Showing posts with label சிந்தனை கதைகள். Show all posts
Showing posts with label சிந்தனை கதைகள். Show all posts

Tuesday, November 11, 2025

மங்கு குரங்கின் வெற்றி-Mangu’s Jungle Triumph

மங்கு ஒரு சுட்டி குரங்கு ,அது ஒரு மிக பெரிய காட்டுல தன்னோட அம்மாகூட வாழ்ந்துகிட்டு வந்துச்சு

 Introduction to Mangu

அதுக்கு ஞாபக மறதி அதிகமா இருந்துச்சு ,அதனால அதுக்கு தன்னம்பிக்கையே இல்லாம எப்பவும் சோர்ந்தே இருந்துச்சு ,அவுங்க அம்மா சொன்னாங்க உலகத்துல குறை இல்லாதவங்களே இல்லை ,உனக்கு இருக்குறது சின்ன குறை தொடர்ந்து முயற்சி செய்தன்னா நீயும் வாழ்க்கையில உயர்ந்த இடத்துக்கு போகலாம்னு சொ

Thursday, October 2, 2025

அழகு என்பது.

ஒரு திருவிழா கூட்டத்தில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருந்தது. யாரும் பொருட்படுத்தாத நிலையில் ஓர் இளைஞன் அதை கவனித்தான். மெல்ல அக்குழந்தையிடம் சென்று ஏன் அழுகிறாய் என்றான். இப்போது அழுகை சற்று அதிகமானதை அவனால் உணர முடிந்தது. குழந்தையை தன் மார்போடு இருத்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியபடி மீண்டும் கேட்டான், ஏன் அழுகிறாய் 

அழுகையை கட்டுப்படுத்தியவாறே, "என் அம்மாவை காணோம்" என்றது குழந்தை.

 உன் அம்மா எப்படி இருப்பார்கள? என்றான் அவன். 

ரொம்ப அழகா

Sunday, March 2, 2025

ஜென் வழி

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫


*இன்றைய சிந்தனை*


இழப்பதெல்லாம் ஒரு இழப்பு அல்ல. 


*வாழ்க்கையின்*

*விளிம்பு நிலையில்*

*வந்து நிற்க* *வேண்டிய*

*சூழ்நிலை* *அமைந்தாலும்,* 

*நிதானமும்,

Thursday, January 9, 2025

உணரத்தான் முடியும் பார்க்க முடியாது

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

_*எவ்வித  அறிவுரைக்கும், ஆலோசனைக்கும் ஒத்துப் வராதவர்களை விட்டொழியுங்கள். அவர்கள் மாற மாட்டார்கள்.*_


_*கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் தான் பிறந்தோம். குறைகளை சொல்லி காயப் படுத்த அல்ல. தவறு என்றால் கற்றுக் கொடுங்கள். சரி என்றால் கற்றுக் கொள்ளுங்கள்.*_


_*நம் எண்ணங்கள், நம்பிக்கைகள், பிராத்தனைகள் மற்றும் பேசும் வார்த்தைகள் நம்   வாழ்க்கையை வடிவமைக்கின்றன

Sunday, November 3, 2024

மனிதனின் உண்மையான மதிப்பு

 *🌟 மனிதனின் உண்மையான மதிப்பு - பணத்திலும் ஆடம்பரத்திலும் அல்ல, குணத்தில்தான்!*

ஒரு மனிதனின் உண்மையான மதிப்பு பணத்தில் அல்ல, அவருடைய குணத்தில் தான் இருக்கிறது. பணம், ஆடம்பரம் போன்றவை உடனடியாக வெளிப்படும்; ஆனால் குணம் மட்டுமே

Saturday, September 14, 2024

நான் என்ற அகந்தை

நான்கு தெய்வ பக்தர்கள் ஒரு மரத்தடியில் அமர்ந்து சொர்க்கத்துக்கு போவது பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். 

சொர்க்கத்துக்கு செல்வதற்கான தகுதி தங்களில் யாருக்கு உண்டு என்பது அவர்கள் வாதத்தின் அடிப்படையாக அமைந்திருந்தது.

சோமநாதன் என்ற பக்தன் சொன்னான். 

நான் வேதங்களையும் மந்திரங்களையும் முறையாக கற்றுத்

Tuesday, June 18, 2024

பிரச்சனைகள் இல்லாவிட்டால்...



பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இல்லை. பிரச்சனை இல்லாத வாழ்க்கையும் இல்லை. அதே போலத் தீர்வுகள் இல்லாத பிரச்சனைகளும் இல்லை.


ஆனால் நாம் தான் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுப்பதில்லை. சிலவேளைகளில் நாம் ஒன்றும் இல்லாத சிறுசெயல்கள் கூட பெரிய பிரச்சனையாகக் கருதுவதுண்டு.


அதைப் பற்றியே சிந்தித்து, சிந்தித்து கலங்குவதுண்டு. ஆனால், அவை மிகச்

அது இரண்டும் கெட்டான் வழி



எந்த செயல் புரிய முனைந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் பொறுப்பாய் நிறைவேற்றி முடிக்கும் மனோபாவம் வேண்டும்.

மனமிருந்தால் செய்வேன்; இல்லையெனில் 'என் வழி தனி வழி' என்றெல்லாம் ஒரு செயலில் இறங்கினால் அது இரண்டும் கெட்டான் வழி. ஈடுபாட்டுடன் செய்யப்படும் செயல்களே மன நிறைவளிக்கும்; மகிழ்வைத் தரும்.


“இந்தக் காரியத்தில் நான் இறங்கப் போ

Saturday, June 1, 2024

வாழ்க்கையை தாங்கும் ஒரு கொள்கலன்தான் இவை.

ஒரு பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த மாணவர்கள் கேம்பஸ் தேர்விலும் வெற்றி பெற்று மிகப் பெரிய நிறுவனங்களில் பணியில் சேர்கின்றனர். 


தங்களுக்கு நல்ல முறையில் கல்வி போதித்து ஓய்வு பெற்ற 

தங்கள் பேராசிரியர் ஒருவரின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவிப்பதற்காக அவர் வீட்டுக்கு சென்றனர்.


மாணவர்களும் பேராசிரியரும் ஒருவருக்கொரு

Wednesday, May 29, 2024

நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை

ஒரு நாய் கடைக்கு வந்துச்சு..

கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு... என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...


கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..


. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்

Monday, May 20, 2024

தவறாகப் பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள்.

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?

இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான்.

காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.

அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான். இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது.

இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு.. இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் போக வேண்டிய திசை வேறு. போய்க்கொண்டிருக்கிற

திசை வேறு. கரை சேர நினைக்கிற

மனிதர்களின் கதை இது.

சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப்பிடித்துக்

கொள்கிறார்கள். சிலர்

நாயின் வாலைப் பற்றிக்

கொள்கிறார்கள்.


ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர

விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள்.

ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்..


ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற

ஆசையில் ஒருத்தன் நீந்திச்சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம்

ஆகியும் கரை திரும்பவில்லை.

நடு ஆற்றில் போராடிக்

கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற

நண்பர்கள் கத்துகிறார்கள்...

‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக்கொண்டு உன்னால் வர

முடியவில்லை என்றால்

பரவாயில்லை... அதை விட்டுவிடு’’.


ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான் ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்.. இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது..

ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே.

கரடிக் குட்டி’’


தவறாகப் பற்றுகிறவர்கள்

தடுமாறிப் போகிறார்கள்.

சரியாகப் பற்றுகிறவர்கள்

கரையேறி விடுகிறார்கள்.

பற்றையே விடுகிறவர்கள்

கடவுளாகி விடுகிறார்கள்!

பிச்சை பாத்திரம்

ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.


அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.


இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான்.


ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.


முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.


சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான். ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.


பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன்.


இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க..


எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம்.
யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.


அந்த துறவி “அடப்பாவிகளா! மூணு தலைமுறையா இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?” எனக் கோபமாக கேட்க..


பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.


துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார்.


பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.
“சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!” என பரிதாபமாக கேட்க...


துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த ஓட்டை சுரண்ட தொடங்கினார்.


பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.
“ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமி” என அலறினான்.


துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...


மெள்ள மெள்ள...


மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!


பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து கொண்டான்.


ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.


பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் சொன்னார்!


“அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?” இனியாவது ஓட்டை வைத்து ஒழுங்காக வாழுங்கடா என்று திட்டிவிட்டு போனார்.


இன்றைய தமிழக மக்களும் அந்த பிச்சைக்காரன் போல தான். தங்களிடம் இருக்கும் தங்க திரு *ஓட்டில்* (Vote) பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்.


*ஓட்டின்* மகிமையை என்று உணர்வார்களோ.. அன்றே தமிழகம் உலகில் உயர்ந்து விளங்கும்.


படித்ததில் பிடித்தது.

Saturday, May 11, 2024

நிச்சயமாக சரியான ஒரு விடை கிடைக்கும்

 ஒருவன் தன்னுடைய தொழிலில்

படுதோல்வியடைந்த நிலையில் 

சலித்தவாறே நடந்து வந்தான்.

தெரு முனையில் போவோர், 

வருவோரை மிகுந்த மனவேதனையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 

அப்போது எதிரில் உள்ள  குப்பை தொட்டியில் ஒருவர் தனக்கு தேவையான பழைய பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார்.

சிறிது நேரத்தில் இன்னொரு நபர் அதே குப்பைதொட்டியில் தனக்கு தேவையான  பாட்டில்களை நிரப்பி எடுத்து சென்றார்.

மீண்டும் ஒருவர் தனக்கு தேவையான பழைய பிளாஸ்டிக் தட்டு, பேப்பரை எடுத்து சாக்கில் நிரப்பி சென்றார். 

அதன்பின் ஒரு நாய் வந்து எச்சில் இலையில் இருந்த சாப்பாட்டை சாப்பிட்டு சென்றது.

கடைசியாக வந்த ஒரு பசு குப்பையில் கிடந்த பச்சிலையை சாப்பிட்டு தன் பசியை போக்கி கொண்டது.

இதைப் பார்த்த, படு தோல்வியடைந்த 

அந்த நபர் புத்துணர்ச்சி பெற்றார்.

ஒரு சிறிய குப்பை தொட்டி மூலம் இத்தனை பேர் வாழ வாய்ப்பு கிடைக்கிறதெனில்,இந்த பரந்து  விரிந்து கிடக்கும் இவ்வுலகில் எத்தனையெத்தனையோ வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

அவற்றைப் பயன்படுத்தி நாம் அனைவரும் எப்படியெப்படியெல்லாமோ  பிழைத்து வாழலாம் என்று தன் மனதை திடப்படுத்திக்கொண்டு, மனதில்

ஒரு சங்கற்பம் செய்து கொண்டார்.

இனி தனக்கு தோல்வியே கிடையாது,

இனி வரும் காலங்கள் பொற்காலமே,

எனக்கு இனி மிக பெரிய வெற்றியே 

என  தன்னம்பிக்கையுடன் 

தன் பழைய தொழிலில் எங்கே 

தவறு என ஆராய்ந்து மீண்டும்

தொடங்கச்  சென்றார்.

இந்த பரந்து விரிந்துள்ள உலகில் 

நாம் அனைவரும் "ஜெயிக்கப்  பிறந்தவர்களே!

எப்பொழுது எல்லாம் நாம்

சிரமப்படுகிறோமோ, அப்போது

அதற்காக யாரையும் குறை

சொல்வதை தவிர்க்கலாம்.

waste of energy.

அதற்கு பதிலாக அந்த 

பிரச்னையை எல்லா 

கோணங்களிலும் 

அலசி ஆராய்லாம்.

அதை தன்னார்வத்துடன் 

ஒரு களமாக, சவாலாக 

மாற்றி பாருங்கள்.

என்ன நிகழும்?

நிச்சயமாக சரியான 

ஒரு விடை கிடைக்கும்.

Thursday, May 9, 2024

சிந்தனை செய் மனமே...

 அந்தக் கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்கு பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான்.


வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்கு பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன. 


வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டி சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளை துரத்துவதும் கடித்து குதறுவதும் இருந்தன.


இதனால் கலக்கமுற்ற விவசாயி தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனை சந்தித்து “அப்பா… உன் நாய்களை கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான். 


வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்த பயனும் இன்றி போனது.


ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளை கடித்துக் குதறின.


இந்த முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று மீண்டும் வேட்டைக்காரனிடம் புகார் செய்ய சென்றான் விவசாயி.


வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.


இதைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து தலைவரை சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.


முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு உண்டு.


விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கை பற்றி விசாரித்து தெரிந்துகொண்ட பஞ்சாயத்து தலைவர், “என்னால் பஞ்சயாத்தை கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனை தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். 


ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியை சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்துவீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?”


பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்ட விவசாயி, அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாக பார்ப்பதில் தான் தனக்கு விருப்பம் என்றான்.


“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும் அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வை சொல்கிறேன்… கேட்பாயா?”


“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”


அடுத்து பஞ்சாயத்து தலைவர் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.


வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களை பரீட்சித்து பார்க்க முற்பட்டான்.


தனது பட்டியில் இருக்கும் ஆட்டு குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டி விளையாட பரிசளித்தான். 


குழந்தைகளுக்கு தாங்கள் விளையாட புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே குஷி. இருவரும் அந்த குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.


தன் குழந்தைகளின் புதிய தோழர்களை பாதுக்காக்க, தற்போது வேட்டைக்காரன், நாய்களை சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களை சங்கிலியால் பிணைத்தான்.


தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததை தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களை பரிசளித்தான் வேட்டைக்காரன். 


ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.


மேற்கூறிய கதை அன்றாடம் பலருக்கு நடப்பது தான். 


பிரச்சனை தான் வேறு வேறு. 


நம்மிடம் நியாயம் இருக்கிறது என்பதற்காகவோ, நம்மிடம் வலிமை இருக்கிறது என்பதற்காகவோ வீணாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.


ஆடுகள் முக்கியம் தான். 


ஆனால் அதைவிட மனஅமைதி முக்கியமல்லவா.......???


சிந்தனை செய் மனமே......!!!

சிறந்ததை கொடுக்க வேண்டும்

ஒரு நாட்டில் கண் பார்வை இல்லாத ஒரு மன்னன் ஆண்டு வந்தான்!


அவனுக்கு ஒரு பட்டத்து இளவரசன் இருந்தான்! ஒரு நாள் அவனை அழைத்து மகனே! இந்த தேசத்திற்கு நீ மன்னன் ஆகும் நேரம் வந்து விட்டது! நீ அரியணை ஏற்க வேண்டும் அதற்கு முன் உனக்கு திருமணம் செய்ய வேண்டும் உனக்கு எப்படி பட்ட துணை வேண்டும் என்று சொல்ல!


அதற்கு இளவரசன் அப்பா நம் நான்கு சிற்றரசன் மகள்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருவரை நான் தேர்ந்து எடுக்க ஆசை படுகிறேன்! ஆனால் யாரை தேர்ந்து எடுப்பது என்று தெரியவில்லை!


நீங்கள் தான் அதற்கு உதவ வேண்டும் என்று சொன்னான். அதற்கு மன்னன் கவலை படாதே அந்த நால்வருக்கும் நான் ஒரு சோதனை வைக்கிறேன் அதில் யார் வெற்றி கொள்கிறார்களோ அவர்களை நீ திருமணம் செய்து கொள்ளலாம். அதுவரை நீ அரண்மனையில் இரு! உனக்கு உடம்பு சரியில்லை வயிறு வலியில் துடிப்பதாக சொல்ல போகிறேன் என்றார்.


நான்கு இளவரசிகள் அழைக்கப்பட்டார்கள். மன்னன் அவர்களிடம் சொன்னான் பட்டத்து இளவரசன் உடம்பு சரியில்லை அவனுக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டு இருக்கு அதனால் நீங்கள் ஒரு சிறந்த சூப்பை தயார் செய்யுங்கள் முதலில் நாம் அதை சுவைத்து பார்ப்பேன்! எந்த உணவு நன்றாக இருக்கிறதோ அந்த உணவை சமைத்தவர் அடுத்த பட்டத்து இளவரசி ஆவார் என்று சொல்ல!


நான்கு இளவரசிகள் போட்டி போட்டு கொண்டு உணவை தயார் செய்ய ஆரம்பித்தனர். ஒரு மணி நேரம் கழித்து மன்னரிடம் சுவைக்க எடுத்து வரப்பட்டது!


முதல் இளவரசி சிக்கனை கொண்டு நல்ல சூப் ஒன்றை தயார் செய்து இருந்தால்! மன்னர் சுவைத்து பார்த்தார் சுவை அலாதியாக இருந்தது.


இரண்டாம் இளவரசி காய்கறிகள் மற்றும் நிறைய மசாலாக்கள் சேர்த்து அருமையான சூப் தயாரித்து இருந்தார்! அதுவும் அமிர்தமாக இருந்தது.


மூன்றாவது இளவரசி வெண்ணெய் சேர்த்து மணக்கும் சூப் ஒன்றை தயார் செய்து இருந்தார்! அதுவும் சுவைக்க அமிர்தம் போல் இருந்தது!


ஆனால் நான்காம் இளவரசி செய்த சூப் உப்பு காரம் மசாலா இல்லாமல் சூடு அதிகம் இல்லாமல் இருந்தது சுவை ஒன்றும் சொல்லி கொள்ளும் படி இல்லை!


முதல் மூன்று இளவரசியும் நான்காவது இளவரசியை பார்த்து நகைத்தனர்!


கண்டிப்பாக முதல் மூன்றில் ஒருவர் தான் மன்னன் தேர்ந்து எடுப்பார் என்று முடிவு செய்து இருந்தனர்!


ஆனால் மன்னன் நான்காவது இளவரசியை தேர்ந்து எடுத்தார்!


அவையில் இருந்த அனைவரும் மன்னனிடம் ஏன் என்று கேட்க அதற்கு மன்னன் சொன்னார், முதல் மூன்று பேரும் எப்படி ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள் ஆனால் நான்காவது இளவரசி மட்டும் தான் இளவரசனுக்கு உடம்பு சரியில்லை வயிறு சரியில்லை அதனால் உப்பு, காரம், எண்ணெய் மற்றும் சூடு குறைவாக இருக்கும் சூப்பை தயார் செய்தார்!


அவர் தான் உண்மையில் குடும்பத்திற்கும் ஏன் நாட்டிற்கும் சிறந்தவராக இருப்பார் என்று தீர்ப்பை சொல்லி முடித்தார்!

Tuesday, April 30, 2024

உங்கள் சிந்தனையே உங்களை வெற்றியாளன் ஆக்குகிறது

How successful people think 

இந்த பிரபஞ்சமே சிறந்த சிந்தனையாளர்களை தான் எதிர் நோக்கியுள்ளது. இவர்கள் எப்போதுமே தனது முன்னேற்றம் மற்றும் தனது சமுதாயத்தின் சிறப்பான முன்னேற்றத்திற்க்காகவும் வாழ்பவர்கள். சரியாக சிந்திக்க தெரியாதவர்கள் மற்றவர்களுக்கு அடிமையாகி கிடக்கிறார்கள். சரியாக சிந்திக்க தெரிந்தவர்கள் தன்னை தானே சிறப்பாக நிர்வகிக்க தெரிந்தவர்களாக இருப்பார்கள். இவர்களே சிறந்த வெற்றியாளர்களாகவும் வலம் வருகிறார்கள். 


 நேர்மறை சிந்தனைகள் மட்டுமே நமது வாழ்கையை வளமாக்கும் சக்தியாக இருக்கிறது. நாமும் நமது சிந்தனையை சீர்செய்வதின் மூலம் நம்மையும், நமது சமுதாயத்தையும் சரியாக வழிநடத்த முடியும். நமக்கென சிறப்பான சுயஒழுக்க விதிமுறைகளை வகுத்துகொள்ளவும் நேர்மறையான சிந்தனைகள் அவசியமாகிறது.  நாம் எப்படி சரியாக சிந்திப்பது? நாம் எப்படி சிறந்த சிந்தனையாளர் ஆவது?  இதில் நாம் மேற்காணவுள்ள விசயங்கள் நம்மை சிறந்னை சிந்தனையாளர்களாக உருவாக்கி கொள்வதற்க்கும், சிந்தனைகளை எவ்வாறு செயல்களாக மாற்றுவது என்பதை குறித்தும் விளக்குகிறது...


ஒரு கதை இருக்கு...


உன்னை நீ கவனி, உலகம் உனக்கு சொந்தமாகும்...


ஒரு ராஜா தனது நாட்டை மிகவும் செல்வ செழிப்புடன் ஆட்சி செய்து வந்தார். அங்கு இல்லாத வளங்களே இல்லை என்று கூறலாம். ஆனால் மன்னருக்கு மனநிம்மதியே இல்லை. நீண்ட நாட்களாக மனநிம்மதி இல்லாததால் தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணம் அவருக்குள் மேலோங்கி கொண்டே இருந்தது. 

ராஜா தற்கொலை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் தனது குதிரையில் மலையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார். இடையே மரத்தடியில் ஒரு முனிவர் தவம் செய்து கொண்டு இருந்தார். அவரை பார்த்தவுடன் ராஜா தனது குதிரையில் இறங்கி முனிவர் கண் திறப்பதற்க்காக காத்துக்கொண்டு இருந்தான்.

முனிவர் கண் திறந்தவுடன், ராஜா உங்களை தரிசிப்பதற்க்காகவே இங்கு காத்திருக்கிறேன் என்று கூறி தனது மனக்குறையை கூறினான். முனிவர் நீ ஏன் சாகவேண்டும் என்று நினைக்கிறாய் என்று கேட்டுவிட்டு மன்னரை கவனித்தார். மன்னருக்கு தனது காலை ஆட்டிக்கொண்டே இருக்கிற பழக்கம் கொண்டவர். முனிவரிடம் பேசும்போதும் தனது காலை ஆட்டிக்கொண்டே இருந்தார். முனிவர் தன்னை கவனிக்கிறார் என்பதை அறிந்த மன்னன் கால் ஆட்டுவதை நிறுத்திக்கொண்டான். 

முனிவர் மன்னனை பார்த்து கால் ஆட்டும் பழக்கம் உன்னில் எத்தனை நாட்களாக இருக்கிறது என்று கேட்க, மன்னர் நீணாட காலமாக இந்த பழக்கம் என்னில் இருக்கிறது என்று கூறினார். அதற்கு முனிவர், சரி இப்போது ஏன் கால் ஆட்டுவதை நிறுத்திக்கொண்டாய் என கேட்டார். நீங்கள் என்னை கவனித்து கொண்டு இருந்தீர்கள் அதனால் நான் எனது கால் ஆட்டுவதை நிறுத்திக்கொண்டேன் என்றார் மன்னன். 

முனிவர் உன்னிடம் பல வருடங்களா வழக்கங்களை நான் கவனிப்பதால் நிறுத்திக்கொண்டாய். உன்னுடைய மனநிம்மதியை கெடுக்கும் விசயம் என்ன என்பதை சற்று ஆழமாக சிந்தித்து பார், அதற்க்கான காரணம் என்ன என்பது விளங்கும். மனநிம்மதியை சீர்குழைக்கும் அந்த பழக்கத்தை கைவிடும் போது உன்னால் நிம்மதியான வாழ்கையை வாழ முடியும். இதை கேட்ட மன்னருக்கு இப்போது தான் புரிந்தது, நமது மனஉளைச்சலுக்கு காரணமான விசயத்தை கண்டறிந்து அதனை சரி செய்து விட்டால் நமக்கு மனநிம்மதி தானாக வந்துவிடும் என்பது. நம்மையே நாம் கவனிக்கும் போது நம்மிடம் உள்ள குறைகளை கண்டு கொள்ள முடியும் என்பதை உணர்ந்த மன்னன், முனிவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு தனது நாட்டை நோக்கி பயணத்தை தொடர்ந்தான் மன்னன். 

நமது வாழ்கையிலும் இப்படிதான், பல சமயங்களில் தேவையற்ற விசயங்களுக்கு முக்கியத்துவத்தை கொடுத்துக்கொண்டு மனநிம்மதி இல்லாமல் அலைந்து கொண்டு இருக்கிறோம். நமது மனநிலையில் மாற்றத்தை கொண்டு வருவதற்க்கான தீர்வு நம்மிடம் தான் உள்ளது என்பதை உணர்ந்து தேவையற்ற விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்துக்கொள்ளும் போது நமது வாழ்கை சுவை நிறைந்ததாக மாறும். 

பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே 👇🏻👇🏻👇🏻

             

Friday, April 26, 2024

மதுவிற்கு எதிராக திரு. கல்கி அவர்கள் எழதிய சிறுகதை

 ....  எக்காலத்திற்கும் பொருந்தமாக உள்ளது....

சிறிது நேரம் ஒதுக்கிப் படியுங்கள்... நன்றி..

===============================================


சின்னத்தம்பியும் திருடர்களும்


கதை ஆசிரியர்: அமரர் கல்கி

=====================================


     ஒரு ஊரில் சின்னத்தம்பி என்ற ஒரு வாலிபன் இருந்தான். அவன் ஏழை; தகப்பனில்லாதவன். ஒருநாள் அவன் பணம் சம்பாதித்து வருவதற்காகப் பட்டணத்துக்குப் புறப்பட்டான்.


     அவன் கிளம்பிய போது அவன் தாயார் அவனிடம் ஒரு வைரக்கல்லைக் கொடுத்துப் பின் வருமாறு சொன்னாள்:- “குழந்தாய்! உன்னுடைய தகப்பன் உனக்குத் தேடி வைத்த சொத்து இந்த வைரம் ஒன்றுதான். இதை நீ வெகு ஜாக்கிரதையாகக் கொண்டு போக வேண்டும். பட்டணத்தில் இதற்கு நல்ல விலை கொடுப்பார்கள். இதை விற்று வரும் பணத்தை முதலாக வைத்துக் கொண்டு நாணயமாக வியாபாரம் செய்தால் சீக்கிரம் நல்ல பணம் சம்பாதித்துக் கொண்டு திரும்பலாம். வழியிலே திருடர் பயம் அதிகம். வழிபோக்கர்கள் யாரையும் நம்பிவிடாதே. சிலர் உன்னோடு சிநேகமாய்ப் பேசிக்கொண்டே வந்து சமயம் பார்த்து வைரத்தை அடித்துப் பறித்துக் கொள்வார்கள். ஜாக்கிரதையாயிருந்து பிழை” என்றாள்.


     அந்த வைரத்தின் பெயர் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அதன் பெயர் அறிவு.


     சின்னத்தம்பி வைரத்தை வாங்கிப் பத்திரமாய் முடிந்துகொண்டு புறப்பட்டான். சாலையில் கொஞ்ச தூரம் சென்றதும் அவன் ஒரு வழிப் போக்கனைக் கண்டான்.


     ”தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?” என்று கேட்டான் வழிப்போக்கன்.


     ”பட்டணத்துக்குப் பணம் சம்பாதிக்கப் போகிறேன். ஐயா!” என்றான் சின்னத்தம்பி.


     ”அப்படியா? நானும் பட்டணத்துக்குத்தான் போகிறேன். இருவரும் சேர்ந்து போகலாம்” என்று வழிப்போக்கன் சொன்னான்.


     சின்னத்தம்பி தன் தாயார் சொல்லிய புத்திமதிகளை நினைத்துக் கொண்டான். “உன் பெயரென்ன?” என்று கேட்டான்.


     ”என் பெயர் சோம்பல்” என்றான் வழிப்போக்கன்.


     ”ஓகோ! உன்னைப்பற்றி என் தாயார் சொல்லியிருக்கிறாள். நீ பொல்லாத திருடன். உன் சகவாசம் வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சின்னத்தம்பி ஓட்டம் பிடித்தான்.


     திருடன் “இந்தா! பிடி!” என்று கூச்சலிட்டுக் கொண்டே தொடர்ந்து ஓடினான். என்ன ஓடியும் சின்னத்தம்பியை அவனால் பிடிக்க முடியவில்லை.


     இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் வேறொரு ஆள் எதிர்ப்பட்டான்.


     ”தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?” என்று கேட்டான். “பட்டணத்துக்குப் போகிறேன்” என்றான் சின்னத்தம்பி.


     ”அப்படியா? சந்தோஷம். நாம் இருவரும் பேசிக் கொண்டே போகலாம்” என்றான் அம்மனிதன்.


     ”நீ யார்?” என்று கேட்டான் சின்னத்தம்பி.


     ”என்னைத் தெரியாது? நான் தான் வியாதி” என்று அம்மனிதன் கூறினான்.


     ”ஐயோ; நீ சோம்பலை விடப் பொல்லாத திருடனாயிற்றே! நீ என் சுகத்தைத் திருடிக்கொள்வாய் வேண்டாம் உன் உறவு எனக்கு” என்று சொல்லிவிட்டுச் சின்னத்தம்பி ஓட்டம் பிடித்தான்.


     வியாதி ஓடி ஓடிப் பார்த்தும் அவனைப் பிடிக்க முடியவில்லை.


     இன்னும் போகப் போக வழியில் சூதாட்டம், கோபம், சண்டை, மூர்க்கம் விபசாரம் முதலிய திருடர்கள் ஒவ்வொருவராக எதிர்ப்பட்டுச் சின்னத் தம்பியை வழி மடக்கப் பார்த்தார்கள். எல்லாரையும் ஏமாற்றிப் பின்னால் விட்டுவிட்டுச் சின்னத்தம்பி முன்னால் போய்க்கொண்டிருந்தான்.


     மேலே சொன்ன சோம்பல், வியாதி, விபசாரம் முதலிய திருடர்கள் எல்லாரும் ஒரு பெரிய கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இக்கூட்டத்திற்கு ஒரு தலைவன் இருந்தான். அவன் பெயர் மதுசாரம். இவன் சமயத்துக்குத் தகுந்தபடி வேஷம் போட்டுக் கொள்வதில் தேர்ந்தவன். கள்ளு, சாராயம், ஒயின், பிராந்தி, விஸ்கி, பீர், அபினி, கஞ்சா என்று விதவிதமான பெயர்களை வைத்துக்கொண்டு பெயருக்கேற்ப வெவ்வேறு வேஷங்கள் போட்டுக் கொள்வான்.


கடைசியாக, இத்திருடர் தலைவனை நமது சின்னத்தம்பி சந்தித்தான்.


     ”தம்பி, தம்பி, எங்கே போகிறாய்?” என்றான் திருடர் தலைவன்.


     ”பட்டணத்துக்குப் போகிறேன். நீ யார்?” என்று சின்னத்தம்பி கேட்டான்.


     ”என் பெயர் மதுசாரம்” என்றான் திருடன்.


     சின்னத்தம்பி தனக்குள் யோசித்துக் கொண்டான்:- “இவனைப் பற்றி என் தாயார் ஒன்றும் சொல்லவில்லை. இவன் வெகு உற்சாக புருஷனாகக் காணப்படுகிறான். உடல் பருத்து நல்ல உடையணிந்து பெரிய மனிதன் போல் தோன்றுகிறான். இவன் திருடனாயிருப்பானா? எப்படியானாலும் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். தாயார் ஒரு வேளை இவனைப் பற்றிச் சொல்ல மறந்திருக்கலாம்.”


     இப்படியெண்ணிச் சின்னத்தம்பி வேகமாய் நடக்கலானான்.


     அப்பொழுது திருடர் தலைவன், “ஏனப்பா இவ்வளவு விரைவாக ஓடுகிறாய்? கொஞ்சம் மெதுவாய் நட; என்ன அவசரம்? பட்டணத்தில் நான் ரொம்ப அனுபவமுள்ளவன். பணஞ்சம்பாதிக்கும் வழியெல்லாம் உனக்கு நான் சொல்லித் தருகிறேன்” என்றான்.


     சின்னத்தம்பி இந்த ஆசை வார்த்தையில் மயங்கிவிட்டான். “இவன் திருடனாயிருக்க மாட்டான். இவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு கொஞ்சம் முன்னாலேயே போய்க் கொண்டிருக்கலாம். அப்படி ஒரு வேளை இவன் திருடனாயிருந்து நம்மை பிடிக்க வந்தாலும், ஒரே ஓட்டமாய் ஓடித் தப்பி விடலாம். இத்தனை திருடர்களை ஏமாற்றி வந்த எனக்கு இந்தப் பொதியனைத்தானா ஏமாற்ற முடியாது?” என்று அவன் எண்ணினான். அதனால் கொஞ்சம் மெதுவாய் நடந்தான்.


     திருடர் தலைவன் இனிமையாகப் பேசிக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வந்தான். “ஆஹா! இவனுடன் பேசினால் எவ்வளவு உற்சாகமாயிருக்கிரது?” என்று சின்னத்தம்பி நினைத்தான். அவன் அருகில் வந்ததும் திருடர் தலைவன் ஒரே தாவலாய்த் தாவி சின்னத்தம்பியைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டான்.


     சின்னத்தம்பி ஆனமட்டும் அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொள்ள முயன்றான். ஒன்றும் முடியவில்லை. திருடன் அவனைச் சோதனை போட்டு அவன் பத்திரமாய் முடிந்து வைத்திருந்த வைரத்தைப் பிடுங்கிக் கொண்டான். இதற்குள் பின்னால் தங்கிய வியாதி, விபசாரம், சூதாட்டம், சோம்பல் முதலிய திருடர்களும் ஓடிவந்து சின்னத்தம்பியை சூழ்ந்து கொண்டார்கள்.


     திருடர் எல்லாரும் சேர்ந்து அவனைத் தங்கள் இருப்பிடத்துக்கு வரும்படி அழைத்தார்கள். சின்னத்தம்பி பார்த்தான். “வைரந்தான் போய்விட்டது. பட்டணத்துக்குப் போய் என்ன செய்வது? இவர்களுடன் தான் போவோமே?” என்றெண்ணினான்.


     பாவம்! இவ்வாறு சின்னத்தம்பி திருடர் தலைவனுக்கு அடிமைப்பட்டான். மற்ற எல்லாத் திருடர்களுக்கும் அவன் குற்றேவல் செய்ய வேண்டியிருந்தது. இவ்வாறு சில காலம் அடிமையாயிருந்து உழைத்து விட்டுக் கடைசியில் அவன் மாண்டு போனான்.


     வாழ்க்கைப் பிரயாணம் தொடங்கும் எத்தனையோ ஏழை ஜனங்கள் சின்னத்தம்பியைப் போல் மதுசாரம் என்னும் கொள்ளைத் தலைவனுக்கு அடிமையாகிறார்கள். முதலிலேயே அவன் பெரிய கள்ளன் என்பதை அறிந்து அருகில் நெருங்கவிடாதிருந்தால் பிழைத்திருக்கலாம். அவனுடைய இனிய பேச்சுக்குக் கொஞ்சம் செவி கொடுத்து விட்டால் பிறகு வலையில் விழ வேண்டியதுதான். நயவஞ்சகத்தில் அவன் மிகத் தேர்ந்தவனாதலால் அறியாத ஜனங்கள் எத்தனையோ பேர் அவனை நெருங்க விட்டு அதோகதி அடைகிறார்கள். இந்தக் கொடிய கள்ளனைப் பிடித்து நாட்டைவிட்டுத் துரத்துவது சர்க்காரின் கடமையல்லவா? ஆனால் அதற்குப் பதிலாக ஆங்கில சர்க்கார் இவனுடன் சண்டைபோட முடியாதென்று இந்தப் பாதகனுக்கு ‘லைஸென்ஸ்’ கொடுத்து வழிப்போக்கர்களைத் தன் வலையில் போட்டுக் கொள்ளும்படி விட்டிருக்கிறார்கள்!


நன்றி: *சென்னைநூலகம்.காம்* 

(அமரர் கல்கியின் படைப்புகள்), அமரர் கல்கி, எழுத்தாளர், பத்திரிக்கையாளர்.

Wednesday, April 17, 2024

மதுவை மறப்போம்.. மதுவை ஒழிப்போம்..

 ஒரு விமான பயணத்தின் போது ஒரு பயணிக்கு மது கொடுத்த போது அந்த பயணி சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார் விமானப் பணிப்பெண்!

ஐரோப்பிய விமான சேவையில் முதல்வகுப்பில் பயணித்த ஒருவரிடம் பணிப்பெண் சென்று மதுக்கோப்பை ஒன்றை எடுத்து நீட்ட அவரும் நாசூக்காக மறுத்துவிட்டார்,

மீண்டும் புரியாமல் மிக அழகிய மனதை கவரும் வடிவமைப்பிலான கோப்பையொன்றில் நிரப்பிய மதுவுடன் அவரைக் குடிக்குமாறு கேட்டு அணுகினாள்,மறுத்துவிட்டார். வேண்டவே வேண்டாம் என்று.

திரும்பியவள், மேலாளரைக் கண்டு சொன்னாள் அந்தப் பயணி என்னிடம் என்னவோ தவறைக் கண்டிருப்பார் போல, அவர் மதுவை ஏற்றுக்கொள்ளவே இல்லை என்று அவரைக் காட்டி சொல்ல அவரும் கொஞ்சம் பழங்களுடன் மதுக்கோப்பையை கொண்டுவந்து அவரிடம் நீட்ட அவர் தனது மறுப்பை அவரிடமும் சொல்ல,

ஏன் நீங்கள் குடிக்கக் கூடாது என அவர் கேட்டார், அதுக்கு இவர் நான் மது அருந்துவதில்லை என சொன்னதும்… எதற்காக? என்றவருக்கு இவர் சொன்னார்சொன்னார். .

அப்படியாயின் முதலில் இந்த விமானத்தை ஓட்டும் பைலட்டுக்கு கொடுங்கள் என்றார்.

அதெப்படி அவர் டூட்டியில் உள்ளார், கடமையிலிருக்கையில் மது அருந்தினால் அவர் தவறிழைத்துவிட வாய்ப்புண்டு அதனால் விதி மீற மாட்டார் என்றார்..

நானும் கடமையில் இருக்கிறேன் குடும்பஸ்தர் குடும்ப தலைவர் என்ற என் அந்தக் கடமையில் இறைவனுக்கு பயந்து நெறிபிறழாமல் என்னைப் பாதுகாத்துக் கொள்கிறேன் என்றார்.

மதுவை மறப்போம்..

மதுவை ஒழிப்போம்..

கடமை உணர்வோம்..

வாழ்வில் உயர்வோம்.

Tuesday, April 16, 2024

எஞ்சிய நேரங்களையும் வீணாக்கி விடாதீர்கள்.

    ஒரு முறை ஒரு ஆசிரியர் தனது மாணவர்களிடம்  பின்வருமாறு ஒரு கேள்வி கேட்டார்:

உங்களிடம் 86,400 டாலர்கள் இருந்தால், யாராவது ஒரு திருடன் அதில் 10 டாலர்களை பரித்துக்கொண்டு ஓடினால், உங்கள் கையில் இருக்கும் அந்த 86,390 டாலர்களை விட்டுவிட்டு அந்த 10 டாலர்களை பிடிக்க ஓடுவீர்களா? அல்லது பரவாயில்லை என்று உங்கள் பாட்டில் செல்வீர்களா?

அனைத்து மாணவர்களும் ஒரு மித்த குரலில் : நிச்சயமாக நாங்கள் 10 டாலர்களை விட்டுவிடுவோம். அந்த 86,390 டாலர்களையும்தான் பாதுகாப்போம் ' என்று பதிலளித்தனர்.

ஆசிரியர் சொன்னார்: உண்மையில், பெரும்பாலான மக்கள் இதற்கு நேர்மாறாகவே நடக்கின்றனர். அந்த 10 டாலர்களுக்காக அவர்கள் அந்த 86,390 டாலர்களையும் இழக்கின்றனர். 

அதற்கு மாணவர்கள் : யாராவது அப்படி செய்வார்களா?!  எப்படி அது? என்று கேட்டனர். 

அதற்கு ஆசிரியர்: உண்மையில் 86,400  என்பது ஒரு நாளில் உள்ள வினாடிகளின் எண்ணிக்கை. யாராவது ஒருவர் 10 வினாடிகள் உங்களை எரிச்சலூட்டினால் அல்லது மனதை துன்புறுத்தும் வார்த்தைகளை சொன்னால் அல்லது விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடந்தால் அதற்காக நாள் முழுதும் யோசித்து எஞ்சிய 86,390 வினாடிகளையும் நீங்கள் வீணாக்கி விடுவீர்கள். 

ஆதலால் எரிச்சலூட்டும் ஒரு  வார்த்தைக்காக, அல்லது எதிர்மறையான ஒரு நிகழ்வுக்காக உங்கள் ஆற்றல்களையும், சிந்தனைகளையும் எஞ்சிய நேரங்களையும் வீணாக்கி விடாதீர்கள்.

Monday, April 15, 2024

கழுதைகளை கண்டு கொள்ளாதீர்கள்


கழுதையொன்று புலியிடம், 

"'புல்'லின் நிறம் நீலம்!" என்றது. 


புலி கோபமடைந்து,    "இல்லை, புல்லின் நிறம் பச்சை!" என்று கூறியது.


கழுதையோ தொடர்ந்து, 

"'புல்'லின் நிறம் நீலம் தான்!" என்றது. 


விவாதம் சூடுபிடித்தது.


இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்தனர். 


எனவே, 

அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தை காண சென்றனர்.


சிங்கம் தனது சிங்காசனத்தில் அமர்ந்திருக்க, விரைந்து சென்ற கழுதை, 


"அரசே, 'புல் நீலநிறமானது' என்பது உண்மை தானே?" என்று கேட்டது.


சிங்கமும்,

"ஆம் உண்மை தான்... இப்ப என்ன பிரச்னை!" 

என்று கேட்டது.  


கழுதை உற்சாகத்துடன், 

"புலி இதனை மறுக்கிறது அரசே...! 

புல் பச்சை நிறமானதாம்... 


இது என்னை எரிச்சலூட்டுகிறது.


தயவுசெய்து இவரை தண்டியுங்கள்."  

என்று கூறியது.


உடனே அரசர்,

"புலியாகிய நீ ஐந்து வருடங்களுக்கு எந்த 

கழுதைகளுடனும் பேசக்கூடாது... 


மௌனத்தை கடை பிடிக்க வேண்டும். 


இதுதான் உனக்குரிய தண்டனை" 

என்று அறிவித்தது.


கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து, 

"புல் நீலநிறமானது! 

புல் நீலநிறமானது!"  

என்று கூச்சல் போட்டு கொண்டே அங்கிருந்து ஓடியது. 


 தண்டனையை ஏற்றுக் கொண்ட புலி,  சிங்கத்திடம் 

"அரசே, புல் பச்சை நிறம் தானே? 

அப்புறம் ஏன் என்னை தண்டித்தீர்கள்?" என்றது.


சிங்கம், 

"நீ சொல்வது சரிதான்... புல் பச்சை நிறம் தான்... 


அதை ஏன் கழுதையுடன் விவாதித்து நேரத்தை வீணாக்கி கொண்டிருந்தாய்? 


உன்னைப் போன்ற ஒரு துணிச்சலான, புத்திசாலியான உயிரினம்... 


கழுதையின் தவறான கருத்துக்கு மதிப்பு கொடுக்கலாமா? 


இது தான் எனக்கு கவலையை 

உண்டாக்கியது. 


கழுதைகள் அப்படி தான் இருக்கும் என்று விட்டு விட வேண்டும். 


உனது நேரத்தை வீணடித்தது தவறு. 


அதற்கு தான் இந்த தண்டனை!"

என்றது சிங்கம். 


-----------------------


நீதி:-


*முட்டாள்*

மற்றும் 

*வெறியருடன் வாதிடுவது...*


*மிக மோசமான நேர விரயமாகும்.* 🎯


அவர்கள்... 

உண்மையை உணரவோ, 

யதார்த்தத்தை அறிந்து கொள்ளும் திறனோ இல்லாதவர்கள். 


அவர்களுக்கு வேண்டியதெல்லாம்... 


அவர்களது *மாய்மையான  தங்களின் நம்பிக்கைகளில் வெற்றி மட்டுமே.*


ஆகவே, 

தங்களை தாங்களே 'பகுத்தறிவாதிகள்' என்று மெச்சிக் கொள்ளும். மூடர்களிடம்... 


ஜாதி, மத, இன, மொ‌ழி வெறி பிடித்தவர்களிடம் அர்த்தமில்லாத வாதங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். 


நாம் அவர்களுக்கு எத்தனை சான்றுகளை, ஆதாரங்களுடன் வழங்கினாலும்...


அவர்கள் அதனை புரிந்து கொள்ள போவதில்லை. 


அவர்கள் அறிவு திறன் அவ்வளவு தான்.


தாங்கள் தான் புத்திசாலிகள் என்ற மாயமையில் உழன்று வருவார்கள். 


அவர்களின் அகங்காரம், வெறுப்பு 

மற்றும் 

கோபத்தாலும் கண்மூடித்தனமாக தான் முடிவுகள் எடுப்பார்கள்.  


அது தவறாக இருந்தாலும்... 

தாங்கள் 'சரியாக இருப்பதாக தான் நினைப்பார்கள். 


அவர்களின் அறியாமை அவ்வளவு சீக்கிரம் அகலாது. 


ஆகவே, 

அறியாமை கூச்சல் போடும் போது... 


நுண்ணறிவு அமைதியாக இருக்க வேண்டும். 


அமைதியும், மௌனமும் அதிக மதிப்புடையவை.


*உண்மைகள் தானே வெளிவரும்.*


அப்போது 

*தர்மம் வெல்லும்*🙏


*கடமையை ஆற்றுங்கள்* 🎯