🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*செய்தி துளிகள்*
🎩🎩SLAS தேர்வு நடைபெறும் நாட்கள்:_
👉4.2.2025 -(செவ்வாய்க்கிழமை)-3 rd std
👉5.2.2025 -(புதன்கிழமை) -5th std
👉6.2.2025 -(வியாழக்கிழமை) - 8th std
🌹👉தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணிகள்.
👉 தேர்வுக்கு நடைபெறுவதற்கு முதல் நாள் வட்டார வளமையத்தில் வினாத்தாள்களை
பெற்று பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லுதல்.(தற்போதைய நிலை)
👉ஒவ்வொரு நாளும் தேர்வு மாணவர்கள் எழுதி முடித்த பிறகு வினாத்தாள்கள் மற்றும் OMR தாள்களை பெற்று வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல்.
👉தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான இருக்கை வசதி வகுப்பறை வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருப்பதை உறுதி செய்தல்.
👉தேர்வு எழுதும் மாணவர்கள் Blue colour ball point pen அல்லது Black colour ball point pen பயன்படுத்துவதை உறுதி செய்தல்.
👉தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தேர்வு எழுதும் நாள் அன்று EMIS - School Login ல் வெளியாகும்.அந்த மாணவர்களின் பெயர் பட்டியலை பள்ளிகளுக்கு வரும் Field Invigilator வழங்கி தேர்வு நடைபெறுவதை உறுதிசெய்தல்.
👉தேர்வு முடிந்து வினாத்தாள்களை அலுவலகத்தில் ஒப்படைக்க வரும் பொழுது Std,Section மற்றும் medium வாரியாக Boys & Girls குறித்து தனியாக ஒரு தாளில் குறித்து வட்டார வளமையத்தில் ஒப்படைத்தல் வேண்டும்.
👉தேர்வு நடைபெறும் நாளன்று காலை Field Invigilator பள்ளிக்கு வருகை புரிந்ததை உறுதி செய்தல் இல்லை என்றால் ஆசிரியர் பயிற்றுநர்களிடம் தகவல் தெரிவித்தல்.
👉தேர்வு எழுதும் நாளன்று தேர்வு எழுதும் மாணவர்களை புகைப்படம் எடுத்தல் குழுவில் பதிவு செய்தல் முதலியவற்றை தவிர்த்தல் வேண்டும்.
🌹👉குறிப்பு:- அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தேர்வு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.
நன்றி 🎩🎩SLAS EXAM 2025
👉SLAS EXAM நடைபெறும் நாளன்று EMIS-யில் செய்ய வேண்டிய பணிகள்..
👉1.)தேர்வு நாளன்று வருகை புரிந்த மாணவர்களுக்கு P (Present) என தேர்வு செய்யவும்...
வராத மாணவர்களுக்கு *A* (Absent) என தேர்வு செய்யவும்
👉2.)மாதிரி Seating Arrangement EMIS-யில் உள்ளவாறு மாணவர்களை அமர வைக்கவும்.
👉3.)Fill FI Form
👉 Field Investigator form-ஐ fill செய்யவும்..
🌹👉முக்கிய குறிப்பு:
👉Field investigator-க்கு உதவியாக இருந்து SLAS EXAM-ஐ நடத்தவும்..
(FI - Field investigator கல்லூரி மாணவர்கள்)
👉த.ஆ/ ஆசிரியர்களின் குறிக்கீடு தேர்வு நாட்களில் இருக்ககூடாது. 🎩🎩“தமிழகத்தில் கல்வித் தரம் குறித்து அறிய...” - ஆளுநர் ரவிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
🎩🎩இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை குறித்த பேச்சு வார்த்தை 04.02.2025 அன்று நடைபெறுகிறது - DEE செயல்முறைகள் வெளியீடு. 🎩🎩ஜாக்டோ - ஜியோ போராட்ட அறிவிப்பு. சமரசம் செய்ய அரசு தரப்பில் ரகசிய முயற்சி.
(நாளிதழ் செய்தி)
🎩🎩08.02.2025 அன்று டிட்டோஜாக் மண்டல அளவிலான போராட்ட ஆயத்தக் கூட்டம் நடைபெறவுள்ளது. 🎩🎩நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை தவிர்த்தல் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு மனுக்களை திறம்பட கையாளுதல் - பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசுச் செயலாளரின் கடிதம் வெளியீடு.
🎩🎩தகவல் பெறும் உரிமைச் சட்ட மனுக்கள் மற்றும் மேல் முறையீட்டு மனுக்களின் மீது பொதுத் தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் வெளியீடு.
🎩🎩UGC வரைவு அறிக்கையை திரும்ப பெறக்கோரி வரும் 6ம் தேதி டெல்லியில் மாணவரணி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்
திமுக மாணவரணி அமைப்பாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் MLA பேட்டி
🎩🎩கலைஞரின் கனவு இல்லம் - நிதி ஒதுக்கீடு
கலைஞரின் கனவு இல்லம் 2024-25 திட்டத்திற்கு தமிழ்நாடு அரசால் மேலும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
கலைஞரின் கனவு இல்ல திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது; இந்நிதியாண்டிற்குள் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
🎩🎩ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி ராக்கெட்.
விண்ணுக்கு 100-வது ராக்கெட்டை செலுத்தி வரலாற்று சாதனை படைத்தது இஸ்ரோ.
🎩🎩இந்திய மீனவர்கள் 13 பேர் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம். வாழ்வாதார பிரச்னையை மனிதாபிமான முறையில் கையாள வேண்டும் என வலியுறுத்தல்.
🎩🎩திராவிடம் இருப்பதால்தான் ஆதிக்க சக்திகள் இங்கு தலைதூக்க முடிவதில்லை என்றும், போலிகள், துரோகிகள் துணைகொண்டு எதிரிகள் பலமுனை தாக்குதல் நடத்தி சோர்ந்து போவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
🎩🎩உத்தராகண்டில் 38ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த முயற்சி எடுத்து வருவதாக பேச்சு.
🎩🎩வரும் 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடக்கம்.இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு.
🎩🎩வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் செயல்பாடு கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளதாக திமுக எம்.பி ஆ. ராசா குற்றச்சாட்டு. 655 பக்கங்களை ஒரே நாள் இரவில் படித்து எப்படி கருத்து சொல்ல முடியும் என்றும் கேள்வி.
🎩🎩அமெரிக்காவுக்கு இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தீங்கிழைப்பதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றச்சாட்டு. தீங்கிழைக்கும் நாடுகளுக்கு அதிக வரி விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை.
🎩🎩இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில், 26 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி.
🎩🎩2024ஆம் ஆண்டின் ஐசிசி சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டார் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா. டி20 உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் தொடர்களில் சிறப்பாக பந்துவீசிய நிலையில் கவுரவம்.
🎩🎩கும்பமேளா கூட்ட நெரிசல் - காவல்துறை விளக்கம்
உத்தரபிரதேசம்: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கடும் கூட்டநெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு; 90 பேர் காயம்
-உத்தரபிரதேச காவல்துறை விளக்கம்
🎩🎩முதல்முறையாக வெளிநாட்டிற்கு இந்திய ராணுவ உடை ஏற்றுமதி.
மத்திய அரசின் படைதளம் தயாரித்த ராணுவ உடையை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் நிகழ்வு சென்னை ஆவடியில் இருந்து தொடங்கியது.
ஏற்றுமதிக்காக உடைகளை ஏற்றிக்கொண்டு சென்ற கனரக வாகனகத்தை ஆவடி படைத்தள பொது மேலாளர் பிஸ்.ரெட்டி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்!
முதல்கட்டமாக 4,500 ராணுவ உடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதன் மதிப்பு ₹1.71 கோடி என தெரிவிப்பு
🎩🎩"செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி அனைத்து சிஸ்டம்களும் திட்டமிட்டபடி இயங்கி வருகின்றன..!
100வது ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
🎩🎩மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.60,760க்கு விற்பனை.
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.7,595க்கு விற்பனை.
சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது 🎩🎩சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம். ஆளுநருக்கு நடத்தை விதிகளை வகுக்க வேண்டும். மாநில அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்ய . நாடாளுமன்றத்தில் வலியுறுத்த வேண்டும். யுஜிசியின் விரைவு விதிகளை திரும்பப் பெற நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்படும். இரும்பு 5,370 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் அறிமுகமாகி உள்ளது என்பதை ஒன்றிய அரசும் பிரதமரும் முன்னெடுக்க வேண்டும்.
🎩🎩நெல்லைச் சீமைக்கு வருகிறேன்
"2026 வெற்றிக்கு அச்சாரமாக விழுப்புரம் மக்கள் அளித்த வரவேற்பின் எழுச்சியோடு, பிப்ரவரி 6,7 தேதிகளில் நெல்லைச் சீமைக்கு வருகிறேன் உடன்பிறப்புகளின் உற்சாக முகங்களை உங்களில் ஒருவனான நான் கண்டு மகிழ்வேன்”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
🎩🎩மெட்ரோ மாதாந்திர பாஸ் நிறுத்தம்
சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில்
வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பாஸ்கள்
பிப்.1ம் தேதி முதல் நிறுத்தம்
ரயில் நிலையங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தம்
🎩🎩மோடிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்;
டெல்லியை எனது குடும்பத்தைப் போல பார்த்துக்கொள்வேன்
டெல்லியில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம்
🎩🎩2026 தேர்தலிலும் திமுகவுக்கே மக்கள்
ஆதரவு; எதிர்க்கட்சிகளின் பொய்
குற்றச்சாட்டுகளை நம்ப மாட்டார்கள்"
"திமுக அரசின் சாதனைகளைப் பொறுக்க
முடியாமல், விமர்சிப்பவர்களை மக்கள் ஒருநாளும் ஏற்க மாட்டார்கள்"
முதல்வர் ஸ்டாலின்
🎩🎩கஷ்டப்பட்டு சம்பாதித்து வரி செலுத்துகிறோம்
வரி செலுத்துபவர்களுக்கு சில சலுகைகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்
பான்கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழில் வேண்டும்
வரி செலுத்துவோர் மையம் திறப்பு நிகழ்ச்சியில்
நடிகர் விஜய்சேதுபதி பேச்சு
🎩🎩போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் (putin) அறிவிப்பு.
ஆனால், சட்டவிரோதமாக அதிபராக இருக்கும் ஜெலன்ஸ்கியுடன் (Zelensky) அல்ல என்றும் விளக்கம்
🎩🎩பெரியார் பற்றிப் பேசி, தன்னை பெரிய தலைவராக காட்டி கொள்ள விரும்புகிறார் சீமான்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம்.
🎩🎩சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்தில் ஒரே தூணில் 5 தண்டவாளங்கள் 👉உலகிலேயே முதல் முறையாக சென்னையில் ஒரே தூணில் 5 தண்டவாளங்கள் அமைப்பு.
.👉ஒரே தூணில் 4 ரயில்கள் வந்து செல்லும் வகையில் ஒரு லூப் லைன் அமைப்பு..
👉5 தண்டவாளங்கள் இரட்டை அடுக்குகளாக அமைக்கப்படுகின்றன..
🎩🎩ஜெயலலிதா பொருட்களை ஒப்படைக்க உத்தரவு.
-சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு பெங்களூரு நீதிமன்ற கருவூலத்தில் இருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைக்க கர்நாடக நீதிமன்றம் உத்தரவு.
🎩🎩சீமான் தொடர்ந்து பரபரப்புக்காக சில விஷயங்களை பேசி வருகிறார்.
பெரியாரின் வெங்காயம் தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தியது. இன்று வரை சனாதான சக்திகளை வேறூன்ற விடாமலும் விரட்டி அடித்துள்ளது.
பெரியாரை தனிப்பட்ட முறையில் கொச்சைப்படுத்துவதை சீமான் கைவிட வேண்டும்
திருமாவளவன் 🎩🎩🎩🎩🎩🎩🎩🎩🎩🎩
🌹🌹சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
👉வெந்தயம் மிக எளிதாக கிடைக்கும் பொருள். எளிதாக கிடைக்கும் எதன் பலனையும் நாம் கண்டுகொள்வதிலை. அப்படித்தான் வெந்தயத்தின் மகிமையும் நாம் உதாசீனப்படுத்துகிறோம். அதிக நார்ச்சத்து, இரும்புச்சத்து, புரதச் சத்து(46%) மற்றும் இதயத்தை பாதுகாக்கத் தேவையான முக்கிய மினரல் பொட்டாசியமென பல சத்துக்களை அந்த சின்ன வெந்தய விதை பெற்றிருக்கிறது.
👉அது குணப்படுத்தும் நோய்கள் கணக்கில் சொல்ல முடியாதது. சர்க்கரை வியாதி, உடல் பருமன், பித்த நோய்கள், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல பெரும் நோய்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆச்சரியங்கள் நிறைந்தது இந்த வெந்தயம்.
👉அந்த வெந்தயத்தை ஊற வைத்து குடிப்பதையும், மற்றும் வெந்தயப்பொடியை நீரில் கலந்து குடிப்பது மற்றும் அதிகமாக உனவில் சேர்ப்பது என நீங்கல் செய்திருப்பீர்கள். வெந்தய தே நீரை குடித்திருக்கிறீர்களா? அப்படி குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்காக அதனை செய்யும் முறையும், அதன் அற்புத நன்மைகளையும் இந்த கட்டுரையில் காணலாம்.
🌹👉தயாரிக்கும் முறை :
ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து, மூடி வைத்து 3 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின்னர் சூடு குறைந்து வெதுவெதுப்பாக ஆனவுடன் அதனை வடிகட்டி, தேன் சிறிது கலந்து குடிக்க வேண்டும்.
🌹👉வெந்தய டீ குடிப்பதால் வரும் நன்மைகள் :
👉குடலை சுத்தமாக்க :
குடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும். குடல் மற்றும் உணவுக்குழாய்களில் தங்கும் கழிவுகளை உடலில் இருந்து எளிதில் வெளியேற்றும். நச்சுக்களை உடலில் தங்க விடாது.
👉ரத்த சோகை :
இளம் வயதினர் மற்றும் முதியவர்கள் பெரும்பாலோனோர் ரத்த சோகையால பாதிக்கபப்டுகிறார்கள். மன அழுத்தம் காரணமாக அவர்களுக்கு ரத்த சோகையால் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு இந்த வெந்தய டீ அருமருந்தாகிறது.
👉மாதவிடாய் வலிக்கு :
மாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் உடல் வலிகள் தோன்றும். அதோடு சிலருக்கு தசைப் பிடிப்பும் உருவாகும். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
👉டீன் ஏஜ் பெண்கள் :
பூப்படையும் வயதில் உள்ள சிறுமிகள் வெந்தய டீயைக் குடிப்பது நல்லது. இது வளர்ச்சி ஹார்மோன்களையும் ஊக்குவிக்கும். பிற்காலத்தில் மாதவிடாய் கோளாறுகள் வராமல் தடுக்கும்.
👉தாய்ப்பால் அதிகரிக்க :
முற்றிலும் ஆராய்ச்சிகளால் நிரூபிக்கப்பட்ட உண்மை இது. தினமும் வெந்தய டீ குடித்து வந்தால் தாய்ப்பால் சரிவர சுரக்காத தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பது அதிகரிக்கும்.
👉கொழுப்பு கரைய :
கொலஸ்ட்ரால் பிரச்சனையைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை கட்டுக்குள் வரும். மேலும் இதனால் உண்டாகும் கல்லீரல், இதயம் மற்றும் ரத்த பாதிப்புகளை வராமல் தவிர்க்கப்படுகிறது.
👉மலச்சிக்கல் :
வெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். நீங்கள் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தால், அதனை குணப்படுத்த, தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.
👉உடல் எடைக்கு :
வெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலில் அவசியமற்று தங்கி கேடு விளைவிக்கும் கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கச் செய்கிறது. அதோடு மேலும் உடல் எடையை தக்க வைக்கவும் உதவுகிறது.
👉இதய நோய்கள் :
தினமும் ஒரு கப் வெந்தய டீ குடிப்பதால், இதயத்தை பத்திரமாய் பாதுகாக்கலாம். இதிலுள்ள பொட்டாசியம், ரத்தத்தில் சோடியம் அளவை குறைப்பதால் இதயத்தை பாதிக்கும் அபாயம் இல்லை.
👉அசிடிட்டி :
அதிக அமிலம் எதுக்களிப்பு நோய்களால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு இந்த டீ ஒரு அருமருந்தாகிறது. இது அசிடிட்டி, நெஞ்செரிச்சல், மற்றும் உடலில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கிறது. இதனால் அல்சர் போன்ற நோய்கள் தடுக்கபப்டுகிறது.
👉சர்க்கரை வியாதி :
தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், இந்த காலத்தில் பெரும்பாலோனோரைத் தாக்குகின்ற டைப்- 2 சர்க்கரை வியாதியை வாராமல் தடுக்கலாம். அவ்வாறு சர்க்கரை வியாதி வந்தவர்கள் இதனை குடித்தால் சர்க்கரை நோய்க்கு மாத்திரை சாப்பிட தேவையிருக்காது. சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
👉கூந்தல் வளர்ச்சி :
இந்த காலத்தில் அனைவருக்கும் இருக்கும் பெரிய பாதிப்புகளில் ஒன்று முடி உதிர்வு. தினமும் இந்த வெந்தய தேனீர் குடித்து வாருங்கள். முடி அடர்த்தியாவை நீங்களே காண்பீர்கள். இது முடி வளற்ச்சியை வெகு வேகமாக ஊக்குவிக்கின்றது.
👉பித்த நோய்கள் :
நிறைய பேருக்கு உடல் சூட்டினால் அசிடிட்டி, நெஞ்செரிச்சல் என பலவித பாதிப்புகளில் ஆளாகிறார்கள். இந்த தேனீர் உடலை குளிர்ச்சி செய்வதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்ப
No comments:
Post a Comment