Saturday, December 27, 2025

27.12.2025(சனிக்கிழமை)

 *இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*


🌹நம்மால் எந்த பயனும் இல்லை என தெரிந்த பிறகே...

பலரின் உண்மையான முகம் வெளிப்படுகிறது.!

🌹🌹அடுத்தவர் மனநிலையை யாரும் அறிவதில்லை...

அறிந்து கொள்ளவும்

விரும்புவதில்லை...

ஆனால் தன் மனதில் நினைப்பதை மட்டுமே பிறருக்கும் வலிக்கும் என்பதைக் கூட உணராமல் பேசும் மனிதர்கள் தான் இங்கு அதிகமாகும்.!!

🌹🌹🌹கடமைக்கு தான் பேசுகிறார்கள் என்று தெரிந்த பின்பு...

உரிமையோடு பேச முடியவில்லை சில உறவுகளிடம்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🎩🎩டிசம்பர் 27, 1911

‘ஜனகண மன’ தேசிய கீதம் முதன்முதலாக இசைக்கப்பட்ட நாள் இன்று.

1911 ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடக்கும்போது பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.

1950 ம் ஆண்டு ஜனவரியில்தான் ‘ஜனகண மன’ இந்தியாவின் தேசிய கீதமாக இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்தால் அறிவிக்கப்பட்டது.

🎩🎩27 டிசம்பர் 1956

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நடைமுறைக்கு வரப்பெற்றதைத் தொடர்ந்து 1971ல் தமிழ் வளர்ச்சி இயக்ககம் தோற்றுவிக்கப்பெற்று ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சி மொழித் திட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அமர்த்தப்பெற்றனர். 

அலுவலக நிர்வாக நடை முறையில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் முழுமையாக நூறு விழுக்காடு தமிழில் மட்டுமே அமைய வேண்டும். அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அனைத்து இனங்களிலும் தமிழிலே கையொப்பம் செய்ய வேண்டும். 

அலுவலகத்தில் சட்ட ஆணைகள், அரசாணைகள், குறிப்பாணைகள், கடிதப் போக்குவரத்துக்கள் விதிவிலக்கிற்குட்பட்டு மைய அரசு அலுவலகங்கள், பிற மாநில அலுவலகங்கள், நீதி மன்றங்கள், வெளிநாட்டு நிறுவனங்கள், தூதரகங்கள், ஆங்கிலத்திலேயே செய்தி தொடர்பு வைத்துக்கொண்டுள்ள நிறுவனங்கள ஆகியவற்றிற்கு எழுதப்படும் கடிதங்கள் தவிர அனைத்து அலுவல்களுக்கும் தமிழில் மட்டுமே கோப்புகள் அமையப்பெற வேண்டும்.

🎩🎩ஜாக்டோ ஜியோ சார்பில் ஜனவரி 6 -ஆம் தேதி முதல் நடைபெற உள்ள காலவரையற்ற  வேலை நிறுத்த போராட்டத்திற்கான ஆயத்த மாநாடு தமிழகம் முழுவதும்  மாவட்ட தலைநகரங்களில் இன்று 27.12.2025 (சனிக்கிழமை) நடைபெற உள்ளது.

🎩🎩அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கு  திறன் மேம்பாட்டு பயிற்சி 19.01.2026 முதல்  23.01.2026 வரை  மண்டல வாரியாக வழங்கப்படu உள்ளது அதற்கான செயல்முறையும் பங்கேற்பாளர்களின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது

🎩🎩தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களில் மாணவ - மாணவியரின் திறனை மேம்படுத்த, அரசு நடத்தும் 'திறன்7 மேம்பாட்டு பயிற்சி'யில் ஆர்வம் காட்டாமல், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 11,302 மாணவ - மாணவியர், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.                                                                        🎩🎩அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🎩🎩தேர்தல் வாக்குறுதி 311 என்ன ஆச்சு? SSTA இடைநிலை ஆசிரியர் போராட்டத்தை முடக்கும் தமிழக அரசு!!

🎩🎩ஆங்கில ஆசிரியர்கள் 1,991 பேருக்கு திறன் பயிற்சி: ஜனவரி 19 முதல் 5 நாட்கள் நடைபெறுகிறது

🎩🎩இளநிலை நீட் தோ்வு: பாடத் திட்டம் வெளியீடு.

🎩🎩அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல், உயிரிய பல்வகைத் தன்மையினைப் பாதுகாத்தல் சூழல் மேம்பாட்டு நடவடிக்கைகளை பள்ளி வளாகங்களில் செயல்படுத்துதல் சார்பாக - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🎩🎩பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 தேர்விற்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

🎩🎩Aided Schools - Teachers Deployment - Action Taken - அறிவுரைகள் வழங்குதல் - DEE Proceedings வெளியீடு.

🎩🎩வெற்றிப் பள்ளிகளின் 2025 - 2026 - Selected School List Published - மாவட்ட வாரியாக வெளியீடு

👉தமிழ்நாட்டில் உள்ள 346 _வெற்றிப் பள்ளிகளின்_ விவரம் மாவட்ட வாரியாக வெளியீடு.

🎩🎩தமிழகத்தில் பிறப்புச் சான்றிதழை இணையதளம் மூலமாக பெறுவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி மண்டல துணை தாசில்தார்கள் மற்றும் தாலுகா துணை தாசில்தார்கள் கையால் கையெழுத்திட்டு சான்றிதழ்களை வழங்கலாம் என்று புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 25 இன்று முதல் அடுத்த ஜனவரி 25ஆம் தேதி வரை இணையதளம் மூலம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

🎩🎩தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனை செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க 

விரைவில் அரசாணை வெளியிடப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

🎩🎩கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் வரும் ஜனவரி 5-ஆம் தேதி தொடக்கம்

🎩🎩வாக்குறுதி அளித்துவிட்டு, ஆசிரியர்களை போராடவிட்டு வேடிக்கை பார்ப்பதா?

வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி போராடிய இடைநிலை ஆசிரியர்களைக் கைது செய்த காவல் துறையின் அராஜகப் போக்கு கண்டனத்துக்குரியது

-எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்

🎩🎩வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிற்றுக்கிழமை), 

03.01.2026 (சனிக்கிழமை), 04.01.2026 (ஞாயிற்றுக்கிழமை)

ஆகிய நான்கு தேதிகளில் நடைபெறவுள்ளது.                                                             🎩🎩சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ560 விலை உயர்ந்து ரூபாய் 1,03,120க்கு விற்பனை

ஒரு கிராம் தங்கம் 70 விலை உயர்ந்து 12,890க்கு விற்பனை சென்னையில் ஒரு கிலோ வெள்ளி 900 ரூபாய் உயர்ந்து 254.000 க்கு விற்பனை

ஒரு கிராம் வெள்ளி 9 ரூபாய் விலை உயர்ந்து 254 விற்பனை

🎩🎩3G மொபைல் சேவையை நிறுத்த BSNL திட்டம்

நாடு முழுவதும் 3G மொபைல் சேவையை விரைவில் நிறுத்த BSNL நிறுவனம் திட்டம்

ஏற்கனவே 4G சேவைகளை வழங்கி வரும் பகுதிகளில் இத்திட்டத்தை முதலில் அமல்படுத்த BSNL முடிவு செய்துள்ளதாக தகவல்

🎩🎩1,68,825 பேர் விண்ணப்பம்!

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி இதுவரை 1,68,825 பேர் விண்ணப்பம் கொடுத்துள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

🎩🎩அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற கூடுதல் அவகாசம் - டிச. 28 முதல் 31 வரை அளிக்கலாம்

🎩🎩உளுந்தூர்பேட்டையில் ரூ.1,350 கோடி செலவில் நடைபெற்று

 வரும் தோல் இல்லா காலணி ஆலை அமைக்கும் 

பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

🎩🎩`10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்''

``2002, 2005 சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான தகவலை அளிக்காத 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் 

வாக்குச்சாவடியின் நிலை அலுவலர் வாக்காளரிடம் நோட்டீஸ் வழங்குவார், வாக்காளர் பதிவு அதிகாரியிடம் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்

வாக்காளரை நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும், ஆவணங்கள் முறையாக இல்லை என்றால் பெயர் நீக்கப்பட வாய்ப்பு''

தமிழ்நாட்டில் SIR படிவங்களை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு நோட்டீஸ் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம்

🎩🎩ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்..!" -சந்திரபாபு நாயுடு

நாட்டில் வயதான சமூகம் உருவாவதைத் தவிர்க்க, கடந்த கால மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுகளை பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கருத்து.

🎩🎩பறை நம்முடைய இசை''

``சமூகத்தை செதுக்கும் செயலாக கலை இருக்க வேண்டும், பறை நம்முடைய இசை - யார் யாரோ பறையை கையில் எடுத்துள்ளார்கள்''

சென்னை, மார்கழியில் மக்களிசை தொடக்க விழாவில் எம்.பி கனிமொழி பேச்சு.

No comments:

Post a Comment