பட்டா – ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்த்துறை அளிக்கும் சான்றிதழ்.
• கூட்டுப் பட்டா – ஒரே நிலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் உரிமையாளர்களாக இருக்கும் போது வழங்கப்படும் பட்டா.
• பட்டா மாற்றுதல் – ஒரு நிலத்தை வாங்கிய பிறகு, பழைய உரிமையாளரின் பெயரில் இருக்கும் பட்டாவை புதிய உரிமையாளர் பெயருக்கு மாற்றுவது.
• சிட்டா – குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை
ஆவணம்.• அடங்கல் – நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதியில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
வில்லங்கச் சான்று – ஒரு நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் ஆவணம்.
நன்செய் நிலம் – அதிக பாசன வசதி கொண்ட நிலம்.
புன்செய் நிலம் – பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
தரிசு நிலம் – விவசாயம் செய்யப்படாமல், நீண்ட காலமாக சாகுபடிக்கு பயன்படுத்தப்படாமல் விடப்பட்ட நிலம்.
கிராம நத்தம் – ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
புல எண் – நில அளவை எண் (Survey Number).
கிரயம் – நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்துதல்.
கிராம தானம் – கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம் – கோவில் பயன்பாட்டுக்காக குறிக்கப்பட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
No comments:
Post a Comment