Tuesday, April 23, 2024

சித்ரா பௌர்ணமி (23/04/2024 - செவ்வாய்க்கிழமை)

சித்தர்கள் போற்றும் சித்ரா பௌர்ணமி*



*சித்து - அறிவு*


சித்தாகிய அறிவு இறைவனை நோக்கி பயனிக்ககூடிய காலம் என்பதால் *சித்து+இறை=சித்திரை* ஆனது என்பர்.


அந்த சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி சித்ரா பௌர்ணமியாகவும் வருடத்தில் முதல் பௌர்ணமி என்றும் சங்க காலம் தொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. (ஒவ்வொறு மாதத்தில் வரும் பௌர்ணமியை வைத்தே அம்மாதத்தின் பெயரும் திருவிழாக்களும் கொண்டாட படுவது குறிப்பிடதக்கது)


அறிவை தன்னுள் வைத்திருப்பதே மனம். ஆகவே அறிவின் இருப்பிடம் மனம். அந்த *மனதை கட்டுப்டுத்துபவர் மனோகாரகனான சந்திரன்.*

சூரியனுக்கு வாகனம் எப்படி 7 குதிரை பூட்டிய ரதம் இருக்கிறதோ. அதேபோன்று *சந்திரனுக்கு 2 மான் பூட்டிய வாகனம் உண்டு*

மான் நம் மனதை குறிக்கும். மான் எப்படி ஓர் இடத்தில் நிற்காது கண நேரத்தில் அங்கும் இங்குமென தாவுகிறதோ, அதே போன்று தான் மனமும் ஓர் இடத்தில் நிலை இல்லாமல் அலைந்துகொண்டு இருக்கும். அந்த மனமாகிய மானை தன் வசம் கட்டு படுத்தி வைப்பரே மனோகாரகனான சந்திரன்.


(ஒருவரின் கற்பனை சக்தியை அதிகரிப்பவர். எண்ணம், செயல், சொல், புத்தியை சரியாக கொண்டு செல்பவர் சந்திரனே. ஜாதகத்தில் சந்திரன் சரியாக இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும்).


ஆதலாலல் அறிவாகிய சித்து இறைவனை அடைய காரணமாக இருப்பவர் சந்திரன். அந்த சந்திரன் பூரணமாக (முழுமதி - பௌர்ணமி) இருக்கும் சமயத்தில் இறைவழிபாடு செய்தால் இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.


*சித்தர்கள் போற்றும் சித்ரா பௌர்ணமி*


இந்த பௌர்ணமி நாட்களில் (குறிப்பாக சித்திரை பௌர்ணமி) சித்தர்கள் இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.


*சித்தர்கள் பூஜிக்கும் சித்தர்களின் தாய்:*


சித்தர்கள் தங்களின் தாயாக வணக்கப்படுபவள் *வாலை என்கிற 9 வயதினுடைய சிறுமி இவளே பாலாதிரிபுரசுந்தரி*


சித்தர்கள் வாலை பற்றி என்ன கூறுகிறார்கள்?


கருவூரார் தனது கருவூரார் பூஜாவிதி என்னும் நூலில் வாலை தெய்வம் பற்றி இப்படி சொல்கிறார்....


பத்து வயதாகும் வாலையவள்

மர்மம் வைத்து பூசை பண்ண

மதியுனக்கு வேணுமடா அதிகமாக

கனரிது சிறு பிள்ளை கன்னி கன்னி

ஆமிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர்

அறிந்ததுமே மன அடக்கம் வந்து சேரும்

நாட்டிலே சொன்னாயானால் நகைப்பர்....


வாலை தெய்வம் மந்திரம் ஓம் ஐயும் கிலியும் சௌவும் சௌவும் கிலியும் 

ஐயும் வா வா வாலை பரமேஸ்வரி பஞ்சாட்சரி ஆனந்தரூபி நமக.


வாலைதெய்வம் என்று வாலைபரமேஸ்வரி என்ற இவள் சித்தர்களுக்கு முழு முதற்கடவுள்.இவளைக் கொண்டே அறுபத்து நாலு கலைகளையும் சித்தர்கள் அறிந்தனர். *இவளை திரிபுரை என்றும் , வாலை என்றும் ,பத்து வயதாளென்றும், பதினாறு வயதாள் என்றும், கன்னியென்றும்,பச்சைநிறத்தாளென்றும் ,சக்கரத்தாளென்றும் , வாமியென்றும் ,தேவியென்றும், மாயையென்றும்,புவனையென்றும்,அன்னையென்றும், ஆவுடையாளென்றும், தாரையென்றும் , அமுதக் கலசமென்றும், தாயென்றும் உண்ணாமுலையென்றும், கோவுடையாளென்றும், அண்ட பேரண்டங்களைக் கட்டிக் காக்கின்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்றும் அழைப்பார்கள்.*


*வாலையின் தாய்:*


வாலை என்றும் பாலா என்றும் சொல்லக்கூடிய *இந்த 9 வயது சிறுமியின் தாய் அன்னை ஸ்ரீ லலிதாமஹா திரிபுரசுந்தரி என்கிற காமாக்ஷி ஆவாள்*

பண்டாசூர வதத்தின் போது அன்னை லலிதையின் ஒவ்வொறு அங்கத்தில் இருந்து ஒவ்வொறு தேவதைகள் தோன்றினர் அதில் அன்னையின் ஆனந்தத்தில் தோன்றியவர் கணபதி, அகங்காரத்தில் தோன்றியவள் வாராகி, அறிவிலிருந்து தோன்றியவள் மாதங்கி என்று குறிப்பிட்டுக் கொண்டே போகலாம். அதே போன்று *அன்னை லலிதா பரமேஸ்வரி தானே விரும்பி எடுத்து கொண்ட வடிவமே அன்னை பாலாதிரிபுரசுந்தரி*

பாலா வேறு லலிதை வேறு அல்ல. *பாலா வேறு காமாக்ஷி வேறு அல்ல.*


இப்படி சித்தர்களாலும், ரிஷிகளாலும் பூஜிக்க கூடிய பாலாதிரிபுரசுந்தரியான அன்னை இராஜராஜேஸ்வரியை, லலிதாமகா திரிபுரசுந்தரியை, காமாக்ஷியை சித்திரை பௌர்ணமி முழு நிலவொளியில் பூஜித்து, முழுநிலவில் அன்னையின் முகத்தை தியானித்து சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று

இம்மைக்கு வேண்டிய பொருளும் மறுமைக்கு வேண்டிய வீடுபேறும் பெற்று சிவசக்தி சொரூபமாய் வாழ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment