Friday, January 10, 2025

தினம் ஒரு மூலிகை* *கருந்துளசி*

 *

தாவரவியல் பெயர்:Ocimum Tenuiflorum கருந்துளசி எல்லா இடங்களிலும் வளரும் தன்மை உடையது இரண்டு முதல் மூன்று அடி உயரம் வளரக்கூடிய நறுமணம் கமலும் செடியினம் கருந்துளசி இலைகள் தேவையற்ற கபத்தை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் அடிக்கடி தோன்றும் சளி தொல்லையை நீக்கி நோய் எதிர்ப்பு

சக்தியை அதிகப்படுத்தி பால் தயிர் போன்ற உணவுகளையும் நன்கு சேர்த்துக் கொள்ள தேவையான பலத்தை நுரையீரலுக்கு தரும் தன்மை கரும்புளசிக்கு உண்டு இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆவி பிடிக்க சைனஸ் தொல்லையால் ஏற்பட்ட சளி தொல்லை நீங்கும் அடிக்கடி சளி பிடிக்காமல் இருக்க ஐந்து அல்லது பத்து கருந்துளசி இலைகளை ஒரு லிட்டர் நீரில் ஊறவைத்து அந்த நீரை அருந்தி பின் கருந்துளசி இலைகளை மென்று சாப்பிட வேண்டும் தினம் அதிகாலை 3 அல்லது 4 இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஒவ்வாமை மற்றும் கிருமி தொற்றினால் ஏற்படும் சளி தொல்லையில் இருந்து காத்துக் கொள்ளலாம் கருந்துளசி ஒரு காயகற்ப மூலிகை ஆகும் நன்றி

No comments:

Post a Comment