*இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*
🌹விதியும் சதியும் சேர்ந்து ஒரு நபரை வீழ்த்த நினைத்தாலும்...
அவர் செய்த தர்மம் அனைத்தும் அவரை சரியான நேரத்தில் காப்பாற்றும்.!
🌹🌹காயப்படுத்தியவர்கள் மறந்து விடலாம்,
ஆனால்,காயப்பட்டவர்கள் என்றும் மறப்பதில்லை,
பேசிய வார்த்தைகளையும், மனதில் ஏற்பட்ட காயங்களையும்
அதன் வலிகளையும்.!!🌹🌹🌹தன் நிலை உயர்ந்தாலும்,தாழ்ந்தாலும்,தன் குணம் மாறாமல்,பழகிய விதம் மறவாமல் நடப்பவனே சிறந்த மனிதன் ஆவான்.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🍒🍒தமிழ்நாட்டு மாணவர் சாதனை!
உலக அளவில் ஜப்பானில் நடைபெற்ற சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில், சென்னையைச் சேர்ந்த ஆல்பிரைன் ஆண்டனி ஜோசப் விஜய் என்ற மாணவன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்!
மாணவன் ஜோசப் விஜய் தமிழர்களின் பாரம்பரிய உடையில் பதக்கத்தினைப் பெற்றது அனைவரது பாராட்டையும் பெற்றுவருகிறது
🍒🍒திருவண்ணாமலையில் அரசு மாதிரி பள்ளியை திறந்து வைத்து, மாணவர்களுடன் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
🍒🍒`நாங்க பாத்துக்கிறோம்’’
மன்னார்குடி அருகே அடுத்தடுத்து தாய், தந்தையை இழந்து தனியாக வசித்து வரும் 3 குழந்தைகளிடம், ``தைரியமாக இருங்கள். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’’ என போனில் ஆறுதல் கூறி, அமைச்சர் TRB ராஜா மூலம் வீட்டு மனை பட்டா வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்
🍒🍒ஆசிரியர்கள் மீதான அராஜகப் போக்கை கைவிட வேண்டும்- எடப்பாடி பழனிசாமி
🍒🍒2013 டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும்: அண்ணாமலை
🍒🍒ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வர்கள் சரியான சான்றிதழை பதிவேற்றம் செய்ய கால அவகாசம்: TNPSC அறிவிப்பு
🍒🍒பள்ளிகளில் நாய் கடி சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது CBSE
🍒🍒அரசு பள்ளிகளில் ஐடெக் ஆய்வகத்தில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள் - இன்ஜினியர்கள் தட்டுப்பாட்டால் தீர்வு காண்பதில் சிக்கல்
🍒🍒NMMS உதவித் தொகைக்கான 2026 தேர்வு - பள்ளி மாணவர்களின் நலன் கருதி வழக்கமாக நடைபெரும் பிப்ரவரி மாதத்தில் தேர்வு நடந்த கோரிக்கை
🍒🍒"சம வேலைக்கு சம ஊதியம்" என்ற இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையினை நிறைவேற்றாமல் ஏமாற்றி வரும் தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்
🍒🍒பள்ளிகளில் நாய் கடி சம்பவங்களைத் தடுக்க பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டது CBSE.
🍒🍒TNCMTSE - தமிழ்நாடு முதலமைச்சரின் திறமை தேடல் தேர்விற்கு விண்ணப்பித்த பத்தாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக DGE செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது
🍒🍒பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் அதிகரிக்க இலக்கு: தேர்ச்சி குறைந்த பள்ளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்து பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது
🍒🍒ஓய்வூதியர் இறந்தால், குடும்ப பாதுகாப்பு நிதி (Family Security Fund - FSF) வழங்கும் அதிகாரத்தை ஓய்வூதியம் பெற்று வழங்கும் அலுவலருக்கு அனுமதித்து அரசாணை வெளியீடு
🍒🍒மதுரையில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 'ஸ்கிரைப்' (சொல்வதை கேட்டு எழுதுதல்) மாணவர்களின் மாற்றுத்திறன் (உடல் உறுப்பு பாதிப்பின் தன்மை) உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ய கல்வி ஒன்றியம் வாரியாக 15 குழுக்களை சி.இ.ஓ., தயாளன் அமைத்துள்ளார்.
🍒🍒மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் கல்வியின் தரம் பாதிப்புக்குள்ளவதா7கவும் , அனைத்து பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
🍒🍒அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🍒🍒வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய சிக்கல்
வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க விண்ணப்பிப்பவர்கள், 2002 அல்லது 2005 SIR பட்டியலில் இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் அல்லது உறவினர்களின் விவரங்களை தெரிவிப்பது கட்டாயம்
தவறான தகவல் அளிப்பவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும். தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடந்து கொண்டு உள்ள நிலையில் கடும் எச்சரிக்கை
🍒🍒வெள்ளி விலையும் கிடுகிடுவென உயர்வு
இன்று வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.274க்கு விற்பனையாகிறது. வரலாற்றில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.20 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஒரே நாளில் ரூ.20,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2.74 லட்சத்துக்கு விற்பனையானது
🍒🍒"என் கை படாத இடமே இல்ல"
"லாரி கிளீனராக இருந்தேன். சாக்கடையை அள்ளுகின்ற வண்டியில் கொஞ்ச நாள் வேலை செய்தேன். அப்புறம் பெயிண்ட் அடிக்க சென்றேன். சென்னையில் இருக்கிற பெரிய கட்டடங்களில் என் கை படாத இடமே இல்லை’’
-நடிகர் சூரி
🍒🍒சாதனையாக மாறிய சோதனை
பெரு நாட்டில் முதுகெலும்புடன் ஒட்டிப் பிறந்த இரண்டரை மாத இரட்டைப் பெண் குழந்தைகள், அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டனர்
கடந்த அக்டோபர் 5-ல் குறை பிரசவத்தில் பிறந்த இக்குழந்தைகளைப் பிரித்து மருத்துவர்கள் சாதனை;
இதனால் சோகத்தில் இருந்த மெனெலியோ - மார்லெனி தம்பதியினர், தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
🍒🍒தங்கம் விலை மீண்டும் ரூ.800 உயர்ந்தது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,04,800க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13,100க்கு விற்பனை;
ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.880 காலையிலும், ரூ.800 மாலையிலும் என ஒரே நாளில் ரூ.1,680 அதிகரிப்பு
🍒🍒புதுச்சேரியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வருகையை ஒட்டி டிச.29ல் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மத்திய பல்கலை. பட்டமளிப்பு விழாவில் டிச.29ல் பங்கேற்கிறார் துணை ஐனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்
🍒🍒பொங்கல் தொகுப்பு ஜனவரி 10ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பொங்கல் தொகுப்பு தயாராக உள்ளதாகவும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
🍒🍒திருவாரூரில் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளின் கல்வி செலவு உட்பட அனைத்து செலவையும் அரசே ஏற்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
🍒🍒திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன் அடையாத ஒரு குடும்பம்கூட, தமிழ்நாட்டில் இல்லை என்ற அளவிற்கு செயல்படுவோம்"
சொன்ன திட்டங்களை விட, அதிகமான அளவு
சொல்லாத முத்திரை திட்டங்களையும் செயல்படுத்தி
வருகிறோம் - திருவண்ணாமலை நிகழ்ச்சியில்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
🍒🍒பிப்.17ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்: அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
🍒🍒உடலில் ஓடும் ரத்தம் தளபதிக்கே"
"வாழ்க்கையில் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த எனக்கு, சரியான வழிகாட்டியாக இருந்தவர் தளபதி விஜய். இன்று நான் இந்த நிலையில் இருப்பதற்கு அவரே காரணம். என் உடலில் ஓடும் ரத்தம் கூட அவருக்காகத்தான்"
-கண்ணீர் சிந்திய செங்கோட்டையன்.
No comments:
Post a Comment