Thursday, January 30, 2025

சுரைக்காய்

 *தினம் ஒரு மூலிகை *

தாவரவியல் பெயர்:Lagenaria Siceraria சுரைக்காய் பொதுவாக இரண்டு சுவை கொண்ட காய்கள் இனிப்பு சுவை மற்றொன்று கைப்பு சுவை உள்ளன கைப்பு சுவை உள்ள காய் காட்டுச்சுறை பேச்சிரை என அழைப்பார்கள் இனிப்பு சுவை உள்ள நாட்டு சுரை

இதன் இலை கொடி காய் விதை மருத்துவத்தில் பயன்படுகிறது உடல் சூட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நீர் சத்தை பெருக்கி அசுத்த திரவத்தை வியர்வை மற்றும் சிறுநீரக மூலமாக வெளியேற்றி செல்லின் உள்ளுறை வெப்பம் மற்றும் வெளி உரை வெப்பத்தை சீராக வைக்கச் செய்யும் கொடியின் தண்டுகள் உடல் வெப்பத்தை குறைத்து நீரை வெளியேற்றும் இலையை குடிநீரிட்டு சர்க்கரை கலந்து காமாலை நோய்க்காக கொடுத்து வரலாம் கொடியை குடிநீரிட்டு வீக்கம் பெருவயிறு நீர்க்கட்டு இவைகளுக்கு கொடுக்க குணமாகும் காய் வெப்பத்தால் உண்டாக்கும் தலைவலிக்கு நெற்றியில் வைத்து கட்டி வரலாம் கை, கால் எரிச்சலுக்கு இதை கட்டுவதுடன் சுரக்காய் சாற்றுடன் எண்ணெய் சேர்த்து காய்ச்சி காண்டமாலைக்கு போட குணமாகும் நன்றி

No comments:

Post a Comment