Thursday, January 30, 2025

தேங்காய் எண்ணெய்யில் உள்ள நற்பலன்கள்

 ...

உங்கள் பாதங்களின் அடிப்பகுதியில் 'தேங்காய் எண்ணெயை' பயன்படுத்திப் பாருங்கள்..!


வயதான பிறகும் முதுகுவலி இல்லை, மூட்டு வலி இல்லை, தலைவலி இல்லை, பல் இழப்பு இல்லை.,  தினமும் தூங்கும் முன் கால்களில் எண்ணெயை தடவி மசாஜ் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்ததாக இருக்கும்.

இரவு நேரங்களில் தூக்கம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தால்  'உங்கள் கால்களின் பாதங்களை தேங்காய் எண்ணெய்யை கொண்டு இரண்டு

மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால் சோர்வு நீங்குவதுடன் நிம்மதியாக தூங்கவும் முடியும். மேலும் வயிற்று பிரச்சினை இருந்தால் கால்களில் தேங்காய் எண்ணெயுடன் மசாஜ் செய்து வந்தால் வயிற்று பிரச்சினை இரண்டு நாட்களில் நீங்கிவிடும்‌.


குழந்தைகளின் உள்ளங்கால்களை தேங்காய் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்து வந்தால் அது அவர்களை மிகவும் புத்துணர்வுடனும் ஆரோக்கியமாகவும் இருக்க செய்கிறது‌.  தேங்காய் எண்ணெய்யால்  மசாஜ் செய்யும் இந்த செயல்முறையை கடைபிடிக்க ஆரம்பித்த இரண்டு நாட்களில், கால்களின் வீக்கம் குறைந்து விடும்.  நிதானமான தூக்கத்திற்கு தூக்க மாத்திரைகளை விட ,  இந்த முறை சிறந்தது.  கால்களில் ஏற்படும்  எரிச்சல் உணர்வும், தலைவலியும் நீங்கும். தைராய்டு பிரச்சனை ஒருவருக்கு இருக்கிறது என்றால், கால்கள் அதிகமான நேரம்  வலித்துக் கொண்டே இருக்கும்.


தேங்காய் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்தால் அந்த வலி நீங்கிவிடும். மூல நோய்க்கும் தேங்காய் எண்ணெய் மிகுந்து நிவாரணமாக இருக்கிறது. தேங்காய் எண்ணெயை உள்ளங்கைகளிலும், விரல்களுக்கிடையில், விரல் நகங்களுக்கு இடையிலும், நகங்களிலும் தேய்க்க வேண்டும். நான்கு முதல் ஐந்து சொட்டு தேங்காய் எண்ணெயை தொப்புளில் விட்டு தூங்கினால் உடம்பில் உள்ள சூடு குறையும். மலச்சிக்கல் பிரச்சினையும் தீரும். உடல் சோர்வு நீங்கி, நான் நிம்மதியாக தூங்குவதோடு குறட்டை விடும் சத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.


கால்களில் ஏற்படும் கொப்பளங்கள், முழங்கால்களில் வலி, முதுகுவலி நீங்க  தேங்காய் எண்ணெய்யால் மசாஜ் செய்தால் வலி நீங்கும். தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. மாறாக கடுகெண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றை கூட கால்களிலும் பாதங்களில் தடவலாம். குறிப்பாக மூன்று நிமிடங்கள் இடது கால், மூன்று நிமிடங்கள் வலது காலின் பாதங்களிலும் மசாஜ் செய்யவும். அதே வழியில் குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.


உங்களின் வாழ்நாள் முழுவதும் இதை ஒரு வழக்கமாக ஆக்குங்கள். பின்னர் இயற்கையின் அற்புதத்தை பாருங்கள். நம் கால்களின் பாதங்களில் பார்க்கலாம்...

பண்டைய சீன மருத்துவத்தின் படி, கால்களுக்கு அடியில் சுமார் 100 அக்குபிரஷர் புள்ளிகள் உள்ளன. ஒவ்வொன்றும் மனித உறுப்புகளுடன் சம்மந்தப்பட்டுள்ளன.  பாதங்களை அழுத்தி மசாஜ் செய்வதன் மூலம் அந்த உறுப்புகளும் ஆரோக்கியம் அடைகின்றன.  கால் ரிஃப்ளெக்சாலஜி என்றும்

இதை கூறப்படுகிறது. கால் மசாஜ் சிகிச்சை உலகளவில் பயன்படுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment