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். மனக்கவலை, பயம், கோபம் இருந்தால், அது ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு. அதற்காக இசை, யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நன்மை பயக்கும். காலையில் வழக்கமாக அமைதியான சூழலில் பத்து நிமிட தியானம் மிக அதிக அளவில் மன அழுத்தத்தினைக் குறைக்கிறது.


 நாள் ஒன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம். 


 வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இந்த நீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை தினசரி காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் டீ, காபி போன்றவற்றைத் தவிர்த்து இதனைக் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.


 குறைவான உப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரையைத் தவிர மறைமுகமாக சோடியம் சேர்க்கப்பட்ட பேக்கரி ஐட்டங்கள், ப்ராசஸ் செய்யப்பட்ட சீஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சி, ரெடிமேட் உணவுகள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள், சோடா, சாஸ் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். 


 தினமும் மதிய உணவில் அகத்தி கீரையை சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு கட்டுக்குள் வரும்.


மாம்பழம்,ஒமேகா-3,

வெள்ளரி, நெல்லி, கேரட், தக்காளி, திராட்சை,முழு தானியங்கள், வாழைப்பழங்கள்,

கொத்தமல்லி,

அன்னாசி, பேரீச்சை, ஆரஞ்சு, முளைகட்டிய தானியங்கள், முருங்கை, வெங்காயம், பூண்டு, இளநீர், வாழைத்தண்டு, கோதுமைப்புல் சாறு, கறிவேப்பிலை, பட்டாணி, உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, பப்பாளிப்பழம், கொய்யாப்பழம், பீட்ரூட் ஜூஸ், பேரிச்சப்பழம், பூண்டு கீரைகள், காய்கறிகளில்,தோல் நீக்கப்பட்ட இறைச்சிகள் தோல் நீக்கப்பட்ட இறைச்சிகளான கோழி, வான்கோழி, ஸ்ட்ராபெர்ரிகள், அவுரிநெல்லிகள், ஓட்ஸ் மற்றும் பிற முழு தானியங்கள்,பீன்ஸ், பருப்பு வகைகள், பால், தயிர், காட்டேஜ் சீஸ், பெர்ரி பழங்கள், சிட்ரஸ் பழங்கள், இளநீர், பச்சை இலை காய்கறிகள், சியா விதைகள், பாதாம் பருப்பு, பூசணி விதைகள், வால்நட்ஸ், மாதுளம்பழம், தர்பூசணி.......

ஆகியவற்றைச் சாப்பிட உயர் ரத்த அழுத்தம் குறையும்.


 ஒரு இஞ்சியை நன்றாக தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் அவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு நாள் முழுவது நன்றாக சூரிய வெளிச்சத்தில் காயவைக்கவும்.பின் மறுநாள் அவற்றை ஒரு பாட்டிலில் மாற்றி அந்த இஞ்சி துண்டுகள் நன்றாக முழுகும் அளவிற்கு தேனில் ஒரு நாள் முழுவதும் ஊறவைக்க வேண்டும். பின் இந்த இஞ்சி துண்டுகளை தினமும் சாப்பிட பிறகு ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு சாப்பிடுவதினால் இரத்த அழுத்தம் பிரச்சனை குணமாகும்.


போதுமான அளவு தண்ணீர் பருகுதல், போதுமான அளவு தூக்கம் பெறுதல், உடற்பயிற்சி போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் சமமாக முக்கியமாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment