📕📘டிசம்பர் 22, 1964
கடலின் கோரத்தாண்டவத்தில் ஒரு ஊரே ஜலசமாதி அடைந்த தினம்.
1964 ல் நள்ளிரவு 12:10 மணிக்கு புயல் மற்றும் கடலின் கோரத்தாண்டவத்தால் அழிந்து மண்ணோடு மண்ணாக போன அந்த ஊர் தனுஷ்கோடி.
ஆழிப்பேரலைக்குள் மூழ்கி இன்றும் அதன் மிச்சசொச்சங்களுடன் நினைவுச் சின்னமாக திகழும் தமிழகத்தின் துறைமுக நகரங்களில் ஒன்றான தனுஷ்கோடி.
இந்திய நாட்டின்
தென்கோடி எல்லைப்பகுதி தனுஷ்கோடி என்ற பெயர் வந்ததாக வரலாறு உண்டு.வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் தனுஷ்கோடி, இன்றுவரை மனிதர்கள் வசிக்க தகுதியற்ற பகுதியாகத்தான் அரசால் கூறப்பட்டு வருகிறது.
அதற்கு காரணம் 1964 ம் ஆண்டில் ஏற்பட்ட கோரப்புயல் தான். இங்கிருந்த ரயில் நிலையம், அஞ்சலகம், கோயில்கள், தேவாலயம், நகரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் என ஒன்றுகூட புயலுக்கு தப்பவில்லை.
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டிடங்களே கடலால் துவம்சம் செய்யப்பட்ட நிலையில், ஏழை மீனவர்களின் வீடுகள் என்னவாகியிருக்கும் என நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.
அந்தளவிற்கு சுமார் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் நீராலும், மணல் திட்டுகளாலும் தனுஷ்கோடி நகரம் மூழ்கடிக்கப்பட்டது.
இதில் 1,800க்கும் மேற்பட்டவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
📕📘பழைய பென்ஷன் திட்டம் குறித்த அரசாணை வெளியிடும் வரை சமரசம் கூடாது -
2016 போராட்ட வரலாறு திரும்பணும்
இன்று அரசிடம் பேச்சுவார்த்தைக்கு செல்லும் நிர்வாகிகளிடம் ஜாக்டோ-ஜியோவில் அங்கம் வகிக்கும் பல்வேறு சங்க உறுப்பினர்கள் ஆவேசம்.
(நாளிதழ் செய்தி)
📕📘அகில இந்திய ஆசிரியர் அமைப்புகளின் (STFI, AISTF, AIPTF, AIFETO, AIFEA, AISEC, JFME) கூட்டு நடவடிக்கை குழு (AIJACTO) TET தேர்வுக்கு எதிராக போராட்டம் அறிவிப்பு.
👉ஆசிரியர்களின் உரிமைகள் மற்றும் மரியாதையை பாதுகாக்கவும் TET உட்பட நீண்ட நாள் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை தீர்க்க அகில இந்திய ஆசிரியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு AIJACTO ஒன்றிணைந்து கூட்டாக பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாளில் பெருந்திரளாக ஆசிரியர்களை திரட்டி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.
📕📘தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழுவுடன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
📕📘தமிழக அரசின் 'குளிர் கூரைத் திட்டம்' (Cool Roof Initiative) தமிழ்நாடு முழுவதும் உள்ள 297 பசுமைப் பள்ளிகளுக்கு (Green Schools) விரிவுபடுத்தப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
📕📘NMMS Examination - விண்ணப்பிக்க நாளை 23.12.2025 வரை கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
📕📘பத்தாம் வகுப்பு அறிவியல் பாட கருத்தியல் தேர்விற்கு விண்ணப்பித்தல் மற்றும் செய்முறை பயிற்சிக்கு பதிவுசெய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
📕📘ஊரகத் திறனாய்வுத் தேர்வு தற்காலிக விடைக் குறிப்பு வெளியீடு - டிச. 23-ஆம் தேதிக்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்.
(நாளிதழ் செய்தி)
📕📘பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை: டிசம்பர் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்.
📕📘10th Science - பாட கருத்தியல் தேர்விற்கு விண்ணப்பித்தல் மற்றும் செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்தல் - DGE Proceedings வெளியீடு. 📕📘தொடரும் செவிலியர்கள் போராட்டம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாக நீடிக்கும் செவிலியர்கள் போராட்டம்
அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தும் வரை காத்திருப்பு போராட்டமாக தொடரும் என அறிவிப்பு.
கையெழுத்திட்டுள்ளதாக முதலமைச்சர் அறிவிப்பு - சிறுபான்மை கல்வி நிறுவங்களில் ஆசிரியர் நியமனம் குறித்து மேலும் இரண்டு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் முதலமைச்சர் - நாள்: (20.12.2025)
📕📘காத்து வாங்கும் உடை எதுக்கு?
கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு அலுவலக நடத்தை நெறிமுறைகள் குறித்து சுற்றறிக்கை
கிழிந்த ஜீன்ஸ், ஸ்லீவ் லெஸ் ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணியக்கூடாது என அறிவுறுத்தல்
📕📘வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க / நீக்க / திருத்தம் மேற்கொள்ள / மாறுதல் செய்ய சிறப்பு முகாம்கள்:
👉27.12.2025 சனி
👉28.12.2015 ஞாயிறு
👉03.01.2026 சனி
👉04.01.2026 ஞாயிறு
📕📘பாளையங்கோட்டை அருகே பொருநை அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பிரம்மண்டமாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தில் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் தொல்பொருட்கள் காட்சி.
📕📘பொருநை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, துலுக்கர்பட்டியில் அகழாய்வுப் பொருட்கள். பழந்தமிழர்கள் இரும்பை உருக்கிய தொழில்நுட்பம் உள்ளிட்ட செயல்முறைகளை கண்டு வியந்த முதலமைச்சர்.
📕📘கடும் பனியால் வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை முடக்கம். ஹெலிகாப்டர் இறங்க முடியாததால் பாதி வழியில் திரும்பினார் பிரதமர் மோடி.
📕📘டிட்வா புயலால் பாதிப்புகுள்ளான இலங்கைக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து உதவிகள். முல்லைத்தீவு பகுதியில் வசிக்கும் மீனவ மக்களுக்கு உணவுப் பொருட்கள் வினியோகம்
📕📘"நாடு முழுவதும் ரயில் கட்டணம் உயர்வு"
வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் புதிய கட்டணம் அறிவிப்பு
"215 கிலோ மீட்டருக்கும் குறைவான ரயில்களில் கட்டண உயர்வு இல்லை, அதற்குமேல் செல்லும் ரயில்களில் கட்டணம் உயர்வு
215 கி.மீ.க்கு மேல், கிலோ மீட்டருக்கு ஒரு பைசா வீதமும், ஏசி வகுப்புகளில் கி.மீட்டருக்கு 2 பைசா வீதமும் கட்டணம் உயர்வு
500 கி.மீ ஏசி அல்லாத பயணத்திற்கு ரூ.10 கூடுதல் கட்டணம்; கட்டண உயர்வால் ரூ. 600 கோடி வருவாய் கிடைக்கும்" - ரயில்வே
📕📘"கூட்டணியில் இணைய வேண்டும்"
"விஜய் தனது அரசியல் எதிரியை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற வேண்டும். இல்லையெனில் ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஏற்பட்ட பரிதாபகரமான நிலை விஜய்க்கும் ஏற்படும்"- தமிழருவி மணியன்
📕📘புதிய திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர்
நெல்லையில் ரூ.694 கோடி திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
15 புதிய பேருந்து சேவைகளை தொடங்கி வைத்து, 45,116 மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
📕📘"100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்"
"100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு திட்டமிட்டு முடக்கியுள்ளது; 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பலனை அழித்துவிட்டார்கள்,
திட்டத்தை நிறுத்தினால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்; காந்தி பெயரை நீக்கி, புரியாத இந்தி பெயரை திட்டத்திற்கு வைத்துள்ளனர்"
100 நாள் திட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருந்தனர்; இப்போது
மொத்தமாக மூடுவிழா காணப்பட்டுள்ளது; இது வரலாற்றுத் தவறு - -நெல்லையில் நடந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
📕📘தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்த யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட், தேசிய பத்திரிகை செய்தி தொடர்பாளராக நியமனம்
📕📘மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு மகாத்மா காந்தி பெயரை சூட்டினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
📕📘ஜனவரி முதல் வாரத்தில் இருந்து நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர் ஓடும்
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
📕📘கர்நாடகாவை சேர்ந்தவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.6 கோடி, வெள்ளி வென்றால் ரூ.4 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.3 கோடி பரிசு"
-கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு
No comments:
Post a Comment