உண்மையில் இறைவனுக்கு ஆகாத
தீட்டு எது தெரியுமா?..
1.பெண்களை மாதவிடாய்
காலங்களில் தெய்வ வழிபாட்டில் இருந்து ஒதுக்கி வைப்பார்கள்....
அதை முழுமையாக ஆராய்ந்து பார்த்தால் அச்சமயத்தில் பெண்களின் உடல் அதிகப்படியான உஷ்ணத்தைக் கொண்டிருக்கும்,கருவறையில் இருக்கும் கடவுளின் வெப்பம் தாக்கும்போது அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படுவதாலேயே இறைவனிடமிருந்து பெண்களை
விலகிஇருக்கச் சொன்னார்களே தவிர விலக்கவில்லை முன்னோர்கள்.. ஆக இது இறைவனுக்கான தீட்டு அல்ல...2.குழந்தை பிறந்த வீட்டில் புரோகிதர் வந்து தீட்டு கழிக்கும் வரை அக்குடும்பத்தினர் கோயிலுக்கு வரக்கூடாது.. வெளி ஆட்களும் அவர்கள் வீட்டிற்கு சென்றுவந்ததும் அந்த தீட்டை கழிக்க கட்டாயம் குளிக்க வேண்டும் இதுவும் தீட்டு என்கிறார்கள்.. ஆனால் குழந்தையும் தெய்வமும் ஒன்றே என்பது உண்மையானல் இதுவும் தீட்டு அல்ல..
3. ஒருவர் இறந்துவிட்டால்.. அந்த உடலைப் பார்த்தாலோ, தொட்டாலோ, தீட்டு ஒட்டிக்கொள்ளும் என்கிறார்கள்.. (இறப்பு வீட்டிற்கு சென்று விட்டு வந்தால் குளிப்பது அவசியம் ,காரணம் கிருமிகள் நம் மீது ஒட்டி விடக்கூடாது என்பதற்காக).. ஆனால் இறந்தவர் வீட்டிற்கு சென்று வந்தால் தீட்டு என்பது பொய்.. பிறப்பு இறப்பு என்பது இயற்கை. இது எப்படி தீட்டு ஆகும் இறைவனுக்கு..
4. ஆண் பெண் ஒன்று சேர்வது தீட்டு. அப்படி இருந்தால் குளித்த பிறகுதான் வீட்டில் எந்த வேலையும் செய்ய வேண்டும் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.. நாம் ஒவ்வொருவரும் இத்தகைய கலப்பிலேயே உருவாகி இருப்பதால் நம் உடல் எப்போதும் தீட்டாகவே இருக்க முடியும். ஆனால் அப்படி இல்லாததால் இதுவும் தீட்டல்ல..
5. வெள்ளிக்கிழமை ஒருபொருளை கொடுத்தால் தீட்டு, ஆறு மணிக்கு மேல் கடன் கொடுத்தால் தீட்டு, ஆறு மணிக்கு மேல் கடைகளில் உப்பு கொடுத்தால் தீட்டு, நாம் எங்கேயாவது வெளியில் சென்றால் ஒரு குறிப்பிட்ட தொழில் செய்பவர்கள் எதிரே வந்தால் சகுனம் என்ற தீட்டு, இப்படி எத்தனையோ தீட்டுகளையும் சகுனங்களையும் நாம் கடைப்பிடித்து வருகிறோம் இன்றும்.. ஆனால் ஒரு உண்மை என்னவென்றால் உண்மையில் இவைகள் எல்லாம் இறைவனுக்கு தீட்டுகளே அல்ல.. சகுனங்களே அல்ல...
உண்மையில் இறைவனுக்கான தீட்டுகள் எது எது தெரியுமா?
1.பெண்ணோ, பொருளோ, அதன் மீது ஆசை வைத்து அடைய வேண்டும் என்று தவறான வழியில் சதா சர்வ காலமும் மனமுழுக்க, அதையே நினைத்து வாழ்வது இறைவனுக்காகாத காமத்தீட்டு,
2.கோபத்தைவிட கொடியது உலகில் ஏதுமில்லை, சுய அறிவை இழந்து சுற்றி இருப்பவர்களான, தாய் தந்தையராக இருந்தாலும் கொடூரமாக பேசுவதும், உணர்ச்சிவசப்பட்டு வன்மத்தோடு செயல்படுபவர்களும்.. இறைவனை என்னதான் வேண்டினாலும் இறைவனுக்காகாத,குரோத தீட்டு..
3. தன்னலம் மட்டுமே, தன் குடும்பம் மட்டுமே, என்று கருதி வாழ்பவர்கள் இந்த உலகில் இருக்கும் அத்தனை வழிகளிலும் அதர்மம் செய்தாவது பொருளீட்ட நினைப்பவர்கள்.. தவறான வழியில் பொருட்கள் ஈட்டி கோயில்களில் கொட்டினாலும் இது இறைவனுக்காகாத தீட்டு.. அதை ஒருபோதும் இறைவன் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்..
4. நான்தான் பெரியவன் என்று திமிர் பிடித்து கர்வம் கொண்டு இருப்பவன், பிறரை துன்புறுத்தியே மகிழ்ச்சி காண்பார்.. இப்படிப்பட்ட எண்ணங்களைக் கொண்டவனும் இறைவனுக்கு அருகில் செல்லக்கூடிய அருகதை இல்லாத தீட்டு உடையவன்..
5. மற்றவர் வாழ்வதை பொறுக்காமல் மனதுக்குள் குமுறும் எண்ணத்தை கொண்டவனும் இறைவனுக்கு அருகில் செல்லக்கூடாத தீட்டு உள்ளவன்..
6.எப்போது முகத்தை புன்னகை இல்லாமல் வைத்திருப்பவனும், பணம் மட்டுமே குறிக்கோள் என்று வாழ்பவனும், எத்தனை பணங்கள் தன்னிடம் வந்தாலும் அதை தனக்கு மட்டும் என்று நினைத்து சேமித்து வைப்பவனும்.. இறைவனின் கண்ணில் ஒரு தீட்டாகத்தான் தெரிவான்..
7. மக்களுக்கு சேவை செய்யும் புனிதமான தொழிலான அரசியலில் தவறுகள் செய்பவன் யாரும் எத்தனை பிறவி எடுத்தாலும் அவன் இறைவனுக்காக தீட்டாகவே இருப்பான் ஒவ்வொரு பிறவியிலும்..
8. நாம் பேசும் ஒவ்வொரு சொற்களும் மற்றவரை காயப்படுத்தினால் நாமும் தீட்டு உடையவர்தான், இறைவனுக்கு..
இதுபோன்ற தீட்டுகளைக் கொண்டிருப்பவர்கள் தான் தீண்ட தகாதவர்களாக இறைவன் ஒதுக்கி விடுவாரே, தவிர மற்றபடி எந்த தீட்டையும் இறைவன் தட்டிக் கழிக்க மாட்டார்..
இன்றைய காலத்தில் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு தீட்டை சுமந்து தான் நாம் வாழ்ந்து வருகிறோம் முடிந்தவரை அந்த தீட்டுகளை தூக்கி எறிந்து விட்டு மனிதனாக வாழ பார்ப்போம்....
மற்றவர்க்கும் இறைவனுக்கு பிடித்தவராக வாழநினைப்போம்..
இந்த உடலுக்கு வேணாலும்
அழிவு இருக்கும். ஆனால் நமது ஆத்மாவிற்கு அழிவு இருக்காது, என்பதை
நினைத்துக் கொள்வோம்..
இன்று நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்கும் பிரதி பலன் நமக்கு திரும்ப கிடைத்தே தீரும்.
அது நல்லதோ கெட்டதோ..
சுருக்கமாக சொன்னால்
"நாம் கொடுத்த மரியாதையும்,
நாம் செய்த தானமும்,
நாம் செய்த துரோகமும்,
கண்டிப்பாக ஒருநாள் நம்மை தேடி வந்து நாம் செய்ததை விட சிறப்பாக
செய்து விட்டுப் போகும்.."
என்பதை ஒவ்வொருவரும் மனதில் நினைத்துக் கொள்வோம்.
No comments:
Post a Comment