Thursday, April 25, 2024

கடுகு - தினம் ஒரு மூலிகை

 


*கடுகு.*  கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது சமையலில் தாளிப்பதற்கு பயன்படும் கடுகை பற்றி பார்ப்போம் வட இந்தியாவில் மிகுதியாக பயிரிடப்படும் சிறு செடி இனம் இது கரும் கடுகு அதிக காரமுடையது வெண்கடுகு என்ற மற்றொரு வகை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் விதையே மருத்துவ பயன் உடையது வாந்தி உண்டாக்குதல் வெப்பம் மிகுதல் சிறுநீர் பெருக்குதல் செரிமான வேகத்தை மிகுத்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது கடுகை புடித்து ஒரு கிராம் அளவுக்கு ஆல்கஹால் அல்லது பாயாசத்தில் கலந்து காலை மாலை கொடுத்து வர உடலின் அக உறுப்புகளில் உள்ள மாசுக்களை அகற்றும் சிறுநீரக கற்களை அகற்றும் வாத வழிகளை நீக்கும் நினைவாற்றல் உடல் பலம் செரிமான ஆற்றல் ஆகியவற்றை மிகுக்கும் கடுகு உடன் சம அளவு முருங்கை பட்டையை சேர்த்து அரைத்து பற்று போட கை கால் குடைச்சல் மூட்டு வலி நரம்பு பிடிப்பு ஆகியவை குணமாகும் பற்றினால் எரிச்சல் உண்டானால் உடனே பற்றை அகற்றி கழுவி விடவும் 10 கிராம் கடுகை பொடித்து கால் லிட்டர் நீரில் ஊறவைத்து வடிகட்டி கொடுக்க விக்கல் நீங்கும் கடுகு எண்ணெயுடன் ஐந்து மடங்கு விளக்கெண்ணெய் சிறிது கற்பூரம் கலந்து தடவி வர மூட்டு வலி மார்பு வலி நீங்கும்.

No comments:

Post a Comment